சமீபத்திய அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பிலிருந்து (AISHE) முக்கிய குறிப்புகள் -ஆர்.ராதிகா

 அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey of Higher Education (AISHE)) 2021-22 அறிக்கை ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது, இது ஐந்து முக்கிய குறிப்புகளை வெளிப்படுத்தியது.


அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) 2021-22 அறிக்கையின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் தற்போதைய மாணவர் சேர்க்கை 4.33 கோடியாக உள்ளது. இது 2020-21ல் 4.14 கோடியாகவும், 2014-15ல் 3.42 கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இளங்கலை, முதுகலை, பிஎச்.டி, எம்.பில், டிப்ளமோ, பி.ஜி டிப்ளமோ, சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் ஆகிய எட்டு நிலைகளில் மொத்த மாணவர் சேர்க்கையை இந்த கணக்கெடுப்பு உள்ளடக்கியது ஆகும். இந்த ஆய்வில் 10,576 தனி நிறுவனங்கள், 42,825 கல்லூரிகள் மற்றும் 1,162 பல்கலைக்கழகங்கள் / பல்கலைக்கழக அளவிலான நிறுவனங்கள் பங்கேற்றன.


ஐந்து முக்கிய குறிப்புகள்


ஆண்களை விட பெண்களின் சேர்க்கை விகிதம் அதிகம்


அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) அறிக்கை உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது.


2014-15 ஆம் ஆண்டில், 1.5 கோடி பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். மேலும் இந்த எண்ணிக்கை 32% அதிகரித்து 2021-22 இல் 2.07 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பெண்களின் சேர்க்கை 18.7% அதிகரித்துள்ளது, இது 2017-18 ஆம் ஆண்டில் 1.74 கோடியாக இருந்தது.


2021-22 ஆம் ஆண்டில் 98,636 பெண்கள் உட்பட மொத்தம் 2.12 லட்சம் பிஎச்டி சேர்க்கைகளுடன் மிக குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 47,717 பெண்கள் மட்டுமே பிஎச்டி திட்டங்களில் சேர்ந்தனர்.


உயர்கல்வியில் சேரும் பெண்களின் விகிதாச்சாரமும், ஆண்களுடன் ஒப்பிடுகையில், அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 2014-15 உடன் ஒப்பிடும்போது, உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த கூடுதல் 91 லட்சம் மாணவர்களில், 55% பெண்கள் ஆவர். பெண்களின் அதிக விகிதம் முதுகலை மட்டத்தில் 55.4% மாணவர்கள் பெண்கள் ஆவார்..


மொத்த சேர்க்கை  விகிதம் (Gross enrolment ratio(GER)) மற்றும் பாலின சமத்துவம்


மொத்த சேர்க்கை விகிதம் (GER) 18-23 வயதுக்குட்பட்டவர்களிடையே உயர்கல்வியில் உள்ள மாணவர்களின் விகிதத்தை வெளிப்படுத்துகிறது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) 2021-22 அறிக்கையின்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் மதிப்பிடப்பட்ட மொத்த சேர்க்கை  விகிதம் (GER) 28.4 ஆகும்.


மாநில வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, அதிக மொத்த சேர்க்கை  விகிதம் (Gross enrolment ratio(GER)) சண்டிகரில் 64.8%, புதுச்சேரியில் 61.5%, டெல்லி 49%, தமிழ்நாடு 47% ஆக உள்ளது. 


பாலின சமத்துவக் குறியீடு (Gender Parity Index (GPI)) பெண் மொத்த சேர்க்கை விகிதம்  மற்றும் ஆண் மொத்த சேர்க்கை விகிதத்தை அளவிடுகிறது. பாலின சமத்துவக் குறியீடு (GPI) 1 என்பது இரு பாலினங்களுக்கு இடையே உள்ள சமநிலையைக் குறிக்கிறது. 0 மற்றும் 1 க்கு இடையிலான எந்த எண்ணும் ஆண்களுக்கு ஆதரவான ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது. மேலும் 1 க்கு மேலே உள்ள பாலின சமத்துவக் குறியீடு (GPI) பெண்ணுக்கு ஆதரவான ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது.


26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மொத்த சேர்க்கை விகிதம் (GER) பெண்களுக்கு சாதகமாக உள்ளது என்று கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. தேசிய அளவில், பாலின சமத்துவக் குறியீடு (GPI) 1.01 ஆகவும், SC மற்றும் ST வகைகளுக்கு, பாலின சமத்துவக் குறியீடு (GPI) முறையே 1.01 மற்றும் 0.98 ஆகவும் உள்ளது.


இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கலைகளைத் தேர்ந்தெடுப்பது


இளங்கலை கலை (Bachelor of Arts (BA)) திட்டத்தில் அதிகமாக 1.13 கோடி மாணவர்கள் உள்ளனர். இது இந்தியாவில் மொத்த இளங்கலை சேர்க்கையில் 34.2% ஆகும். ஒட்டுமொத்தமாக, 3.41 கோடி மாணவர்கள் இளங்கலை திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.


2021-22 ஆம் ஆண்டில் இளங்கலை திட்டத்தில் உள்ள துறைகளைப் பொறுத்தவரை, கலை (34.2%), அதைத் தொடர்ந்து அறிவியல் (14.8%), வணிகம் (13.3%) மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (11.8%) ஆகியவற்றில் சேர்க்கை அதிகமாக உள்ளது. BA (Hons) என்பது 20.4 லட்சம் மாணவர்களை (6.2%) குறிக்கிறது.


இதேபோல், சமூக அறிவியல் பிரிவில் அதிகபட்சமாக 10.8 லட்சம் முதுகலை மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், முதுகலை கலை (Master of Arts (MA)) பிரிவுகளில் அதிகமாக 20.9 லட்சம் மாணவர்கள் சேர்க்கை உள்ளனர். இது மொத்த முதுகலை சேர்க்கையில் 40.7% ஆகும்.


பிஎச்டி மட்டத்தில் (PhD level), பொறியியல் மற்றும் அறிவியலுக்கு அடுத்தபடியாக சமூக அறிவியல் மூன்றாவது இடத்தில் உள்ளது. பொறியியல் துறையில் 52,748 பேரும், அறிவியலில் 45,324 பேரும், சமூக அறிவியலில் 26,057 மாணவர்களும் பிஎச்டி (PhD) பயின்று வருகின்றனர்.


அரச நிறுவனங்களின் முதன்மை நிலை


ஆச்சரியப்படும் விதமாக, அனைத்து மாணவர்களிலும் 73.7% பேர் அரசு பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். இது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 58.6% மட்டுமே ஆகும்.


அரசுத் துறைக்குள், மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் (state public universities) சேர்க்கையில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. இது பல்கலைக்கழகங்களில் மொத்த சேர்க்கையில் சுமார் 31% ஆகும். எண்ணிக்கையின் அடிப்படையில், அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் 71.06 லட்சம் சேர்க்கை உள்ளது. அதே நேரத்தில் தனியார் நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை 25.32 லட்சமாக உள்ளது.


தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருந்தாலும், மாணவர்கள் அரசு கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.



பட்டம் பெறும் மாணவர்களின் புள்ளிவிவரங்கள்


2021-22 கல்வியாண்டில், சுமார் 1.07 கோடி மாணவர்கள் இளங்கலை, பட்டதாரி, முனைவர், முதுகலை மற்றும் டிப்ளமோ/சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பட்டம் பெற்றனர். இந்த பட்டதாரிகளில், 54.6 லட்சம் அல்லது சுமார் 50.8% பெண்கள் ஆவார்.


பிரிவு வாரியாக, 2021-22 ஆம் ஆண்டில், சுமார் 35% மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர்கள், 13% பட்டியல் சாதி (SC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 5.7% பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 


மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கலை மற்றும் சமூக அறிவியல் துறைகளில் பட்டப்படிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இளங்கலை மட்டத்தில், 24.16 லட்சம் மாணவர்களுக்கு இளங்கலை கலை (BA) பட்டம் வழங்கப்பட்டது. இது அனைத்து திட்டங்களிலும் மிக உயர்ந்தது. முதுகலை மட்டத்தில் கூட, முதுகலை கலை (MA) பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 7.02 லட்சம் பட்டங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


பிஎச்டி மட்டத்தில் (PhD level), அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள், அதாவது, அறிவியல் துறைகளில் 7,408 பேரும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 6,270 பட்டதாரி மாணவர்களும் உள்ளனர்.




Original article:

Share: