பல்லுயிர்ப் பெருக்க மையங்கள் என்பவை யாவை? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இதற்கு முன்பு சட்டவிரோத சுரங்கப் பணிகளை மேற்கொண்டுள்ள இந்த வனப்பகுதியின்மீது கவனத்தை ஈர்த்துள்ளது. தென்மேற்கு ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இது ஒரு பல்லுயிர் பெருக்க மையமாகும்.


— தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal’s) கிழக்கு மண்டல அமர்வின் ஜூலை 2022 தீர்ப்புக்கு இணங்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 314 சதுர கி.மீ பரப்பளவை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட்ட மனுவில், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாரந்தா/சசங்கடா சரணாலயத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


— 1968ஆம் ஆண்டு பீகார் பிரிக்கப்படாதபோது, ​​இந்தப் பெரிய வனப்பகுதி ‘விலங்குப் பாதுகாப்பு சரணாலயமாக’ (game sanctuary) மாற்றப்பட்டதாக மனுதாரர் கூறினார். 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act) கீழ், 1972ஆம் ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட எந்தவொரு சரணாலயம் அல்லது தேசிய பூங்காவும் தானாகவே சரணாலயம் அல்லது தேசிய பூங்காவாகக் கருதப்படும் என்று அவர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவித்தனர்.


- சரண்டா வனப் பிரிவு அதிகாரப்பூர்வமாக விலங்குப் பாதுகாப்பு சரணாலயமாக இருந்ததற்கான ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டுபிடிக்கவில்லை இருந்தபோதிலும், அந்தப் பகுதியை சரணாலயமாக அறிவிக்க வேண்டுமா என்பதை பரிசீலிக்குமாறு ஜார்க்கண்ட் மாநில அரசிற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டது.


- நவம்பர் 20, 2024 அன்று உச்சநீதிமன்ற அமர்வு, தேசிய பசுமை  தீர்ப்பாயத்தின் உத்தரவுகளைப் பதிவு செய்து, சரணாலய அறிவிப்பு குறித்து நல்ல  பதிலை வெளியிடுமாறு ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவிட்டது.


- ஹேமந்த் சோரன் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் சரண்டாவை சரணாலயமாக்குவதை ஆதரிப்பதாகவும், பழங்குடியினர் மற்றும் வனவாசிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. நாட்டின் இரும்புத் தாது இருப்பில் 26% சரண்டா பகுதியிலேயே உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


— இதை ஒரு சரணாலயமாக அறிவிப்பது, உயிர்வாழ்வதற்கான செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், 1996ஆம் ஆண்டு வன உரிமைகள் மற்றும் பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், ஆகியவற்றின் விதிகளை மீறுவதாக வாதிடப்பட்டது.


— சுரங்கம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் சரந்தாவின் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு அது ஏற்படுத்தும் அச்சுறுத்தலும் புதிதல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance (UPA)) அரசாங்கத்தின் கீழ், நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான விசாரணை ஆணையம் ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்கம் குறித்து விசாரித்தது.


— ஷா ஆணையம் (Shah Commission) தோராயமாக 14,403 கோடி மதிப்புள்ள இரும்புத் தாது மற்றும் ரூ.138 கோடி மாங்கனீசு சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டதை வெளி உலகத்திற்க்கு காட்டியது. நீதிபதி ஷா ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சரந்தாவில் இரும்புச் சுரங்கத்திற்கான நிலையான சுரங்கத் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்தது.


ஷா ஆணையம்  என்றால் என்ன?


இந்தியாவில் 1975-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரையிலான  அவசரநிலை காலகட்டத்தில் அரசியல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை செய்யும் குழுவாக இருந்தது. இந்த ஷா ஆணையம் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து அது தொடர்பாக விசாரணை செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— ‘700 மலைகள்’  என்று பொருள்படும் சாரந்தா, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 856 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட ஒரு வனப்பகுதியாகும். இதில், 816 சதுர கி.மீ வரை பாதுகாக்கப்பட்ட வனமாகும். சரண்டா நிலப்பரப்பின் உயிரியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதில், இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute of India) இப்பகுதி வரலாற்று ரீதியாக அதன் உயர்தர உயிரினப் பன்முகத்தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளது.


— இந்த வனம் யானைகள், நான்கு கொம்புகள் கொண்ட மான் மற்றும் சோம்பல் கரடிகளுக்கு தாயகமாக உள்ளது. இது வாழ்விட இழப்பை எதிர்கொண்டு சிறிய பகுதிகளாகி வருகிறது. ஆனால், அருகிலுள்ள காடுகளுடன் இணைக்கும் மூன்று யானை வழித்தடங்கள் இந்த வனத்தில் உள்ளன.


— இந்திய வனச் சட்டம், 1927-ன் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட வனம் (reserve forest) என்பது மிக அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. இதில் வேட்டையாடுதல், மேய்ச்சல் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவை அனுமதிக்கப்படாவிட்டால் மற்ற நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மாநில அரசுகளால் பாதுகாக்கப்பட்ட வனங்கள், வாழ்விடங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கு முக்கிய இடங்களாக உள்ளன.


— 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், அதன் தாவரங்களை ஆதரிக்கவும், விலங்குகள், மலர்கள், புவியியல், நிலப்பரப்புகள் அல்லது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் போன்ற வனவிலங்குகள் அல்லது இயற்கைக்கு அந்தப் பகுதி முக்கியமானது என்று மாநில அரசு கருதினால், அந்த பகுதியை சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.



Original article:

Share: