பட்ஜெட் 2024: இந்தியாவை சீர்திருத்த, செயல்படுத்த மற்றும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது -அருந்ததி பட்டாச்சார்யா

 அதிக மூலதன முதலீடுகளில் கவனம் செலுத்துவது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (Micro, Small and Medium Enterprises(MSME)) மைய முயற்சிகள் உலகளவில் போட்டியிட உதவும். நிலையான வளர்ச்சிக்கும் இந்த பட்ஜெட் ஆதரவு அளிக்கிறது. 


விடாமுயற்சி, புத்திக்கூர்மை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி வலுவானதாகவும், நெகிழ்திறன் கொண்டதாகவும் உள்ளது. 2024 இடைக்கால பட்ஜெட் (interim Budget) இந்தியாவின் நலனுக்காக சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தை வலியுறுத்துகிறது. இது நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் பாதிக்கப்படக்கூடிய நான்கு குழுக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியவை சார்ந்தது. அதிகரித்த மூலதன முதலீடுகள் (increased capital investments) வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises(MSME)) உள்நாட்டிலும் உலகளவிலும் இன்றியமையாதவை. அக்டோபர் 2023க்குள், 'ஸ்டார்ட்அப் இந்தியா' (Startup India) மூலம் 1.14 லட்சம் ஸ்டார்ட்-அப்களை (Startup) அரசாங்கம் அங்கீகரித்தது. இது 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியது. வரவிருக்கும் சீர்திருத்தங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) நிதி, தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும், நிலையான, வளம் வாய்ந்த  வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.


இந்தியா அதன் திறமையான மற்றும் இளமையான மக்கள்தொகைக்கு பெயர் பெற்றது. இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (science, technology, engineering, and math(STEM)) படிப்புகளில் பெண்களின் சேர்க்கையில் 43% அதிகரிப்பு மிகவும் மகிழ்ச்சியடைகிறது, இது உலகளவில் மிக அதிகமாகும். நம் நாடு பரந்த மற்றும் மாறுபட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மதிப்புமிக்க தரவுத்தொகுப்புகளை வழங்குகிறது. இந்தியா தனது மக்களின் தொழில்முனைவு மற்றும் படைப்பாற்றல் மூலம் புதுமையான தீர்வுகளை தீவிரமாக காட்சிப்படுத்தி வருகிறது. தொழில்நுட்பம், இளைஞர்கள் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவை அரசாங்கத்தின் யுக்திக்கு முக்கிய மைல்கல்லாக உள்ளது. இங்கு, 50 ஆண்டு வட்டியில்லா கடனுடன் ₹1 லட்சம் கோடி கார்பஸ் (corpus-ஒரு பொருளை பற்றிய முழுமையான தொகுப்பு) உருவாக்கம் ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும். இந்த முன்முயற்சி நமது இளைஞர்களின் பலம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து மேலும் புதுமைகளை ஊக்குவிக்கிறது.


நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, இந்தியா முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பாகும், மேலும் இது அனைத்து தலைவர்களுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக இருந்து வருகிறது. 2070க்குள் 'நிகர பூஜ்ஜியத்தை' (net-zero) அடைவதற்கான நமது உறுதிப்பாட்டை நிறைவேற்ற, காலநிலை மாற்றத்தின் மீது வலுவான நடவடிக்கை எடுப்பது அவசியம். மேலும், விரிவான வளர்ச்சியுடன் உயர் வளர்ச்சிப் பாதையில் மேற்கூரை சூரிய ஒளி (rooftop solar), கடலோர காற்றாலை மின் உற்பத்தி (offshore wind power generation), உயிரி எரிபொருளைக் கலப்பது (mixing of biofuels) போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் கவனம் செலுத்துவது ஊக்கமளிக்கிறது. இது நமது வளர்ச்சி நிலையானது என்பதை உறுதி செய்கிறது.


இனிவரும் காலங்களில், தொழிலாளர் தொகுப்பில் அதிகமான பெண்களையும், இவர்கள் தலைமையிலான முயற்சிகளும் மிக முக்கியமானவையாக கொண்டுவர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், வலுவான, நீடித்த வளர்ச்சியை அடைவதே இந்தியாவின் முன்னுரிமையாகும். இந்த குழுவிற்கான திட்டங்களில் இவர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட கவனம் செலுத்தப்படுகிறது. இந்த பட்ஜெட் தேவையற்ற ஜனரஞ்சக (populist) நடவடிக்கைகளை தவிர்த்து, இந்தியாவை அதன் உயர் வளர்ச்சிப் பாதையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது.


அருந்ததி பட்டாச்சார்யா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர், சேல்ஸ்ஃபோர்ஸ் இந்தியா மற்றும் SBI-ன் முன்னாள் தலைவர் ஆவார்.




Original article:

Share: