செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பில் சீனாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா இசைவு தெரிவித்துள்ளது : அதன் பொருள் என்ன, என்ன நடக்கக்கூடும் ? -அனில் சசி

 அமெரிக்கா  அதன் அணுகுமுறையை மாற்றி வருகிறது. இந்த மாற்றம் இருதரப்பு மற்றும் சர்வதேச அளவில் சீனாவுடன் நடந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் சீனாவின் விரைவான முன்னேற்றங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இணைந்தால், குறிப்பாக ஒழுங்குமுறை அடிப்படையில், அது இந்தியா உட்பட பிற பிராந்தியங்களை பாதிக்கும்.


சீனாவில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் அமெரிக்க முதலீடுகளை அதிபர் ஜோ பைடன் தடை செய்த ஆறு மாதங்களுக்குள், அதன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை பாதுகாப்பாக நிலைநிறுத்துவதில் பெய்ஜிங்குடன் இணைந்து ஒப்புக்கொள்வதன் மூலம் அமெரிக்கா இப்போது நல்லிணக்கத்திற்கு அடையாளப்படுத்தி வருகிறது.


வெள்ளை மாளிகையின்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகத்தின் இயக்குனர் ஆரத்தி பிரபாகர், Financial Times-யிடம் குறிப்பிடுகையில், வர்த்தக பதட்டங்கள் இருந்தபோதிலும், முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில், இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவில் "அபாயங்களைக் குறைக்கவும் மற்றும் திறன்களை மதிப்பிடவும்"  ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார்.


செயற்கை நுண்ணறிவில் சீனாவுடன் ஒத்துழைப்பது குறித்த கேள்விக்கு, "இந்தச் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று பிரபாகர் கூறினார். மேலும்,  செயற்கை நுண்ணறிவில் பெய்ஜிங்குடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


இந்த மாற்றம் ஆகஸ்ட் 2023 இல் சீனாவிற்கான தொழில்நுட்ப இடமாற்றங்களைக் கட்டுப்படுத்திய நிர்வாக உத்தரவுக்கும், வெள்ளை மாளிகையின் (White House)) உயர்மட்ட அறிவியல் ஆலோசகரின் சமீபத்திய அறிக்கைக்கும் இடையில் ஏற்பட்டது. 


நவம்பர் தொடக்கத்தில், சீனா, இந்தியா உட்பட 27 பிற நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிளெட்ச்லி பிரகடனத்தில் (Bletchley Declaration) கையெழுத்திட்டன. இங்கிலாந்தில் நடந்த உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் (AI Safety Summit) இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


அதே மாதத்தின் பிற்பகுதியில், சான் பிரான்சிஸ்கோ அருகே நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் (Asia-Pacific Economic Cooperation (APEC) summit) போது அமெரிக்கா ஜனாதிபதி பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன், முக்கிய உபகரணங்களுக்கான அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் பேச்சுவார்த்தைகள் விவாதிக்கப்பட்டன. 


வெள்ளை மாளிகையின் அறிக்கை ஏன் முக்கியமானது?


செயற்கை நுண்ணறிவின் விரைவான முன்னேற்றங்களுடன் தொடர்புடைய இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் சம்மந்தமான அபாயங்கள் குறித்து உலகளாவிய கவலை அதிகரித்துள்ள நிலையில் வாஷிங்டனின் அணுகுமுறை மாற்றம் வருகிறது. இந்த ஆண்டு சுமார் 40 நாடுகள் தேர்தல்களை நடத்த இருப்பதால் இந்த கவலை அதிகரித்துள்ளது.


சீனாவில் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டின் கண்காணிப்பாளரான கைஃபு லீ (Kaifu Lee) உள்ளிட்ட ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஃபோர்ப்ஸின் (Forbes) சமீபத்திய அறிக்கையுடன் இது ஒத்துப்போகிறது. இரு நாடுகளும் "செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் சம நிலையை அடைந்துள்ளன. ஆனால் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் சீனாவின் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவை விட முன்னேற வாய்ப்புள்ளது”.


 சீன செயற்கை நுண்ணறிவு முன்னணி நிறுவனமான Baidu, இணைய ஜாம்பவான்களான அலிபாபா (Alibaba) மற்றும் டென்சென்ட் (Tencent) உடன் இணைந்து பணியாற்றுகிறது. இது, சமீபத்தில் ERNIEஐ வெளியிட்டது. கிட்டத்தட்ட 150 மில்லியன் சீன பட-உரை ஜோடிகளில் (Chinese image-text pairs) பயிற்சியளிக்கப்பட்ட 23 பில்லியன் அளவுகளில் செயற்கை நுண்ணறிவு மாதிரி மற்றும் மற்றொரு சீன செயற்கை நுண்ணறிவு மாடல் ’Taiyi’ ஆகும். இது இருமொழி (சீன-ஆங்கிலம்) மாதிரியானது, சுமார் 20 மில்லியன் வடிகட்டப்பட்ட சீனப் பட-உரை ஜோடிகள் (Chinese image-text pairs) மற்றும் ஒரு பில்லியன் தரவுகளின் மீது பயிற்சியளிக்கப்பட்டது.


2030 ஆம் ஆண்டளவில் செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய தலைமையாக மாற சீனா இலட்சிய திட்டங்களைக் கொண்டுள்ளது. TikTok நடத்தை வழிமுறைகளில் அதன் தலைமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


முக அங்கீகாரம் (Facial recognition) எனபது, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளுடன் இணைக்கப்பட்ட சீன நகர்ப்புற மையங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை விரிவாக நிலைநிறுத்தியதன் காரணமாக சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட குறிப்பிடத்தக்க வகையில் முன்னணியில் உள்ளது.


சீனாவுடனான ஒரு கூட்டு அணுகுமுறை அமெரிக்காவிற்கு எவ்வாறு பயனளிக்கும் ?


புதிய ஒத்துழைப்பின் விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பிரபாகர் financing Times-யிடம் அமெரிக்காவும் சீனாவும் சில மதிப்புகள் மற்றும் ஒழுங்குமுறை அணுகுமுறைகளில் அமெரிக்கா சீனாவுடன் உடன்படவில்லை என்றாலும், செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கான உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்த ஒப்பந்தமும் இதில் அடங்கும்.


செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை மெதுவாக்குவதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக தொழில்நுட்பத்தின் மேற்பார்வையை பராமரிக்க வேண்டும், என்று பிரபாகர் மேலும் வலியுறுத்தினார்.


செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கான ஜோபைடன் நிர்வாகத்தின் ஆரம்ப நடவடிக்கை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் போட்டி நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று விமர்சகர்கள் பரிந்துரைத்துள்ளனர். அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் கூட செயற்கை நுண்ணறிவை புரிந்துகொள்வதற்கும் மதிப்பிடுவதற்கும் தெளிவான வழிமுறைகளின் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றன என்று பிரபாகர் வாதிட்டார். தொழில்நுட்பத்தின் சிக்கலான மற்றும் ஒளிபுகா தன்மை காரணமாக புதிய செயற்கை நுண்ண்றிவு அமைப்புகளின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு கிடைக்கக்கூடிய விருப்பங்கள் போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.


செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படை மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான திறனை மட்டுப்படுத்துவதற்காக சீனாவிற்கான மேம்பட்ட சிப்புகளை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ள அதேவேளையில், அமெரிக்க மற்றும் சீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்புகள் (Chinese AI research ecosystems) ஆழமாக பிணைந்துள்ளன என்பதை வாஷிங்டன் அங்கீகரித்துள்ளது. அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், சீனாவிலிருந்து சில சிறந்த செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். மேலும் அந்த நாட்டிலிருந்து வரும் திறமைகள் உட்பட சீனாவுடனான இந்த உறவுகளில் சிலவற்றிலிருந்து வாஷிங்டன் பயனடையலாம்.


மற்ற புவியியல்களில் இந்த நல்லிணக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கும்?


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் ஒழுங்குமுறை குறித்து அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டால், அது இந்தியா உட்பட பிற நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


பணம் செலுத்துவதற்கான ஆதார் (Aadhaar) மற்றும் Unified Payments Interface (UPI) போன்ற பரவலான நிர்வாக தீர்வுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறது.


இந்தியா இந்த தீர்வுகளை மின்னணு பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) என்று குறிப்பிடுகிறது. இந்த அணுகுமுறையில், அரசாங்கம் தொழில்நுட்பத்தை அனுமதிக்கிறது மற்றும் தனியார் நிறுவனங்கள் வெவ்வேறு பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதே மின்னணு பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) உத்தியை செயற்கை நுண்ணறிவுக்கும் பயன்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.


இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு கணினி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (generative AI) மாடல்களுடன் போட்டியிடுவது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க சுகாதாரம், விவசாயம், நிர்வாகம், மொழி மொழிபெயர்ப்பு மற்றும் பலவற்றில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.


தற்போது, ஐரோப்பிய தொழில்நுட்ப விதிகள் குடிமக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதே நேரத்தில் அமெரிக்க அணுகுமுறை புதுமைகளை வலியுறுத்துகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உத்திகளிலிருந்து பெறப்பட்ட ஒரு கலப்பின அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என்று கொள்கை வகுப்பாளர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை குறித்த வளர்ந்து வரும் அமெரிக்க-சீன ஒருமித்த கருத்து மற்றொரு மதிப்புமிக்க மாதிரியை வழங்கக்கூடும்.




Original article:

Share: