முடிவில்லா போர்

 ரஷ்யா, உக்ரைன் மற்றும் நேட்டோ (NATO) ஆகியவை போரின் நடைமுறைகள் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டும்.   


உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது. இது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மேலும் பதட்டமான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது. பிப்ரவரி 2022 முதல் அவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர். கெய்வ் (Kyiv) விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறுகிறது. அந்த விமானத்தில் 65 உக்ரைன் வீரர்கள் இருந்தனர். இது ரஷ்ய எல்லை நகரமான பெல்கோரோடில் (Belgorod)  விழுந்து நொறுங்கியது. இந்த நகரம் சமீபத்திய மாதங்களில் பல முறை உக்ரைனால் வெடி குண்டு தாக்குதலுக்கு உள்ளானது. கெய்வ் ரஷ்யாவின் கூற்றை மறுத்து, அதை பொய் பிரச்சாரம் என்று அழைத்தார். இருப்பினும், கியேவ் விபத்தில் அதன் சாத்தியமான ஈடுபாட்டை முழுமையாக மறுக்கவில்லை.

ரஷ்யாவின் அதிகரித்து வரும் முன்னேற்றங்களால் உக்ரைன் படைகள் போர்முனையில் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்யா, போர்க்களத்தில் மீண்டும் வேகம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, தெற்கு மற்றும் கிழக்கில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்ற ஜூன் 2023 இல் தொடங்கப்பட்ட எதிர் தாக்குதல் தோல்வியடைந்ததாக உக்ரைனின் உயர்மட்ட ஜெனரல் ஒப்புக்கொண்டார். மேலும் ரஷ்யா மரிங்காவைக் (Mariinka) கைப்பற்றியது, அவ்டிவ்கா (Avdiivka) மற்றும் குபியான்ஸ்க் (Kupiansk) நோக்கி முன்னேறி கிழக்கு பிராந்தியத்தில் வெற்றிகளை அடைந்துள்ளது.


உக்ரைனின் இராணுவத் தலைவர்கள் இப்போது 500,000 வீரர்களை அணிதிரட்ட பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இந்த நடவடிக்கை பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும். மேலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறி வருவது கியேவிற்க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


விமான விபத்து பற்றிய உண்மையைக் கண்டறிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கம் உறுதியாக உள்ளது. உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தினால், அது ஜெலென்ஸ்கிக்கு அரசியல் பிரச்சனையாகிவிடும். இருப்பினும், அவர் இன்னும் பெரிய பிரச்சினையை எதிர்கொள்கிறார்.  இதுவரை, ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட அனைத்து பகுதிகளையும் உக்ரைன் மீட்டெடுக்கும் வரை போராடுவதில் ஜெலென்ஸ்கி உறுதியாக இருந்தார்.  ஆனால் உக்ரைன் வெற்றி பெற ஒரு யதார்த்தமான வழி இருப்பதாகத் தெரியவில்லை. காசா மீதான இஸ்ரேலின் போரால் சர்வதேச சமூகம் திசைதிருப்பப்பட்டுள்ளது, இதற்கு ஜோபைடன் அரசங்கம் முழுமையாக ஆதரவளிக்கிறது. 


நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தல் உக்ரைனையும் பாதிக்கலாம். குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். இது உக்ரைனுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். யுத்தம் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான ஆதரவைப் பொறுத்தது. அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதால், உக்ரைன் ரஷ்யாவிற்குள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் அதிநவீன ஆயுதங்கள் காரணமாக இந்த தாக்குதல்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது. உதாரணமாக, கடந்த வாரம், ரஷ்யாவின் பால்டிக் (Baltic) கடற்கரையில் உள்ள எரிபொருள் ஏற்றுமதி முனையம் (fuel export terminal) தாக்கப்பட்டது.


இரு தரப்பினருக்கும் ஆழ்ந்த சந்தேகமும் அவநம்பிக்கையும் உள்ளது. இது மேலும் வன்முறை மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.   ரஷ்யா, உக்ரைன் மற்றும் நேட்டோ ஆகியவை போரின் முன்னேற்றத்தை யதார்த்தமாக மதிப்பிட வேண்டும். எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கும் போரைத் தொடராமல் பேச்சு வார்த்தைகளைத் தொடங்குவது பற்றி அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.  




Original article:

Share: