இந்தியாவில் வறுமை மதிப்பீடு - இந்தியாவில் வறுமை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— ஜூன் 2014-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்த குழு, நகர்ப்புறங்களுக்கு மாதாந்திர தனிநபர் செலவினத்தின் அடிப்படையில் தேசிய வறுமைக் கோட்டை  (national poverty line) ரூ.1,407 ஆகவும், கிராமப்புறங்களுக்கு ரூ.972 ஆகவும் மதிப்பிட்டபோது பரபரப்பை ஏற்படுத்தியது.


— இதன் பொருள், நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.47-க்கும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32-க்கும் அதிகமாகச் செலவிடும் மக்கள் அனைவரும் 'ஏழைகள்' இல்லை என்பதாகும். இந்த வரம்புகள் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகையில் 29.5 சதவீதமாகக் குறைக்க வழிவகுத்தன. அப்போதிருந்து, அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் குறைந்தபட்சம் ஒரு புதிய வறுமைக் கோடு உருவாக்கப்படவில்லை.


— கடந்த வாரம், ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள், 2022-23ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பை (Household Consumption Expenditure Survey (HCES)) பயன்படுத்தி, இந்தியாவின் 20 முக்கிய மாநிலங்களுக்கான ரங்கராஜன் வறுமைக் கோட்டின் வரம்பை ‘புதுப்பித்து’ வெளியிட்டுள்ளனர்.


—2011-12 மற்றும் 2022-23-ஆம் ஆண்டிற்கு இடையில் ஒடிசா மற்றும் பீகார் வறுமை அளவுகளில் மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. ரங்கராஜன் வறுமைக் கோட்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பிற்குக் கீழே உள்ள மக்கள்தொகை விகிதம் 40 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.


— மறுபுறம், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள்தொகை சதவீதத்தில் ஏற்பட்ட சரிவு கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மிகவும் குறைவாக இருந்தது.


— ஒட்டுமொத்தமாக, 2022-23-ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை இமாச்சலப் பிரதேசத்தில் மிகக் குறைவாகவும் (0.4 சதவீதம்) சத்தீஸ்கரில் அதிகமாகவும் (25.1 சதவீதம்) இருந்தது. இதற்கிடையில், நகர்ப்புற வறுமை, தமிழ்நாட்டில் குறைந்த அளவில் (1.9 சதவீதம்) இருந்தது. அதேசமயம், சத்தீஸ்கர் மீண்டும் அதிக நகர்ப்புற வறுமையைக் (13.3 சதவீதம்) கொண்ட மாநிலமாக இருந்தது.


— ரங்கராஜன் குழு ஆய்வில் நிர்ணயித்த இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை வரம்புகளை ரிசர்வ் வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் புதுப்பிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


— மற்றவர்களைப் போல் இல்லாமல், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் ஆய்வு நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) பணவீக்கத்தைப் பயன்படுத்தி பழைய வறுமைக் கோடுகளை மாற்றவில்லை. ஏனெனில், அது துல்லியமாக இல்லை. நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் வறுமைக் கோடுகளைக் கணக்கிடப் (poverty line basket (PLB)) பயன்படுத்தப்படும் காரணிகள் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். எடுத்துக்காட்டாக, உணவு கிராமப்புற வறுமைக் கோட்டில் 57% ஆகும். ஆனால், கிராமப்புற நகர்ப்புற நுகர்வோர் விலைக் குறியீட்டில் 54% மட்டுமே; நகரங்களில், உணவு வறுமைக் கோட்டில் 47% ஆகும். ஆனால், நகர்ப்புற நுகர்வோர் விலைக் குறியீட்டில் இது 36% மட்டுமே.


— வழக்கமான விலைக் குறியீட்டை (CPI) பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரங்கராஜன் வறுமைக் கோட்டில் உள்ள பொருட்களின் எடையுடன் பொருந்தக்கூடிய ஒரு புதிய விலைக் குறியீட்டை உருவாக்கினர்.


— இந்தியாவில் வறுமையின் அளவு பல ஆண்டுகளாக தீவிர விவாதத்திற்குரிய விவகாரமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆராய்ச்சி 2023-24 வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) தரவைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் வறுமை 4.86 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.09 சதவீதமாகவும் இருப்பதாக மதிப்பிட்டது. இந்த மதிப்பீடுகள் கிராமப்புறங்களுக்கு ரூ.1,632 மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.1,944 என்ற பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட 2023-24 வறுமைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.


— அரசாங்கத்தைப் பொறுத்தவரை, வறுமைக் கோடுகள் கடந்த காலத்தின் ஒரு விவகாரமாகத் தெரிகிறது. இப்போது, முக்கியமானது பல பரிமாண வறுமை, இது பணம் மற்றும் நுகர்வுக்கு அப்பாற்பட்டது. — — உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீட்டின் (Multidimensional Poverty Index (MPI) அடிப்படையில், இந்திய MPI வறுமையை மூன்று அம்சங்களில் பார்க்கிறது: அவை சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகும். இவை 12 குறிகாட்டிகளால் குறிப்பிடப்படுகின்றன: அவை ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் இளம் பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், வீட்டுவசதி, மின்சாரம், சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்கு போன்றவையாகும்.


— உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீடு வறுமையை அளவிடும்போது தாய்வழி சுகாதாரம் மற்றும் வங்கிக் கணக்குகளை கருத்தில் கொள்வதில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


- வறுமை (Poverty) என்பதை ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்கு அடிப்படை குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை வாங்குவதற்கு நிதி ஆதாரங்கள் இல்லாத ஒரு நிலை என்று வரையறுக்கலாம்.


— பொருளாதார வல்லுநர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ‘வறுமைக் கோடு’ (poverty line) என்று அழைக்கப்படும் ஒரு வரம்பிலிருந்து நுகர்வு செலவினத்தில் ஏற்படும் பற்றாக்குறையாக ‘முழுமையான’ வறுமையை மதிப்பிடுகின்றனர்.


— வறுமைக் கோடு என்பது ஒரு நபர் அல்லது குடும்பம் வறுமையில் உள்ளாரா இல்லையா என்று வருமானம் அல்லது செலவுகளின் அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு வரம்பு ஆகும். இந்த வரம்பு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய குறைந்தபட்ச வருமான நிலையை குறிக்கிறது. நாடுகளுக்கு நாடு ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து வறுமைக் கோட்டின் அளவு மாறுபடும்.



Original article:

Share: