இந்த மாதம் 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision(SIR)) முழு வேகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், தேர்தல் ஆணையம் நவம்பர் 11 அன்று இந்த செயல்முறையில் ஒரு முக்கிய பங்குதாரரான அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களை (Booth Level Agent(BLA)) நியமிக்கும் நிபந்தனையை திருத்தம் செய்தது.
முன்னதாக, ஒரு கட்சியின் வாக்குச்சாவடி முகவர் (Booth Level Agent(BLA)) அவர்கள் நியமிக்கப்பட்ட அதே வாக்குச்சாவடியின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும். இப்போது, தேர்தல் ஆணையம் இந்த விதியை மாற்றியுள்ளது. அந்த குறிப்பிட்ட சாவடியில் இருந்து வாக்குச்சாவடி முகவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அதே சட்டமன்றத் தொகுதியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட வாக்காளரைத் தேர்ந்தெடுக்க கட்சிகளை இது அனுமதிக்கிறது.
வாக்குச்சாவடி முகவர்களின் (Booth Level Agent(BLA)) முக்கியத்துவம் என்ன மற்றும் புதிய விதி ஏன் அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது என்பதை பார்ப்போம்.
வாக்குச்சாவடி முகவரின் (Booth Level Agent(BLA)) பங்கு என்ன?
தேர்தல் ஆணையம் நவம்பர் 2008-ல் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) என்ற யோசனையை உருவாக்கியது. இது வாக்குப்பதிவு மற்றும் எண்ணும்போது வேட்பாளர்களின் கண்கள் மற்றும் காதுகளாக செயல்படும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் எண்ணும் முகவர்களைப் போன்றது. வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல் மற்றும் திருத்துதல் செயல்முறையின்போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பங்களிப்பை அதிகரிக்க இது செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தனது வாக்காளர் பட்டியல்கள் குறித்த கையேடு, 2023-ல் குறிப்பிடுகிறது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், தங்கள் தலைவர் அல்லது செயலாளர் அல்லது வேறு எந்த அலுவலகப் பொறுப்பாளர் மூலமாக, மாவட்ட பிரதிநிதிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை (Booth Level Agent(BLA)) நியமிக்க அதிகாரம் அளிக்கலாம். அதிகாரம் பெற்ற மாவட்ட பிரதிநிதி பின்னர் வாக்குச்சாவடி முகவர்-1 (மாவட்ட நிலைக்கு) மற்றும் வாக்குச்சாவடி முகவர்-2 (வாக்குச்சாவடி நிலைக்கு)-ஐ நியமிக்கலாம். இந்த நியமனங்களின் பட்டியல்கள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
"வாக்குச்சாவடி முகவர் அவர் நியமிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும். ஏனெனில், வாக்குச் சாவடி முகவர் திருத்தக்காலத்தில் வரைவு பட்டியலில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்வார் மற்றும் இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பதிவுகளை அடையாளம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று 2023 கையேடு கூறுகிறது.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரின் (Booth Level Officer(BLO)) பணியை நிரப்ப வாக்குச்சாவடி முகவர் (BLA) என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. அவர், பொதுவாக அந்த பகுதிக்கு உள்ளூர் மாநில அரசு ஊழியராக இருப்பார். வாக்காளர் பட்டியல்களின் வருடாந்திர மற்றும் தேர்தலுக்கு முந்தைய திருத்த செயல்முறையின் போது, வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்கு வந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) வீடு வீடாக சென்று ஆய்வு செய்வதன் மூலம் இறந்த அல்லது இடம் மாறிய வாக்காளர்களை அடையாளம் கண்டு வாக்குச்சாவடி அலுவலருக்கு (Booth Level Officer(BLO)) பட்டியல் வழங்கலாம்.
வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) ஒரு நாளைக்கு 10 விண்ணப்பங்களை தாக்கல் செய்யமுடியும். அரசியல் கட்சிகள் திருத்தச் செயல்பாட்டின்போது மற்றும் அவர்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) மூலம் மட்டுமே மொத்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். பொதுவாக ஒரு வாக்குச்சாவடி முகவர்கள் என்பவர் ஒரே வாக்குச்சாவடியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சி ஊழியர் அல்லது ஆதரவாளராக இருப்பார். இது வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை அடையாளம் காண உதவுகிறது. தகுதியான பெயர்கள் ஏதேனும் விடுபட்டுள்ளதா அல்லது தகுதியற்ற பெயர்கள் நீக்கப்பட வேண்டுமா என்பதை அடையாளம் காணவும் இது உதவுகிறது.
தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தத்தை (Special Intensive Revision (SIR)) தொடங்கியுள்ள நிலையில் வாக்குச்சாவடி முகவர்களின் (BLA) பங்கு இப்போது குறிப்பாக முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம், வாக்காளர் பட்டியல்கள் புதிதாக தயாரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உட்பட கட்சிகள், வாக்காளர் பட்டியல்களின் சரிபார்ப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. மிக சமீபத்தில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஹரியானா வாக்காளர் பட்டியல்களில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தம் என்ன?
நவம்பர் 11 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அலுவலர்களுக்கு (Chief Electoral Officers) கடிதம் எழுதி, தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி முகவர்களை (BLA) நியமிப்பது தொடர்பான தனது முந்தைய அறிவுறுத்தல்களையும், வாக்காளர் பட்டியல்கள் கையேட்டையும் திருத்துவதாக கூறியது.
இந்த புதிய அறிவுறுத்தல் குறிப்பிடுவதாவது, "பொதுவாக, வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பகுதிக்கும் (சாவடி) ஒரு வாக்குச்சாவடி முகவர் (BLA) நியமிக்கப்படலாம். வாக்குச்சாவடி முகவர் அவர்கள் நியமிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலின் அதே பகுதியில் இருந்து வாக்குச்சாவடி முகவர்களை (BLA) கிடைக்காத நிலையில், அதே சட்டமன்றத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு வாக்காளரிடமிருந்தும் வாக்குச்சாவடி முகவரைத் தேர்ந்தெடுக்கலாம். வாக்குச்சாவடி முகவர் அவர்கள் நியமிக்கப்பட்ட பகுதியின் வரைவு பட்டியலில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து இறந்த அல்லது இடம் மாறிய வாக்காளர்களின் பதிவுகளை சரிபார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது."
வாக்குச்சாவடிக்கு வெளியில் இருந்து வாக்குச்சாவடி முகவரை (BLA) தேர்ந்தெடுக்கும் விருப்பம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், அதே வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவரை (BLA) கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கருத்துக்களை பெற்றதால், திருத்த செயல்முறையின்போது அரசியல் கட்சிகள் எளிதாக பங்கேற்க உதவும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக, தேர்தல் ஆணையம் கட்சிகளை அதிக வாக்குச்சாவடி முகவரை (BLA) நியமிக்க கேட்டு வருகிறது. ஆனால், இந்த கருத்து குறைவான அளவில் வளர்ந்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெறும் 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின், 5.33 லட்சம் வாக்குச்சாவடிக்கு மொத்தம் 7.64 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) கூட இல்லை. ஆறு தேசிய கட்சிகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல மாநில கட்சிகள் இருப்பதை கருத்தில் கொண்டால், நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களின் (BLA) எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்த மாற்றம் எவ்வாறு வரவேற்கப்பட்டது?
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக பாஜகவால் வரவேற்கப்பட்டது. அதே நேரத்தில், திரிணாமூல் காங்கிரஸ் இந்த மாற்றத்துடன் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியது.
"வாக்குச்சாவடி முகவர் (BLA) நியமன விதிகளில் மாற்றங்கள் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) உத்தரவில் கோடிட்டுக் காட்டப்பட்ட இந்த முற்போக்கான படி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இது சந்தேகத்திற்கு இடமின்றி நமது தேர்தல் செயல்முறையின் நேர்மையை வலுப்படுத்தும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும், மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதில் அரசியல் கட்சிகள் சிறப்பாக பங்களிக்க இது உதவும் என்றும் அவர் கூறினார். அடிப்படை யதார்த்தங்களைக் கேட்டதற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு (ECI) அவர் பெரிய பாராட்டு தெரிவித்தார்” என்று பாஜக தலைவரும் மேற்கு வங்காள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி நவம்பர் 11 அன்று X-ல் வலைதளத்தில் கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி நவம்பர்-12 அன்று இதற்கு பதிலளித்ததாவது, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெறும் மேற்கு வங்காளத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை கண்டுபிடிக்க கடினமாக இருப்பதால் புதிய நிபந்தனை பாஜகவுக்கு நன்மை அளிக்கும் என்று கூறினார்.
"தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை ஒரே இரவில் சிறப்பு தீவிர திருத்தச் (SIR) செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது என்று கல்யாண் பானர்ஜி கூறினார். மேலும், இந்த மாற்றம் பாஜகவுக்கு உதவ வெளிப்படையாக செய்யப்பட்டது என்றார். முன்னதாக, விதி மிகவும் தெளிவாக இருந்தது. ஒரு வாக்குச்சாவடி முகவர் (BLA) அதே சாவடியின் வாக்காளராக இருக்க வேண்டும். பல வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களைக் கண்டுபிடிக்க பாஜக தவறிவிட்டது என்று பானர்ஜி கூறினார். இதன் காரணமாக, தேர்தல் ஆணையம் விதிகளை மாற்றி எழுதியுள்ளது. இப்போது, ஒரு வாக்குச்சாவடி உறுப்பினர் அதே சட்டமன்றத் தொகுதியில் உள்ள எந்த வாக்குச்சாவடியிலிருந்தும் வாக்காளராக இருக்கலாம். இது ஒரு சீர்திருத்தம் அல்ல, ஆனால் ஒரு திட்டமிட்ட கையாளுதல் (calculated manipulation) என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையம் தனது நடுநிலைமையை இவ்வளவு வெளிப்படையாக எப்படி சமரசம் செய்ய முடியும் என்று அவர் கேட்டார். முழு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையும் இப்போது நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்குப் பதிலாக பாஜகவின் அரசியல் தேவைகளுக்கு சேவை செய்யும் ஒரு கருவியாக மாறிவிட்டது என்றார்.