2025-ம் ஆண்டுக்குள் காசநோயை (TB) ஒழிக்கும் இலக்கை இந்தியா ஏன் அடையவில்லை? -அனோனா தத்

 கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட காசநோய் பாதிப்புகளில் 80%-க்கும் அதிகமானவற்றைக் கண்டறிய முடிந்த எட்டு அதிக சுமை கொண்ட நாடுகளில் (high-burden countries) இந்தியாவும் ஒன்று. இருப்பினும், அதிக காசநோய் பாதிப்புகளைக் கொண்ட இந்தியா, உலகளாவிய இடைவெளியை நோக்கி பங்களிக்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


இந்தியாவில் காசநோயின் சுமை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், நாடு காசநோயை ஒழிப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்று புதன்கிழமை (நவம்பர் 12) வெளியிடப்பட்ட உலகளாவிய காசநோய் அறிக்கை 2025 தெரிவிக்கிறது. 2024-ம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 27.1 லட்சம் வழக்குகளையும், 3 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இது உலகளவில் காசநோய் நோயாளிகளுக்கு அதிக பங்களிப்பை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருப்பதாக பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு, காசநோய் உலகளவில் மிகவும் ஆபத்தான தொற்று நோயாக இருந்தது. ஏனெனில், இது 10.7 மில்லியன் மக்களைப் பாதித்து 1.23 மில்லியன் மக்கள் இறப்புக்குக்குக் காரணமாகிறது.


2024-ம் ஆண்டிற்கான விரிவான தரவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை வெளியிடாததால், 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய காசநோய் அறிக்கையின் ஆய்வுகள் மிக முக்கியமானவையாக உள்ளது. வழக்கமாக, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் உலக காசநோய் தினத்துடன் இணைந்து இந்திய காசநோய் அறிக்கையை வெளியிடுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு, அதற்கான அறிக்கை வெளியிடப்படவில்லை.


2024-ம் ஆண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 26.18 லட்சம் வழக்குகளைக் கண்டறிந்தது. இது மதிப்பிடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைக்கும், உண்மையில் கண்டறியப்பட்டவர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் குறைத்தது. சுமார் ஒரு லட்சம் "திட்ட பாதிப்புகள்" (mission cases) மட்டுமே இருந்தன. ஏனெனில், இந்த எண்ணிக்கை முக்கியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் கண்டறியப்படாத மக்கள் தொடர்ந்து தொற்றுநோயைப் பரப்புகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட காசநோய் நோயாளிகளில் 80%-க்கும் அதிகமானவர்களைக் கண்டறிந்த எட்டு அதிக சுமை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இருப்பினும், அதிக காசநோய் பாதிப்புகளைக் கொண்ட, உலகளாவிய இடைவெளிக்கு பங்களிக்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்த உலகளாவிய இடைவெளியில் இந்தோனேசியா 8.8% பங்கைக் கொண்டிருந்தது. இது மதிப்பிடப்பட்ட மற்றும் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கிடையேயான உலகளாவிய இடைவெளியில் 10% பங்கைக் கொண்டிருந்த இந்தோனேசியாவை விட பின்தங்கியிருந்தது.


காசநோய்க்கு முடிவு கட்டுதல் (END TB) இலக்குகளை அடைதல்


2018-ம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய இலக்கைவிட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் லட்சிய இலக்கை அறிவித்தார். இந்தியா மதிப்பிடப்பட்ட காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையில் நிலையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 100,000 பேருக்கு காசநோய் பாதிப்புகளின் விகிதமும் குறைந்து வருகிறது. இருப்பினும், 2025-ம் ஆண்டுக்குள் நோயை ஒழிக்கும் இலக்கிலிருந்து நாடு இன்னும் வெகுதொலைவில் உள்ளது.


ஒழிப்பு (elimination) என்பது ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு ஒருவருக்கும் குறைவான காசநோய் பாதிப்புகளைக் கொண்டிருப்பதை வரையறுக்கப்பட்டாலும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காசநோய்க்கு முடிவுகட்டும் உத்தி (End TB strategy) 2015-ம் ஆண்டின் அடிப்படை ஆண்டைவிட 2030-ம் ஆண்டுக்குள் புதிய காசநோய் பாதிப்புகளில் 80% குறைப்பையும், காசநோய் இறப்புகளில் 90% குறைப்பையும் இலக்காகக் கொண்டுள்ளது.


2015 மற்றும் 2024-க்கு இடையில் இந்தியா புதிய காசநோய்க்கான வழக்குகளில் 21% குறைப்பையும், இறப்புகளில் 28% குறைப்பையும் மட்டுமே அடைந்துள்ளதாக உலகளாவிய காசநோய் அறிக்கை 2025 காட்டுகிறது. இது 2025-ம் ஆண்டிற்கான காசநோய் ஒழிப்புக்கான இறுதிக்கட்ட இலக்கைவிட மிகக் குறைவு. இந்த இலக்கில் காசநோய் பாதிப்புகளில் 50% குறைப்பு மற்றும் காசநோய் இறப்புகளில் 75% குறைப்பு தேவை என்பதைக் கொண்டுள்ளது. உண்மையில், இதன் பொருள், 2024-ம் ஆண்டில் இந்தியா 2020-ம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய இறுதிக்கட்ட இலக்குகளில் பாதியை மட்டுமே அடைய முடிந்தது. 2015 உடன் ஒப்பிடும்போது காசநோய் வழக்குகளில் 20% மற்றும் இறப்புகளில் 35% குறைப்பதும் இந்த இலக்கில் அடங்கும்.


ஆனால் இந்தியா அடைந்துள்ள இந்தக் குறைப்பு உலக சராசரியைவிட அதிகமாக உள்ளது. உலகளவில், காசநோய் பாதிப்பு 2015 மற்றும் 2024-க்கு இடையில் 12% மட்டுமே குறைந்துள்ளது.


புது தில்லி எய்ம்ஸின் குழந்தை நுரையீரல் மருத்துவத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் எஸ்.கே. கப்ரா குறிப்பிட்டதாவது, “இலக்குகள் யதார்த்தமானவையா என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி இருந்தால், நாம் எங்கு நிற்கிறோம், இலக்குகளை அடையாததற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. நோயாளிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஆய்வகங்கள், DOT நேரடியாகக் கவனிக்கப்பட்ட குறுகியகால சிகிச்சை மையங்கள் (DOT centres), மருத்துவர்கள், செவிலியர்கள், ஒழுங்குமுறையாளர்கள் என அனைவரும் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசித்து இதற்கான இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய ஒரு திட்டம் இருக்க வேண்டும்.”


நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பாதுகாப்பு


உலகளாவிய காசநோய் அறிக்கை, இந்தியாவின் சிகிச்சை பாதுகாப்பில் (treatment coverage) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இது 2023-ல் 85%-ஆக இருந்து, 2024-ல் 92%-ஆக அதிகரித்துள்ளது. இது "புதிய தொழில்நுட்பங்களின் விரைவான பயன்பாடு, சேவைகளின் பரவலாக்கம் மற்றும் பெரிய அளவிலான சமூகரீதியிலான அணிதிரட்டல் ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியாவின் புதுமையான காசநோய் பாதிப்புகளை கண்டறியும் அணுகுமுறை, 2015-ல் 53%-ஆக இருந்த நாட்டின் சிகிச்சை பாதுகாப்பு 2024-ல் 92%-க்கும் அதிகமாக உயர வழிவகுத்தது" என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


எதிர்ப்புத் திறன் கொண்ட நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சை நேரத்தை முந்தைய 18 முதல் 24 மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாகக் குறைக்கக்கூடிய BPaL சிகிச்சை முறை (BPaL regimen) போன்ற முன்முயற்சிகள் காரணமாக சிகிச்சைப் பாதுகாப்பு விரிவாக்கம் ஏற்பட்டது.


இருப்பினும், சில இடைவெளிகள் இன்னும் உள்ளன என்று கப்ரா கூறுகிறார். "பல மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான அனைத்து வாய்வழி சிகிச்சையையும் அறிமுகப்படுத்துவது உட்பட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், குழந்தைப்பருவ காசநோய்க்கான மருந்து தயாரிப்புகள் இன்னும் எளிதில் கிடைக்கவில்லை. அரசாங்கம் வீட்டு தொடர்புகள் மற்றும் தொற்று அபாயத்தில் உள்ள பிறருக்கு காசநோய் தடுப்பு சிகிச்சையையும் வழங்குகிறது. இந்தத் தடுப்பு சிகிச்சையும் எளிதில் கிடைக்காது. ஆனால், ஒழிப்பு (elimination) என்ற பெரிய இலக்கைப் பார்க்கும்போது இந்த இடைவெளிகள் சிறிய இலக்குகள் என்று அவர் கூறுகிறார்.


2024-ம் ஆண்டில் நாட்டின் சில பகுதிகளில் மிகவும் பொதுவான மருந்துகள் கிடைப்பதில் சவால்கள் இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு நிபுணர், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.




மருந்து எதிர்ப்பின் ஆபத்தான காரணிகள்


மருந்து எதிர்ப்பு காசநோய்க்கு இந்தியா தொடர்ந்து பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இது உலகளாவிய வழக்குகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இத்தகைய எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுகளின் சுமை குறையவில்லை என்றாலும், அது கணிசமாக அதிகரிக்கவில்லை என்பதே நிதர்சனம். 2024-ம் ஆண்டில், முன்னர் காசநோய்க்கு சிகிச்சை பெற்றவர்களில் 12.63% பேரும், புதிய காசநோய் வழக்குகளில் 3.64% பேரும் இந்தியாவில் மருந்து எதிர்ப்புத் திறன் (drug-resistant) கொண்டவர்களாக இருந்தனர். புதிய அறிக்கையின்படி, இது முந்தைய ஆண்டைவிட 12.5% ​​மற்றும் 3.53%-ஐ விட சற்று அதிகமாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் மருந்து எதிர்ப்பு காசநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 1.27 லட்சம் பேர், 2023-ல் 1.26 லட்சமாகவும் 2024-ல் 1.24 லட்சமாகவும் இருந்தது.


2023-ம் ஆண்டில் சிகிச்சையைத் தொடங்கியவர்களுக்கு காசநோய் சிகிச்சைக்கான விகிதம் 90%-ஆக இருந்ததாகவும் அறிக்கை காட்டுகிறது. இது உலகளாவிய வெற்றி விகிதமான 88%-ஐ விட அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சஃப்தர்ஜங் மருத்துவமனையின் சமூக மருத்துவத் தலைவர் டாக்டர் ஜுகல் கிஷோர் குறிப்பிட்டதாவது, “காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பல காரணிகள் மெதுவாக்குகின்றன என்று கூறினார். இதன் மிகப்பெரிய பின்னடைவானது, கோவிட்-19 நோய்த் தொற்றை சமாளிக்க அதன் மேலாண்மைக்காக திட்டத்திலிருந்து வளங்கள் திருப்பி விடப்பட்டன. மற்றொரு முக்கியப் பிரச்சினை என்னவென்றால், பலர் தங்கள் சிகிச்சையை முடிக்கவில்லை. அவர்கள் பாதியிலேயே நிறுத்தும்போது, ​​அவர்களுக்கு மருந்து எதிர்ப்பு காசநோய் உருவாகலாம். பின்னர் அவர்கள் இந்த மருந்து எதிர்ப்புத் தொற்றை சமூகத்தில் பரப்பலாம், ”என்று அவர் கூறினார்.


டெல்லி போன்ற நகரங்களில், காற்று மாசுபாடு காசநோய் நோயாளிகளின் விளைவுகளை மேலும் மோசமாக்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.


மாசுபாடு மற்றும் நீரிழிவு போன்ற அதிகரித்து வரும் நோய்கள் காசநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் அவர் கூறினார். 2024-ம் ஆண்டில், 3.2 லட்சம் காசநோய் நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


திட்டத்தில் புதுமைகள்


இந்த திட்டத்தில் இப்போது BPaL போன்ற குறுகிய சிகிச்சை முறைசார் பயிற்சிகள் உள்ளன. அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் புதிய கருவிகளையும் சேர்த்துள்ளது. அவற்றில் ஒன்று செயற்கை நுண்ணறிவு (AI)-இயக்கப்பட்ட கையடக்க எக்ஸ்ரே சாதனம் (AI-enabled handheld X-ray device) ஆகும். இந்த சாதனம் அறிகுறிகள் இல்லாதவர்களிடமும் காசநோயைக் கண்டறிய முடியும். கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட 100 நாள் பிரச்சாரத்தின்போது இந்த சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. 100 நாட்களுக்குப் பிறகு பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டன.


கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தீவிர சோதனைத் திட்டங்களின்போது, இத்திட்டத்தின் கீழ் 19 கோடிக்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதன் விளைவாக 24.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 8.61 லட்சம் அறிகுறியற்ற பாதிப்புகளும் அடங்கும்


“உயர் சுமை அமைப்புகளில் அறிகுறியற்ற காசநோயின் பரவலை வலியுறுத்தும் உலகளாவிய மற்றும் உள்ளூர் ஆதாரங்களை இந்த முன்னெடுக்கும் அணுகுமுறை பயன்படுத்துகிறது,” என்று மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



Original article:

Share: