யேமனை தளமாகக் கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களை பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா -ராய்ட்டர்ஸ்

 புதன்கிழமை, சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, அமெரிக்க அரசாங்கம் யேமனை தளமாகக் கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களை பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் சேர்த்தது. 


"உலகளாவிய பயங்கரவாதி" (Specially Designated Global Terrorist(SDGT)) என அறிவிக்கப்பட்டுள்ளது, கடுமையான தடைகளை கொண்டுவருகிறது. முக்கியமான செங்கடல் வழித்தடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு அல்லது கப்பல்களைக் கைப்பற்றுவதற்கு ஹவுதிகள் பணம் மற்றும் ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor(NSA)) ஜேக் சல்லிவன் இந்த அறிவிப்பு,  ஹவுதிகளுக்கு பயங்கரவாத நிதியுதவியை நிறுத்தும், நிதிச் சந்தைகளுக்கான ஹவுதிகளின் அணுகலைக் கட்டுப்படுத்தும், மேலும் ஹவுதிகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கும்.


“ஹவுதிகள் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் (Gulf of Aden) தாக்குதலை நிறுத்தினால், அமெரிக்கா உடனடியாக இந்த அறிவிப்பு மறுபரிசீலனை செய்யப்படலாம்" என்று திரு. சல்லிவன் கூறினார்.


உணவு இறக்குமதி மற்றும் மனிதாபிமான உதவிகளை நம்பியிருக்கும் யேமன் மக்கள் மீதான தாக்கத்தை குறைக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் ‘விதிவிலக்குகளை’ (carve outs) உருவாக்கியது. மேலும், 30 நாட்களில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன், உதவி நிறுவனங்கள் உள்ளிட்ட குழுக்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.


ஹவுதிகளின் நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்து, பணவீக்கம் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளன. மேலும் மத்திய கிழக்கில், குறிப்பாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்குப் பிறகு சாத்தியமான உறுதியற்றதன்மை பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளன.


கடந்த வாரம், திரு. பிடென், ஹவுதிகளை "பயங்கரவாத" (terrorist) குழுவாக வகைப்படுத்தினார். யேமனில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து இராணுவப் படைகள் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


செவ்வாய் கிழமையன்று, அமெரிக்க இராணுவம் நான்கு ஹவுதி கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு (Houthi anti-ship ballistic missiles) எதிராக மற்றொரு தாக்குதலை நடத்தியது என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் (Reuters) தெரிவித்தனர்.


ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம், பயங்கரவாதிகள் என அறிவித்தது அவர்களின் செயல்பாடுகளை பாதிக்காது என்று கூறினார். அவர்களது நடவடிக்கைகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இஸ்ரேலிய கப்பல்கள் அல்லது இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை குறிவைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


இந்த தாக்குதல்கள் காசா மோதலுக்கு எதிர்ப்பின் அச்சு (Axis of Resistance) என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் பரந்த பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும். இதில் ஹவுதிகள், பாலஸ்தீன போராளிகள் ஹமாஸ், லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா மற்றும் ஈராக்கின் ஷியா போராளிகள் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் எதிரியான ஈரானுடன் தொடர்பு வைத்துள்ளனர்.


"ஈரானின் மோசமான செல்வாக்கிற்கு எதிராக முடிந்தவரை போராடிக்கொண்டே இருப்போம். ஈரானில் இருந்து தங்களை விலக்கிக்கொள்ளும் முடிவு இப்போது ஹவுதிகளின் கையில் உள்ளது" என்று அறிவிப்புக்கு முன் பெயர் தெரியப்படாதவர் செய்தியாளர்களிடம் பேசிய மூன்று நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் கூறினார்.


2015 ஆம் ஆண்டில், சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி ஹவுதிகளுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவாக யேமனில் தலையிட்டது. இந்தப் போர் பெரும்பாலும் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது.


முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகுவதற்கு முன்பு ஹவுதிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியது. ஐக்கிய நாடுகள் சபை, உதவி குழுக்கள் மற்றும் சில அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடமிருந்து இந்த தடைகள் உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்கள் யேமனுக்கு செல்வதை சீர்குலைக்கும் என்று கவலைகள் எழுந்தன.


பிப்ரவரி 12, 2021 அன்று, யேமனில் உள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஒப்புக்கொண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் (U.S. Secretary of State) ஆண்டனி பிளிங்கன் இந்த அறிவிப்பை நீக்கினார்.


புதன்கிழமை, ஹவுதிகள் மீண்டும்  உலகளாவிய பயங்கரவாதிகள் (Specially Designated Global Terrorist(SDGT)) பட்டியலில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு" (foreign terrorist organization) என்று முத்திரை குத்தப்படவில்லை. இதன் பொருள், இது பட்டியலில் உள்ளவர்களுக்கு அவ்வளவு கண்டிப்பானதல்ல மற்றும் தானாகவே பயணத் தடைகளை ஏற்படுத்தாது. இந்த அணுகுமுறைக்கான தடைகள் இல்லாமல் மனிதாபிமான பொருட்களை அனுமதிப்பதை எளிதாக்குகிறது.


ஹவுதிகளுடன் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் உரிமங்களை அமெரிக்க கருவூலத் துறை (U.S. Treasury Department) வழங்கியது. உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள், தகவல் தொடர்பு மற்றும் தனிப்பட்ட பணப் பரிமாற்றங்கள் போன்ற விஷயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இதில் அடங்கும். யேமனில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களில் ஹவுதிகளின் ஈடுபாடு தொடர்பான பரிவர்த்தனைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


"ஹவுதிகள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும், ஆனால் அது யேமன் குடிமக்களின் இழப்பில் இருக்கக்கூடாது" என்று திரு. பிளிங்கன் ஒரு அறிக்கையில் கூறினார்.


யேமனில் ஏற்பட்டுள்ள நிலைமையை கடுமையான மனிதாபிமான நெருக்கடி என கூறிய ஐக்கிய நாடுகளவை, மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 21 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் முறையான சுகாதார வசதிக்காக போராடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. சர்வதேச மீட்புக் குழுவைச் (International Rescue Committee) சேர்ந்த அனஸ்டாசியா மோரன், இதற்காக, விதிவிலக்குகள் இருந்தபோதிலும், யேமனுக்கு உணவு விநியோகத்தை தீவிரமாக குறைக்கலாம் என்று எச்சரித்தார். இது, 75% மக்கள் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்பதால் இது சம்பந்தமானது. மனிதாபிமான விதிவிலக்குகள் பொருளாதாரத் தடைகளிலிருந்து பாதிப்பை முழுமையாகத் தடுக்காது என்று அவர் குறிப்பிட்டார்.


யேமனில் தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இருப்பினும், விதிவிலக்குகளை தெளிவுபடுத்தவும், நடந்துகொண்டிருக்கும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டது.


மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாட்டு அலுவலகத்தின் (U.N. Office for the Coordination of Humanitarian Affairs) செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ, தனியார் துறையினர் தங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது விதிவிலக்குகள் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக யேமனில் வணிகம் செய்ய தயங்கக்கூடும் என்று கவலை தெரிவித்தார்.




Original article:

Share: