முதல் முறையாக, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக்கூடங்கள் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிக்கான தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவுத் திட்டத்தைப் (TEALS) பெறவுள்ளன

 தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மைக்ரோசாப்ட்  நிறுவனத்துடன் உடன் இணைந்து தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு (Technology Education and Learning Support (TEALS)) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.  


டிஜிட்டல் பிளவைக் குறைக்கும் முயற்சியில், பள்ளிக் கல்வித் துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வியாழன் அன்று தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவு (TEALS) திட்டத்தை மேலதிக பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியது. இந்த விரிவாக்கத்தில் அதிக பள்ளிகள் சேர்க்கப்படும்.  


இந்த முயற்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆசிரியர்களை மாற்றுவது அல்ல என்று அவர் கூறினார். இது அவர்களின் பங்கை மேம்படுத்துவதாகும். ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு நண்பராக பார்க்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தக் கூட்டாண்மை முக்கியமானது.


முதற்கட்டமாக, இந்த திட்டம், மூன்று மாவட்டங்களில் உள்ள 14 பள்ளிகளில்   தொடங்கியது. இதில் 10 அரசு பள்ளிகள், இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் அடங்கும். தற்போது இத்திட்டம் 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் இப்போது HTML, C++, Python, கேம் டெவலப்மென்ட் (game development) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கத் தயாராக உள்ளனர்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பேசினார். தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையே ஒரு கூட்டு உறவை அவர் வலியுறுத்தினார். கல்வியில் அனைவரும் மாணவர்களே என்றார். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என்ற வேறுபாடு கிடையாது. ஒருவரையொருவர் சென்று கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 


இந்த முயற்சி இந்தியாவில் புதியது. இது ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும். இந்த திட்டம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க உதவ விரும்புகிறது. இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் பயிற்சியை தொடங்கினர். அவர்கள் தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு  தொகுதியைக்  (TEALS module)  கற்பிக்கிறார்கள். இந்த   பாடத்திட்டத்தை  மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது. மைக்ரோசாப்ட் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வழங்குகிறது. மைக்ரோசாப்ட் அவர்களின் முன்னேற்றத்தை அவ்வப்போது சரிபார்த்து வருவதாக திண்டுக்கல்லில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி கூறினார். 


திண்டுக்கல்லைச் சேர்ந்த கணினி அறிவியல் ஆசிரியை சத்யா கூறியதாவது: மாணவர்களிடையே இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் இப்போது விளையாட்டு மேம்பாட்டைக் (game development) கற்றுக்கொள்கிறார்கள், இது அவர்களுக்கு ஆர்வமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் அதை தினமும் சந்திப்பார்கள். கூடுதலாக, மாணவர்களுக்கான சிறு திட்டப்பணிகளும் (mini projects) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மைக்ரோசாப்டின் டேட்டா (DATA) மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) இயக்குனர் செசில் எம்.சுந்தர் கூறுகையில், 5-10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வேலைகளுக்கான தேவை ஏற்படும். தற்போது பயிற்சி பெறும் மாணவர்கள் இந்த தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு திறன்களை பெற்றிருப்பதால் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.  TEALS  திட்டத்திற்காக, சிறந்த கற்றலுக்காக பள்ளிகளுக்கு கூடுதல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் பயிற்சியாளர்களும் பள்ளிகளுக்குச் சென்று திட்டங்களை மேற்பார்வையிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


கடந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் அமெரிக்கப் பயணத்தின் போது, மாநில அரசுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. செயற்கை நுண்ணறிவு பயிற்சியை தமிழக மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஜே.குமரகுருபரன், இணை தலைமை நிர்வாக அதிகாரி உமா கேசனி, கீக்மைண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் கோபாலகிருஷ்ணன், நம்ம ஊரு பள்ளியின் (Namma School Namma Ooru Palli ) உறுப்பினர் செயலாளர் ஆர்.சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 




Original article:

Share: