‘மத மாற்றத் தடை’ சட்டம்: அருணாச்சல பிரதேசம் வரைவு விதிகளை ஆய்வு செய்ய குழுத் தலைவரை நியமித்தது.

 அருணாச்சலப் பிரதேச அரசு, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட "மதம் மாற்றத் தடை" சட்டத்திற்காக வகுக்கப்பட்ட வரைவு விதிகளை ஆய்வு செய்ய, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியை உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது.


அருணாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் (Arunachal Pradesh Freedom of Religion Act (APFRA)), 1978-க்கான வரைவு விதிகளை ஆய்வு செய்வதற்காக, மாநில உள்துறை அமைச்சர் மாமா நதுங்கை மாற்றியமைத்து, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ப்ரோஜேந்திர பிரசாத் கட்டாகே நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தக் குழுவின் உறுப்பினர்களில் கென்டோ ஜினி மற்றும் பாலோ ராஜா ஆகிய இரண்டு அமைச்சர்கள், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஆறு அமைப்புகளின் தலைவர்கள் - அருணாச்சல கிறிஸ்தவ மன்றம் (Arunachal Christian Forum (ACF)), அருணாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி நம்பிக்கை மற்றும் கலாச்சார சங்கம் (Indigenous Faith and Cultural Society of Arunachal Pradesh (IFCSAP)), மோன்பா மிமாங் சோக்பா, தாய் காம்தி மேம்பாட்டுச் சங்கம், அருணாச்சல விகாஸ் பரிஷத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் மாநிலப் பிரிவு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அரசியலமைப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு, அருணாச்சல பிரதேச மதச்சுதந்திர விதிகள், 1978-ன் வரைவை ஆராயும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் இந்திய அரசியலமைப்பின் விதிகளுக்கும் நீதித்துறை வழிகாட்டுதல்களுக்கும் இணங்கி இருப்பதை உறுதிசெய்ய இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய துறைகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பும் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


உயர்நீதிமன்றத்தின் காலக்கெடுவை பூர்த்திசெய்யும் வகையில், பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறும் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


செப்டம்பர் 2024-ல், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் இட்டாநகர் கிளை, பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையை முடித்து வைக்கும்போது, வழக்கறிஞர் தம்போ தமின் (Tambo Tamin) தாக்கல் செய்திருந்த வழக்கில், அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தின் வரைவு விதிகளை ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்யுமாறு பேமா காண்டு (Pema Khandu) அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. 


அருணாச்சல கிறிஸ்தவ மன்றமானது, அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தின் "உள்ளடக்கம் மற்றும் நோக்கம்" கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் கிறிஸ்தவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட "அடிப்படை உரிமைகளைச் சுருக்குவதற்கான" பல தெளிவின்மைகளைக் கொண்டுள்ளது என்றும் வாதிடுகிறது.


அருணாச்சல கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் தார் மிரி உயர்மட்டக் குழுவில்  சேர்க்கப்பட்டிருந்தாலும், குழுவின் அமைப்பு அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற அதன் கோரிக்கையை பலவீனப்படுத்துகிறது என்று அந்த அமைப்பு கூறியது.


மறுபுறம், அருணாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி நம்பிக்கை மற்றும் கலாச்சார அமைப்பானது, (Indigenous Faith and Cultural Society of Arunachal Pradesh (IFCSAP)), சட்ட விதிகளை விரைவாக வகுத்து, சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மாநில பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.


கவுகாத்தி உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 1978-ஆம் ஆண்டின் அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை இறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Original article:

Share: