ஊடகவியலாளர்கள் கொள்கையில் சமூக ஊடகங்களுக்கு இருக்கும் சக்தியை அடிக்கடி காட்டுகிறார்கள்.
பத்திரிகை மற்றும் இராஜதந்திரம் ஆகியவை "இருண்ட காலத்தில்" (Dark Ages), அதாவது, இணையத்திற்கு முந்தையகாலங்களில் (pre-Internet) முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதர்கள் தொலைப்பேசி அல்லது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செய்தி சேவைகள் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஒரு லேண்ட்லைன் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். மேலும் தனிப்பட்ட செயலாளரின் மூலமும் அழைப்புகள் அனுப்பப்படும். அந்த நாட்களில், செய்திகள் வெளியாகும் போது, அதிகமாக சமூக ஊடக செய்திகளில் அரசாங்க அறிக்கைகளை பெறவில்லை. மேலும், சாஸ்திரி பவனுக்கு (Shastri Bhawan) இந்திய வெளியுறவு அமைச்சகத்து வெளிப்புற விளம்பர (External Publicity (XP)) பிரிவிற்குச் சென்று தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருந்தது. இது பெரும்பாலும் செயலகத்தின் குழு (secretarial team) வழியாகச் செல்லும்.
முக்கிய வெளியுறவுக் கொள்கை அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் இடுகைகள் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட தாள்களில் (cyclostyled sheets) அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், அச்சு ஊடகவியலாளர்களை அடிக்கடி சந்திப்பார். இராஜதந்திர உறவுகளும் அப்போது விவேகமாக செயல்படுவர். தூதுவர் வரவழைக்கப்பட்டாலோ அல்லது ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டாலோ, பத்திரிகையாளர்கள் தங்கள் ஆதாரங்களைச் சார்ந்து இருக்க வேண்டும், இது பெரும்பாலும் நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகும். அதற்குள், பிரச்னை முடிவுக்கு வந்திருக்கலாம். இருப்பினும், இதற்கிடையில் விஷயங்கள் கணிசமாக மாறிவிட்டன. இப்போதெல்லாம், இராஜதந்திர தகராறுகள் உடனடியாக எழலாம், மேலும் முழு கதையும் உலகளவில் உண்மையான நேரத்தில் வெளிப்படுகிறது.
இந்த வார இந்தியா-மாலத்தீவு பிரச்சனை, சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட மற்றும் கையாளப்பட்ட இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நெருக்கடிக்குக் காரணம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பொதுவாக இந்தியர்கள் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகள்தான் இதற்கு காரணம். பின்னர், மாலத்தீவு அரசாங்கம் இந்த அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களின் பதிவுகள் இந்தியாவில் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தின் பிரதிபலிப்பாகத் தோன்றியது. இது திரு.மோடியின் லட்சத்தீவு பயணத்தை சுற்றுலா மேம்பாடு மட்டுமல்ல, மாலத்தீவை எதிர்ப்பதற்கான ஒரு இராஜதந்திர நடவடிக்கையாகவும் பார்க்க வைத்தது. மாலத்தீவு அரசு சமீபத்தில் இந்தியாவை கவலைபடுத்தும் அளவிற்கு சில முடிவுகளை எடுத்தது. சமூக ஊடகங்களில் இந்தியர்களின் கடுமையான எதிர்வினை காரணமாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டனர் மற்றும் சவுத் பிளாக்கிற்கு (South Block) மாலத்தீவு தூதரை வரவழைத்து விளக்கம் கேட்டனர். இந்திய பயண நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவுடன், இணைய வழியில் #BoycottMaldives பிரச்சாரம் கூட இருந்தது. இது செய்தி சேகரிக்க மாலத்தீவுக்குச் சென்ற பத்திரிகையாளர்களையும் குறிவைத்தது. எவ்வாறாயினும், இந்த நிலைமை இராஜதந்திர அம்சத்தை மறைக்க முடிந்தது மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்பார்த்ததை விட இருதரப்பு உறவுகளுக்கு அதிக தீங்கு விளைவித்தது.
மாலத்தீவு சம்பவம் அசாதாரணமானது, ஏனென்றால் அமைச்சர்களிடமிருந்தே அவதூறான ட்வீட்கள் வந்தன. இப்போதெல்லாம், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அல்லாதவர்களின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுகிறது. உதாரணமாக, சமீபத்தில், ஐரோப்பாவில் உள்ள ஒரு இந்திய மாணவர் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்திற்கு வெளியே திரு. மோடி மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் போஸ்டர்களைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானது, மேலும் சமூக ஊடகங்களில் ஆர்வலர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த "அவமதிப்பிற்கு" (insult) எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரினர். சில மணி நேரங்களில், ஐரோப்பிய நாட்டின் தூதுவர் வெளியுறவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. பல நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தினமும் நடக்கும் ஐக்கிய நாடு அலுவலகத்திற்கு வெளியே சுவரொட்டிகள் மீது ஐரோப்பிய நாடு என்ன செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. டெல்லியின் புறநகரில் மூன்று பண்ணை மசோதாக்களுக்கு (farm bills) எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்த பிரபல பாப்ஸ்டார் மற்றும் டீனேஜ் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியோரின் சமூக ஊடக பதிவுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக பதிலளித்ததால் தூதர்கள் மேலும் குழப்பமடைந்தனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த சர்வதேச பிரபலங்களின் எதிர்ப்பை "திட்டமிடப்பட்ட" (vested) மற்றும் "செயல்திட்ட இயக்கம்" (agenda-driven) என்று விவரித்தது, ஆனால் அமைச்சகம் ஏன் அவர்களுக்கு முதலில் பதிலளித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஊடகவியலாளர்கள் என்ற வகையில், கொள்கையில் சமூக ஊடகங்களின் தாக்கம் வைரலான பதிவுகளை விட குறைவான கவனத்தைப் பெறுகின்றன. உண்மையான முன்னேற்றங்களைக் காட்டிலும் இணையத்தில் உருவாக்கப்பட்ட கதைகளில் கவனம் செலுத்துகிறோம். கவிஞர் டிலான் தாமஸ் பரிந்துரைத்தபடி எல்லாவற்றுக்கும் வலுவாக எதிர்வினையாற்றுவதே தீர்வாக இருக்காது. மாறாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான முக்கியமான பிரச்சினைகளுக்கும், முக்கியமில்லாவைகளுக்கும் இடையில் வேறுபடுத்துவது ஆகும். சாதாரண இணைய சர்ச்சைகள் சாதாரண இராஜதந்திர விவாதங்களை மறைக்க விடாமல் நாம் அவற்றைக் கையாள வேண்டும்.