உயர் கல்வி: போராட்டமா அல்லது வாக்குறுதியா? -நௌஷாத் ஃபோர்ப்ஸ்

 நமது உயர்கல்வி முறையின் திறனை உணர, கொள்கைகள்  பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.


இந்தியாவில் மிகப்பெரிய உயர்கல்வி முறை உள்ளது. 42 மில்லியனுக்கும் அதிகமான சேர்க்கை பதிவுகளுடன், உலகின் முக்கால்வாசி நாடுகளின் மக்கள்தொகையை விட உயர்கல்வியில் அதிக மாணவர்கள் உள்ளனர். பல பொறியியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மிகவும் புதியவை. ஆனால் கலை மற்றும் வணிகத்தில் கவனம் செலுத்தும் பழைய கல்லூரிகளும் உள்ளன.


இந்தியாவின் உயர்கல்வி முறை பெரியது மட்டுமல்ல, இது உலகிலேயே மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்தது. பொது அமைப்பில், மத்திய பல்கலைக்கழகங்கள் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நாடு முழுவதும் பரவியுள்ளன. இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science (IISc)), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology(IIT)), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research (IISER)) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (Indian Institutes of Management (IIM)) போன்ற நிறுவனங்கள் சுதந்திரமானவை. அவைகள் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களை வைத்திருககின்றன. மருத்துவக் கல்லூரிகள், தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் (National Institute of Design(NIDs)) மற்றும் தேசிய உடையலங்கார தொழில்நுட்பம் (National Institute of Fashion Technology (NIFT)) ஆகியவை கல்வி அமைச்சகத்தின் கீழ் வராது.


கல்வியில் பெரிய தனியார் துறையும் பல தனியார் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகள் முக்கியமாக தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்துகின்றன. அவை பொதுப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில தனியார் நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறிவிட்டன. சமீபத்தில், பல தனியார் பல்கலைக்கழகங்கள் நன்கொடைகளிலிருந்து நிதியைப் பெற்றன. அவை மத்திய அரசு அல்லது மாநிலங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டன. இந்த பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறந்த தேசிய பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது.


இந்தியாவின் பெரிய மற்றும் மாறுபட்ட கல்வி முறையின் தேவைகளை இந்தக் கொள்கை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கிய பிரச்சினை உயர் தரத்தை பராமரிப்பது. இந்த சவால் கடந்த 40 ஆண்டுகளில் தனியார் கல்வியின், குறிப்பாக தொழில்முறை துறைகளின் விரைவான வளர்ச்சியில் இருந்து வருகிறது. விதிமுறைகள் மூலம் தரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் சரியாக வேலை செய்யவில்லை. கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே தேர்வு செய்ய அனுமதிப்பது நல்லது. அவர்களின் படிப்புகள், மாணவர் எண்ணிக்கை, கட்டணம் மற்றும் என்ன கற்பிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் சில முக்கியப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இது கல்வி நிறுவனங்களின் தரத்தை சரிபார்க்க வேண்டும். ஆராய்ச்சிக்கான நிதியும் பெருமளவில் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நிதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறைகளிலும் முதலீடு அதிகரிக்க வேண்டும். இத்தகைய மாறுபட்ட அமைப்புடன், அரசாங்கத்தின் பங்கு சிறியதாகவும் அதிக கவனம் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும்.


பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கல்லூரிகள்


6,000 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3,000 மேலாண்மை நிறுவனங்கள் பெரும்பாலும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் கீழ் வருகின்றன. அவற்றை மேம்படுத்த, தேவையான திட்டம் இருக்க வேண்டும். இந்த திட்டம் அவர்களை மதிப்பீடு செய்து சான்றளிக்க வேண்டும் பின்னர் அவற்றின் முடிவுகள் வெளிப்படைத்தன்மையுடன்  இருக்க வேண்டும். பின்னர், இந்த நிறுவனங்கள் தங்களின் குறைகளை சரிப்படுத்திக் கொண்டால் மாணவர்களும் பெற்றோர்களும் தேவையான நிறுவனத்தை தேர்பு செய்வார்கள். அவர்களின் தேர்வுகளின் அடிப்படையில், சில கல்லூரிகள் சிறப்பாக செயல்படும், மற்றும் சில நிறுவனங்கள் மூடப்படலாம். கல்லூரிகளை விரிவுபடுத்தவும், புதிய திட்டங்களைச் சேர்க்கவும், மேலும் மாணவர்களை சேர்க்கவும் அனுமதிக்க வேண்டும். பின்னர், அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடலாம்.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்:


இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) , இந்திய அறிவியல் கழகம் (IISc) , இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் (NIDs) மிகவும் மதிக்கப்படுகின்றன. அவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக பார்க்கப்படுகின்றன. எனவே, அவைகள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க சுதந்திரம் வேண்டும். அவைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அது திணிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவிக்காக போட்டியிட வேண்டும். 2017 இல், அரசாங்கம் ஒரு நேர்மறையான முடிவை எடுத்தது. இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) தங்கள் வாரிய உறுப்பினர்கள், தலைவர் மற்றும் இயக்குனரைத் தேர்ந்தெடுக்க அனுமதித்தது. இந்த மாற்றம் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் தங்கள் விவகாரங்களின் தலையீடு இல்லாமல் நிர்வகிக்க அனுமதிக்கிறது. ஆனால் சமீபத்தில் இந்த மாற்றம் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது, ​​கல்வி அமைச்சகம் இந்த நியமனங்களை மீண்டும் கட்டுப்படுத்துகிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறுகள் இருப்பின் தனித்தனியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில சிக்கல்கள் காரணமாக முழு அமைப்பும் விதிகளால் சுமையாக இருக்கக்கூடாது. அரசாங்கம் குறைதீர்ப்பாளரை (ombudsman) நியமிக்கலாம். இந்த நபர் பொது நிறுவனங்களில் நிதி விஷயங்களை மேற்பார்வையிடுவார். மேலும், இந்த தொழில் நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளுக்கான நிதியை அரசாங்கம் படிப்படியாகக் குறைக்க வேண்டும். இது பெரிய, ஒரு முறை செலவுகளுக்கு மட்டுமே நிதியளிக்க வேண்டும். இந்த அணுகுமுறை இந்த நிறுவனங்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அளிக்கும்.


மானுடவியல் மற்றும் சமூக அறிவியலை வழங்கும் பல்கலைக்கழகங்கள்


முக்கியமாக தொழில்சார் துறைகளில் கவனம் செலுத்துவது சமூக அறிவியல் மற்றும் மனிதநேயங்களில் குறைவான கவனம் செலுத்த வழிவகுத்தது. இருப்பினும், இன்று பெரிய சிக்கல்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற கண்ணோட்டங்களின் கலவை தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும் 1.4 பில்லியன் மக்களுக்கு சுகாதார சேவை வழங்குவதற்கும் இந்த கலவை தேவைப்படுகிறது. எனவே, பரந்த அளவிலான பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அத்தகைய பல்கலைக்கழகங்களை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன. ஆனால் உயர்தர கல்வியை அடைவது கடினம். உயர்தர பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் தரம் என்பது அவர்களின் சூழலின் ஒரு பகுதி என்று கூறுகிறார்கள். இந்த உயர் தரநிலை பெரும்பாலும் முன்னர் குறிப்பிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் காணப்படுகிறது. ஏற்கனவே இல்லாத ஒரு நிறுவனத்தில் தரமான கலாச்சாரத்தை உருவாக்குவது கடினமானது. 


ஏற்கனவே சிறந்து விளங்கும் இடத்தில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவது எளிது. உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான உடனடி வழி, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மற்றும் இந்திய அறிவியல் கழகத்தை (IISc) விரிவுபடுத்துவதாகும். அவைகள் அறிவியல், பொறியியல், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றில் உயர்தர படிப்புகளை வழங்க வேண்டும். இந்த பாடங்கள் அனைத்தும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். சில இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலுக்கு கொடுக்கப்படும் கவனம் மற்றும் முக்கியத்துவம் நிறைய அதிகரிக்கப்பட வேண்டும். இந்த முயற்சி அடுத்த 20 ஆண்டுகளுக்கு பகிரப்பட்ட இலக்காக இருக்க வேண்டும்.


சமீபகாலமாக, தனியார் நன்கொடைகள் இந்திய உயர்கல்வியை மாற்றி வருகின்றன. அகமதாபாத் பல்கலைக்கழகம், அசோகா, க்ரியா, ஷிவ் நாடார், பிளாக்ஷா மற்றும் நயன்தா போன்ற பல்கலைக்கழகங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். அவைகள் தங்கள் வழியைப் பின்பற்ற மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த பல்கலைக்கழகங்களை ஈர்க்க மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும். அவைகளுக்கு சுதந்திரம் கொடுத்து இதைச் செய்ய வேண்டும். இந்தப் பல்கலைக்கழகங்கள் சேர்க்கை, பணியமர்த்தல் மற்றும் அவை வழங்கும் பட்டங்களின் வகைகளைத் தீர்மானிக்க சுதந்திரமாக இருக்க வேண்டும். 


இந்த தனியார் நிதியுதவி, பரோபகார பல்கலைக்கழகங்கள் பரிசோதனைக்கான இடங்களாக இருக்க வேண்டும். அவைகள் அதிக விதிகள் இல்லாமல் செயல்பட வேண்டும். இந்த வழியில், அவைகள் புதிய விஷயங்களை முயற்சி செய்யலாம். சில யோசனைகள் நன்றாக வேலை செய்யும், மற்றவை செயல்படாது. ஆனால் ஒன்றாக சேர்ந்து, நமக்குத் தேவையான அதிக எண்ணிக்கையிலான நன்கு படித்த பட்டதாரிகளை உருவாக்குவார்கள். இந்த பட்டதாரிகள் நமது எதிர்கால சிந்தனையாளர்களாகவும் தலைவர்களாகவும் இருப்பார்கள்.


ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்:


தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (National Research Foundation(NRF)) உருவாக்கம் ஒரு முக்கிய சமீபத்திய வளர்ச்சியாகும். ஜூலை 20, 2023 மற்றும் ஆகஸ்ட் 17, 2023 அன்று Business Standard-க்கான இரண்டு கட்டுரைகளில் ஏற்கனவே அதைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதை சரியாகச் செய்தால், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை வலியுறுத்துகிறது. இது நிறைவேற்ற, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (NRF) அரசிடமிருந்து ₹50,000 கோடி முழுவதுமாக நிதியுதவி கிடைப்பதுடன், இது கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க அதிகாரிகளால் அல்ல. 


மேலும், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையால் (NRF) நிதியளிக்கப்படும் ஒவ்வொரு ஆராய்ச்சி திட்டமும் ஒரு பொது அல்லது தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளரை உள்ளடக்கியது. அறிவியல் ஆராய்ச்சியின் அளவை அதிகரிப்பது மட்டும் நோக்கம் அல்ல. இளங்கலை பட்டப்படிப்பு கல்வியின் தரத்தையும் மேம்படுத்த விரும்புகிறோம். நம் உயர்மட்ட ஆசிரிய உறுப்பினர்கள் ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால், முதுகலைப் பட்டதாரி மாணவர்கள் இத்துறையில் சிறந்தவர்களிடம் இருந்து நேரடியாக ஆராய்ச்சி திறன்களைக் கற்றுக்கொள்வார்கள். இது திறமையான நபர்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும். அவை நாட்டின் ஆராய்ச்சிக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதோடு, புதுமையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்.


ஆசிரியர் பல மதிப்புமிக்க பதவிகளை வகிக்கிறார். அவர் ஃபோர்ப்ஸ் மார்ஷலின் இணைத் தலைவர் (co-chairman Forbes Marshall) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry (CII)) முன்னாள் தலைவர் ஆவார்.




Original article:

Share: