இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு உறவுகள் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெற்றுள்ளது -சுஹாசினி ஹைதர், திராகர் பெரி

 பிரான்ஸ் பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறது, "விதிகளுக்கு இணங்குவது" (compliance with rules) முக்கியம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது.


பாதுகாப்பு உற்பத்தியில் ஒத்துழைக்க இந்தியாவும் பிரான்சும் "பாதுகாப்பு தொழில்துறை திட்ட வரைவை" (defence industrial roadmap) அறிமுகப்படுத்தியுள்ளன. இது, எதிர்கால ஒத்துழைப்பான இராணுவ தளவாடங்களை இருநாடுகளும் இணைந்து வடிவமைத்தல் (co-design)  மற்றும் இணைந்து மேம்படித்துதல் (co-development) ஆகியவற்றை இது உள்ளடக்கியது. ஜனவரி 25 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளும் விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான பல ஒப்பந்தங்களை உறுதி செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது, இது இந்தியா-அமெரிக்காவுடன் சில சமத்துவத்தையும் கொண்டு வரும்.  இதன் அடிப்படையில், பாதுகாப்பு உற்பத்தி திட்டம் (defence production plan) கடந்த ஆண்டு நிறுவப்பட்டது.  


இருப்பினும், திட்டத்தில் உள்ள சில மொழிகளின் கருத்து வேறுபாடுகள் ஜனவரி 26 அன்று ஒரு "கூட்டு அறிக்கை" (joint statement) வெளியிடுவதை பல மணி நேரம் தாமதப்படுத்தின. இந்தியாவுக்கான தனது குறுகிய 30 மணி நேர பயணத்தின் போது, திரு மேக்ரான், அவரது புதிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே உட்பட 40 அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவுடன் பல்வேறு நிபந்தனைகள் குறித்து விவாதித்தனர். இந்த விவாதங்கள் "விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு" (space situational awareness) ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பு-விண்வெளி கூட்டாண்மைக்கான ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வழிவகுத்தது. கூடுதலாக, இரு நாடுகளும் செயற்கைக்கோள் ஏவுதல்களை ஒருங்கிணைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன மற்றும் ஆற்றல், டிஜிட்டல் சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒப்பந்தங்களிலும் கையெழுத்து மேற்கொண்டனர் .

ஏர்பஸ் (Airbus)-டாடா ஹெலிகாப்டர் (TATA chopper) ஒப்பந்தம்


கடந்த ஜூலை மாதம் மோடியின் பாரிஸ் பயணத்திலிருந்து, போர் விமானங்கள், என்ஜின்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான அரசாங்கங்களுக்கு இடையிலான பெரிய ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் முன்னேற்றத்தை அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த பயணத்தின் போது ஏர்பஸ் மற்றும் TATA நிறுவனங்களுக்கு இடையே சிவிலியன் ஹெலிகாப்டர்களை (civilian helicopters) உள்ளூரில் தயாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள், 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் (Rafale-M fighter jets) மற்றும் மூன்று கூடுதல் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் (Scorpene-class conventional submarines)  தற்போது செலவுக்கான பேச்சுவார்த்தை கட்டத்தில் உள்ளன, அவை இந்த ஒப்பந்தங்கள் ஆண்டு இறுதிக்குள் முடிவடையக்கூடும் என்று எதிர்பார்க்கக்கூடும்.


வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ராவின் கூற்றுப்படி, தொழில்துறை பாதுகாப்பு திட்ட வரைவு (industrial defence roadmap) முதன்மை கவனம் பாதுகாப்பு தொழில்துறை துறையில் கூட்டு வாய்ப்புகளை அடையாளம் காண்பதாகும். இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளை (defence supply chains) உருவாக்க இணை வடிவமைப்பு, இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்தி ஆகியவற்றை இது வலியுறுத்துகிறது. இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், இதே போன்ற தயாரிப்புகள் தேவைப்படும் மற்றவர்களுடன் பாதுகாப்பு கூட்டாண்மைக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விமானம், நிலம் மற்றும் கடல்சார் போர், நீருக்கடியில் கள விழிப்புணர்வு, விண்வெளி, ரோபோ தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் வாகனங்கள் ஆகியவை இந்த ஒப்பந்ததில் ஒரு பகுதியாக உள்ளது.


விசாக்களுக்கு (visa) சில கட்டுப்பாடுகள்


திரு. குவாத்ரா மேலும் கூறுகையில், பிரெஞ்சு ஊடகவியலாளர் ஒருவரை அரசாங்கத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர், நாடு கடத்தப்படலாம் என்ற பிரச்சினையையும் பிரெஞ்சு அரசாங்கம் எழுப்பியுள்ளது. ஆனால் இது "விதிகளுக்கு இணங்குதல்" (compliance of the rule) என்று வலியுறுத்தினார். வெள்ளிக்கிழமை, இந்தியாவில் உள்ள 30 வெளிநாட்டு நிருபர்கள் ஒரு எதிர்ப்பு கடிதத்தை வெளியிட்டனர். அதில் விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பதற்கான சவால்களை வெளிப்படுத்தியும், இந்தியாவின் ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப சுதந்திரமான பத்திரிகை துறையின் அத்தியாவசிய பணிகளை ஆதரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் தெரிவித்தனர்.


ஜெய்தாப்பூரில் அணு உலைகள் கட்டுவதற்கான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (civil nuclear cooperation agreement) 2009-ல் கையெழுத்தானது. இந்த, ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு தரப்பும் எந்த முன்னேற்றத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் 2020 இல், பிரெஞ்சு நிறுவனமான எலக்ட்ரிசைட் டி பிரான்ஸ் (Electricite de France (EDF)) ஒரு தொழில்நுட்ப-வணிக சலுகையை வழங்கியது. தாமதம் குறித்து தி இந்துவிடம் கேள்வி எழுப்பியபோது, எலக்ட்ரிசைட் டி பிரான்ஸ் (Electricite de France (EDF)) மற்றும் இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India(NPCIL)) ஆகியவற்றுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் பொறியியல் அம்சங்கள், நிதியளிப்பு செயல்முறையை அமைத்தல் மற்றும் விநியோகங்களின் உள்ளூர்மயமாக்கலை உறுதி செய்வது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாக திரு. குவாத்ரா விளக்கினார்.


இராஜதந்திர கூட்டாண்மை


பிரான்சுடனான பாதுகாப்பு தொழில்துறைத் திட்ட வரைவு (defence industrial roadmap), இராணுவ அமைப்புகளுக்காக அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பைப் போலவே, இணை வடிவமைப்பு (co-designing), இணை மேம்பாடு (co-development) மற்றும் இணை உற்பத்தியில் (co-production) கவனம் செலுத்துகிறது. எவ்வாறாயினும், பிரான்சுடனான இராஜதந்திர கூட்டாண்மையின் தனித்துவமான ஆழம் அவர்களின் இணை வடிவமைப்பு முயற்சிகள் மற்றும் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ள ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள பிரான்சின் விருப்பமானது ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்ள முடியாததை அடுத்து, மோடியின் குடியரசு தின அழைப்பை திரு.மேக்ரான் ஏற்றுக்கொண்டதே இந்தியா-பிரான்ஸ் உறவுகளை வலுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது, திரு மேக்ரானின் மூன்றாவது இந்திய பயணமாகவும், ஜனவரி 2023 முதல் திரு மோடியுடனான ஏழாவது சந்திப்பாகவும்  அமைந்ததுள்ளது. பிரான்ஸ் அதிபர் ஒருவர் குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்படுவது இது ஆறாவது முறையாகும்.


திரு குவாத்ராவின் கூற்றுப்படி, இந்த சந்திப்புகள் இருநாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை மீதான தலைவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறவுக்கு வழங்கப்பட்ட உயர்மட்ட மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலை பிரதிபலிக்கின்றன. 


பார்வையாளரை கௌரவிக்கும் வகையில், திரு. மோடியும் திரு. மேக்ரானும் ஒன்றாக போஸ் கொடுக்கும் நூற்றுக்கணக்கான ஆளுயர  சுவரொட்டிகளை (life-size posters) தேசிய தலைநகரம் அலங்கரித்தது.




Original article:

Share: