குழந்தைகளுக்கு வலுவான அடிப்படைத் திறன்கள் இல்லையென்றால், பலர் இடைநிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறி, வாழ்நாள் வருமானம் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும்.
2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற திட்டத்தை நோக்கி இந்தியா இலக்காகக் கொண்டுள்ளதால், இந்த மாற்றத்திற்கான அடித்தளம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. மேலும், உள்ளடக்கிய வளர்ச்சியின் மையத்தில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (Foundational Literacy and Numeracy (FLN)) உள்ளது. அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலானது (FLN) கல்வி மற்றும் அடிப்படை எண்கணிதம் போன்ற கல்வித் திறன்கள் 3-ம் வகுப்பிற்குள் உள்ளடக்கியது. இது வாழ்நாள் முழுவதும் கற்றல், பொருளாதார பங்கேற்பு மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது. ஆரம்பகால குழந்தைப் பருவம், குறிப்பாக 3-6 வயது, கல்வியறிவு மற்றும் எதிர்கால கற்றல் திறனை வளர்க்கும் அடிப்படைத் திறன்களை உருவாக்குவதற்கு முக்கியமானது.
அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலின் (FLN) முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசாங்கம், இந்தியாவில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலின் (FLN) சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை எடுத்துரைத்து, புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசிப்பதில் நிபுணத்துவத்திற்கான தேசிய முன்முயற்சியை (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN Bharat)) துவக்கியது. 2026-27 நிதியாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுடன், ஒவ்வொரு குழந்தையும் 3-ம் வகுப்பிற்குள் அடிப்படை திறன்களைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு லட்சிய இலக்காக இருந்தாலும், இந்தியா தனது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அதை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் நாடு தழுவிய அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலை (FLN) செயல்படுத்துவது சிக்கலானது. இதில் அடிப்படைக் கற்றலைக் கையாள்வது அவசியம். ஆனால், நாட்டில் உள்ள மொழியியல் சிக்கல்கள் காரணமாக பிராந்தியங்களுக்கு இடையே முன்னேற்றம் மாறுபடும்.
பன்மொழி சவால்
இந்தியாவின் பன்மொழி பன்முகத்தன்மை, ஆரம்பக் கல்வியில் சவால்களை உருவாக்குகிறது. குறிப்பாக, ஆரம்ப ஆண்டுகளில் குழந்தைகளின் மொழியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உள்ளடக்கும். இது கல்வியறிவுக்காக ஒரு மொழியைப் பயன்படுத்துவது பல்வேறு பின்னணிகளுக்கு இடமளிக்கும் சிக்கலான தன்மையை வலியுறுத்துகிறது. மொழியியல் மற்றும் உளவியல் வளர்ச்சிக்கு, நம்பிக்கை மற்றும் அடையாளத்தை ஊக்குவிப்பதற்கு, குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழி அல்லது பழக்கமான மொழியில் கற்பிப்பது அவசியம். இருப்பினும், பன்மொழிக் கல்வியை அளவிடுவதற்கு பொருத்தமான பொருட்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் நிதியுதவி போன்றவை தேவைப்படுகிறது. இது திட்டத்தை செயல்படுத்துவதை மிகவும் சிக்கலாக்குகிறது. இவை இல்லாமல், பள்ளிகள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் மொழியை, பொதுவாக ஆங்கிலத்தை, முக்கிய கற்பித்தல் மொழியாக நம்பியுள்ளன. இது தற்செயலாக மற்ற மொழிகளை ஓரங்கட்டி, சமமற்ற கற்றல் விளைவுகளை ஏற்படுத்தி, சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்.
2021-ம் ஆண்டில் போட்டித்திறனுக்கான நிறுவனம் மற்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) ஆகியவற்றின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவு அறிக்கை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கூட்டமைப்பிற்கும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலையும் (FLN) முதலீடு செய்வது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.39 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று செலவு-பயன் பகுப்பாய்வு அமைப்பு பரிந்துரைத்தது. ஒரு வலுவான அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) திறன்கள் இல்லாமல், பல குழந்தைகள் இடைநிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே கைவிடப்படலாம், வாழ்நாள் வருவாய் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற பலன்களை இழக்க நேரிடும். அடிப்படைத் திறன்களை மேம்படுத்துவது இந்தியாவின் கல்வி முறைக்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.
இராஜதந்திர ரீதியில் அணுகுமுறை
இந்தியாவில், அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலின் (Foundational Literacy and Numeracy (FLN)) முழுத் திறனையும் பெறுவதற்கு, அது ஒரு இராஜதந்திர ரீதியில் அணுகுமுறையை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். முதலாவதாக, அதிக இலக்கு கொண்ட தலையீடுகளை ஆதரிக்க அலகு-அளவிலான தரவை (unit-level data) அறிமுகப்படுத்துவதன் மூலம், தேசிய சாதனை கணக்கெடுப்பு (National Achievement Survey) மற்றும் அடிப்படை கல்வியறிவு ஆய்வு (Foundational Literacy Study) போன்ற நாடு தழுவிய மதிப்பீடுகளின் பயன்பாட்டை இந்தியா மேம்படுத்த முடியும். அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் தற்போதைய மதிப்பீடுகள் பாலின வேறுபாடுகளின் அடிப்படையிலான கட்டமைப்பு மற்றும் சமூக சிக்கல்களைக் கைப்பற்றவில்லை.
பல்வேறு சமூகப் பொருளாதார சூழல்களில் செயல்திறன் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள, சமமான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கு முக்கியமானது. அடிப்படை கல்வியறிவு ஆய்வு (FLS) மற்றும் தேசிய சாதனை கணக்கெடுப்பில் (NAS) அலகு-அளவிலான தரவை அறிமுகப்படுத்துவது முக்கியமானது. பங்குதாரர்கள் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும், சமூக மற்றும் பாலின குழுக்களில் சமமான கல்விக்கான உத்திகளை வடிவமைக்கவும் தற்போதைய ஆய்வுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு விரிவான தரவுத்தளமானது கொள்கைகளை தெரிவிக்கவும், இந்தியா முழுவதும் கற்றல் விளைவுகளை அதிகரிக்கவும் முடியும். மேலும் தரவுகளுக்கு அப்பால், ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) தலையீடானது கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கருத்துகளை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்பான பிரிவுகள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை அரசாங்கம் வளர்க்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட அறிவு மையங்களை (centralized knowledge hubs) உருவாக்குவது இந்த செயல்முறையை மிகவும் திறமையானதாக்கும்.
தொழில்முறை மேம்பாடு (Professional development)
அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) சுற்றுச்சூழல் அமைப்பின் மற்றொரு முக்கியமான பகுதியாக ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு (Teacher professional development) உள்ளது. தொடர்ச்சியான கலப்பின பயிற்சி திட்டங்களானது அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியலில் (FLN) குறிப்பாக பன்மொழி அமைப்புகளில் கல்வியியல் நிபுணத்துவத்தை உருவாக்க முடியும். தொழில்நுட்ப ரீதியாக அதிகாரம் பெற்ற அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) திட்டங்கள் தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழி கற்பவர்களுக்கு ஆதரவாக, மொழியியல் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட வேண்டும். இதை செயல்படுத்த, பல்வேறு சமூகங்களில் இருந்து மொழிசார் ஆசிரியர்களை பணியமர்த்துவது இன்றியமையாதது. ஏனெனில், குழந்தையின் முதல் மொழியில் பெற்ற அடிப்படை திறன்கள் கூடுதல் மொழிகளுக்கு மாற்றப்படலாம் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த உதவும். அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், குழந்தை நட்பு வட்டாரங்களை மேம்படுத்தவும், இதனால், பள்ளிக்குத் தயார்நிலையை குழந்தைகள் வருவதை மேம்படுத்துவதற்கு வழக்கமான கலந்துரையாடல் அமர்வுகளை (interactive sessions) நடத்தவும் உதவ வேண்டும்.
அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) என்பது கற்றல் மற்றும் வளர்ச்சியின் அடித்தளமாகும். எனவே, 2026-27 ஆண்டுக்குள் புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசிப்பதில் தேர்ச்சிக்கான தேசிய முயற்சியின் (NIPUN Bharat) லட்சிய இலக்கை அடைவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும். ஆனால் அடித்தளமே சீரற்றதாக இருக்கும்போது என்ன நடக்கும்? அதை எப்படி இணக்கமாக்க முடியும்? மேலும், உள்ளடக்கிய மற்றும் சமமான அடிப்படைக் கற்றலுக்கான உத்தியின் அணுகுமுறையின் மூலம் முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் பதில் உள்ளது. வலுவான அடித்தளத்தை உருவாக்க, இந்தியாவில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) விளைவுகளை பாதிக்கும் உள்ளடக்கத்தில் உள்ள இடைவெளிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதிகமான தரவுகளை விட, சிறந்த தரவு எவ்வாறு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN) நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் நாம் ஆழமாக ஆராய வேண்டும்.
எழுத்தாளர் போட்டித்திறன் (Institute for Competitiveness) நிறுவனத்தின் தலைவர் ஆவார்.