முக்கிய அம்சங்கள் :
கோதுமை-விதைப்பு பருவத்திற்கு (wheat-sowing season) முன்னதாக, பலர் மண்ணின் வளம் மற்றும் பஞ்சாபின் விவசாய உற்பத்திதிறனில் வெள்ளத்தின் (Floods) தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புவதற்கு வழிவகுத்தது.
வெள்ளம் வெவ்வேறு வழிகளில் மண்ணை பாதிக்கிறது? இந்தக் கேள்விக்கு எளிய பதில் இல்லை. அதாவது வெள்ளத்தின் வகை, அது எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மண்ணின் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து சரியான பாதிப்புகள் மாறுபடும். இருப்பினும், இரண்டு முக்கிய வகையான தாக்கங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.
அரிப்பு (first is erosion) :
மண் அரிப்பு முதல் காரணமாக உள்ளது. விவசாயிகளின் முயற்சி மூலம் மேம்படுத்திய வளமான மேற்பரப்பு மண்ணை வெள்ள நீர் (Floodwaters) அடித்துச் செல்கிறது. இந்த மேற்பரப்பு மண் முக்கியமானது. ஏனெனில், இதில் பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் கார்பன் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பயிர்கள் வளர உதவுகிறது.
வண்டல் படிவு (depositing of silt) :
இரண்டாவது காரணம் வண்டல் படிவு ஆகும். வெள்ளமானது, பஞ்சாபின் பல பகுதிகளில், குறிப்பாக ஆற்றங்கரைக்கு அருகில் அல்லது ஆற்றின் படுகைகளில் உள்ள மேற்பரப்பு மண்ணை மூடியிருக்கும் வண்டல் படிவுகளை கொண்டு வருகிறது.
இருப்பினும், அனைத்து வண்டல் மண்ணும் மோசமானவை அல்ல. வெள்ளம் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் வளமான வண்டல் மண்ணையும் கொண்டு வரக்கூடும். கடந்த காலங்களில், ஆறுகளுக்கு அருகில் நிலங்களைக் கொண்ட விவசாயிகள் இந்த இயற்கை நிரப்புதலால் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டும் இதுவே நடக்கிறது.
இருப்பினும், நீண்ட காலம் நீர் தேங்குவது மண்ணின் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும், மண்ணின் காற்றோட்டம் மற்றும் ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கலாம். இந்த காரணிகள் ஒன்றாக உற்பத்தித்திறனைக் குறைக்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களிலிருந்து லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் (PAU) சேகரித்த மண் மாதிரிகள் சில பகுதிகளில், மண் சேதப்படுத்தப்பட்டதாக முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நிலை இன்னும் சமாளிக்கக்கூடியது.
நீர் தேங்குவதால் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் வெளியேறி மண்ணின் pH அளவில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்பரப்பு மண் அரிக்கப்பட்ட பகுதிகளில், ஊட்டச்சத்தின் அளவுகள் குறைந்துள்ளன. ஆனால் ஆழமான உழவு, மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களைச் சேர்ப்பது மற்றும் கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, முறையான மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம்மண் வளத்தை பராமரிக்க முடியும் என்பதை சோதனைகள் காட்டுகின்றன. பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் அடுத்த பருவத்திற்கு உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தனித்தனியாக மண் பரிசோதனை செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கின்றன.
மீட்பு உத்தி மண்ணின் வகை மற்றும் வண்டல் மண் ஆழத்தைப் பொறுத்தது. வண்டல் மண் இரண்டு முதல் மூன்று அங்குல ஆழத்தில் இருந்தால், சாதாரண உழவு அதை மண்ணுடன் கலக்கலாம். இலகுவான மண்ணில், ஒன்பது அங்குலங்கள் வரை ஆழமான வண்டல் அடுக்குகளை ஆழமான உளி மூலம் (deep chiselling) கையாளப்படலாம்.
மண் அமைப்பை மீட்டெடுக்க உரம் அல்லது கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதும் அறிவுறுத்தப்படுகிறது. மிக முக்கியமாக, ஆரம்பகால தலையீடு விவசாயிகள் தங்கள் வயல்களை ராபி பயிர் சுழற்சிக்கான நேரத்தில் தயார் செய்ய அனுமதிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வெள்ளத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட களைகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், சரியான நேரத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பஞ்சாப் அரசு, விவசாயிகள் தங்கள் நிலத்தில் குவிக்கப்பட்ட மணல் அல்லது வண்டல் மண்ணை “ வயலின் உரிமையாளருக்குச் சொந்தமானது” (Jisda Khet Usdi Ret’) என்ற கொள்கையின் கீழ் விற்கலாம் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக, மணல் படிவு அதிக அளவில் சாகுபடிக்கு இடையூறாக இருந்தால் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வண்டல் படிவுகள் அதிகமாக இல்லாத பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர் சுழற்சிகளை திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கலாம் என்று விவசாய நிபுணர்கள் நம்புகின்றனர். அதிக வண்டல் படிவுகள் உள்ள பகுதிகளில் கூட, விரைவான நடவடிக்கை விவசாயிகள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்ற உதவும்.
உங்களுக்குத் தெரியுமா? :
மண்ணின் வகைப்பாடு (Soil Classification) என்பது ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட (வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல்) மண்ணை புவியியல் ரீதியாகக் குறிப்பிடப்பட்டு மற்றும் வரைபடமாக்கக்கூடிய அலகுகளாக வகைப்படுத்துவதைப் பற்றியது. மண் மிகவும் சிக்கலான இயற்கை வளமாகும். மண் என்பது காற்று மற்றும் நீரை விட மிகவும் சிக்கலான இயற்கை வளமாகும்.
அசோக் குலாட்டி குறிப்பிடுவதாவது, மண் சேதமடைந்துள்ளதாகவும் கரிம கார்பன் இல்லாததாகவும் சுட்டிக்காட்டுகிறார். உலக உணவுப் பரிசு பெற்ற (World Food Laureate) ரத்தன் லால் கருத்துப்படி மண்ணின் கரிம கார்பனின் (soil organic carbon (SOC)) சிறந்த அளவு 1.5 முதல் 2 சதவீதம் வரை உள்ளது. இருப்பினும், இந்தியாவில், 60 சதவீதத்திற்கும் அதிகமான மண்ணில் 0.5 சதவீதத்திற்கும் குறைவான மண்ணின் கரிம கார்பன் உள்ளது.