இயற்கைப் பேரிடர்களுக்கு சிறப்பாக தயாராக இருக்க இந்தியா வானிலை முன்னறிவிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தைவிட 8% அதிக பருவமழை பெய்துள்ளது, இது ஒரு நல்ல செய்தியாகத் தெரிகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் அதிக பயிர்களை பயிரிட்டனர். செப்டம்பர் நடுப்பகுதியில், காரீப் பயிர்களுக்கான மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, சுமார் 1,110 லட்சம் ஹெக்டேரை எட்டியது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 430 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும்போது, நெல் சாகுபடி 8.45 லட்சம் ஹெக்டேருக்கு மேல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு 438 லட்சம் ஹெக்டேருக்கு மேல் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள், கரடுமுரடான தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களும் மற்ற பயிர்களைப் போலவே அதிகரித்துள்ளன. செப்டம்பர் மாத இறுதியில், இந்தியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் 163 பில்லியன் கன மீட்டர் (billion cubic metres (BCM)) நீர் இருந்தது.
இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்த 157.8 பில்லியன் கன மீட்டரைவிட அதிகமான அளவாகும். 1 BCM என்பது ட்ரில்லியன் லிட்டர்கள் ஆகும். இருப்பினும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆறுகள் நிரம்பி வழிந்தன, பகுதிகளைத் துண்டித்து, பஞ்சாபில் உள்ள முழு கிராமங்களையும் விவசாய நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்தன. இது புதிதல்ல என்றாலும், இந்த ஆண்டு நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் பல நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டன. நாடு முழுவதும் மண் அரிப்பு (Land erosion) மற்றும் வண்டல் படிவு (siltation) பரவலாக இருந்ததால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது.
வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் தென் தீபகற்பம் போன்ற பகுதிகளில் பருவகால மழைப்பொழிவு அவற்றின் பருவகால சராசரியைவிட 27%, 15% மற்றும் 10% அதிகமாக இருந்தது. பல சூழல்களில், மாநில அதிகாரிகள் கனமழை பற்றி தெரிவித்தபோது, வானிலை அறிவியல் சொற்களில் மிகவும் குறிப்பிட்ட வரையறையாக இருக்கும் 'மேக வெடிப்பு' (cloudburst) பற்றிய செய்திகள் இருந்தன. தமிழ்நாட்டில் ஒரே ஒரு நிகழ்வில் மட்டுமே இது உண்மையான நிரூபிக்கப்பட்டது.
தொழில்நுட்ப சொற்கள் சிறிய விவரங்களாகத் தோன்றினாலும், மக்கள் இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கின்றன. ஒரு 'மேக வெடிப்பு' என்பது மிகவும் அரிதான மற்றும் கணிக்க முடியாத நிகழ்வாகத் தோன்றுகிறது. அதன் தாக்கத்தை மட்டுமே தாங்க வேண்டியிருக்கும். மறுபுறம், 'சாதாரண' மழை போன்ற சொற்கள்கூட — அவற்றின் காணக்கூடிய தாக்கம் அடிக்கடி சேதத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் — ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒன்று (fait accompli) என்ற எண்ணத்தை வெளிப்படுத்த முனைகின்றன. ஏப்ரல் மாதம் முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மழைப்பொழிவு 'இயல்பைவிட அதிகமாக' (above normal) இருக்கும் என்று கூறி வருகிறது - இது வழக்கமான 87 செ.மீ.யைவிட 4% அதிகம்.
இது நிகழும்போது, மக்கள் வானிலை முன்னறிவிப்பைப் பாராட்டுகிறார்கள். ஆனால், பிரச்சினைகளுக்குத் தயாராவதில் போதுமான கவனம் செலுத்துவதில்லை. வறட்சி எச்சரிக்கைகள் அனைவரையும் தீவிரமாகத் தயார்படுத்தும் அதே வேளையில், கனமழை பெரும்பாலும் இயற்கை பரிசாகவே (natural munificence) பார்க்கப்படுகிறது. அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதில்லை.
நிறுவனம் எப்போதும் உளவியல் ரீதியாக வறட்சி எச்சரிக்கையை ‘போர் அடிப்படையில்’ தயாராக வேண்டியதாகக் கருதப்பட்டாலும், அதிகப்படியான மழை இயற்கையின் பெருந்தன்மையாகக் கருதப்படுகிறது. முன்கணிப்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அறிவு இருக்கையில், இந்த அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது. இதைச் செய்யத் தவறுவது, அரசாங்கம் பொதுமக்களுக்கு எதிரான பொறுப்பைத் துறப்பதாகக் கருதப்பட வேண்டும்.