நிதி ஒருங்கிணைப்பு (Fiscal consolidation) முக்கிய கருப்பொருளாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டானது (interim Union budget) சவாலான உலகளாவிய நிலைமைகளின் போது அறிவிக்கப்பட்டது. இறுக்கமான நாணயக் கொள்கை (tight monetary policy), அதிக கடன் அளவுகள் மற்றும் மெதுவான உற்பத்தித்திறன் வளர்ச்சி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் ஜனவரி 2024-ன் படி உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. நடந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள், குறிப்பாக மத்திய கிழக்கில், பொருட்களின் விலை அதிகரிப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றன. இருப்பினும், இந்தியா இன்னும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 7% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (real GDP) வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் தேசியளவில் தேர்தல்கள் இருந்தபோதிலும், வரவுசெலவுத் திட்டம் (budget) நேரடி பண பரிமாற்றங்கள் மற்றும் கையளிப்புகள் போன்ற முக்கிய ஜனரஞ்சக நடவடிக்கைகளை (populist measures) தவிர்த்து, அதற்கு பதிலாக இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களில் கவனம் செலுத்தியது. இதன், முக்கிய கருப்பொருள் நிதி ஒருங்கிணைப்பு ஆகும். நீண்ட கால கொள்கை முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதுடன், அதன் மூலதன செலவின உந்துதலையும் அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆகக் குறைக்க பட்ஜெட் திட்டமிட்டுள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 5.8% ஆக இருந்தது. 2021-22 பட்ஜெட் உரையிலிருந்து நிதியமைச்சரின் உறுதிப்பாட்டுடன் இணைந்து, அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஆக குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக இந்த அர்ப்பணிப்பு ஆரம்பத்தில் லட்சியமாகக் காணப்பட்டது. இந்தியாவின் உயர் பொதுக் கடன் (elevated public debt) அளவுகளைக் கருத்தில் கொண்டு நிதி ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. இது நிலைத்தன்மைக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், கணிசமான வட்டி செலுத்துதல்களுக்கு வழிவகுக்கிறது. நிதி ஒருங்கிணைப்புக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அரசாங்கத்தின் கூடுதல் முக்கியத்துவம் பெருகிறது. ஏனெனில் கடன் அளவுகள் மத்திய அரசாங்கத்தின் செலவினங்களில் மிகப்பெரிய பகுதியாகும். குறிப்பாக உயர்ந்த வட்டி விகிதங்களின் காலங்களில், இந்த அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த கடனைக் குறைப்பதற்கு சாதகமானது.
கூடுதலாக, மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டை விட வளர்ச்சியானது குறைவாக இருந்தாலும், நிதி சரிசெய்தல் மற்றும் ஒருங்கிணைப்பு என்ற ஒட்டுமொத்த கருப்பொருளைக் கருத்தில் கொண்டால், இது இன்னும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
மேலும், மூலதன செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு 50 வருட வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தர மதிப்பீடுகள் மற்றும் வரையறைகளின் அடிப்படையில் சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்கள் இந்த நீண்டகால, வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். இந்த, இரண்டு அறிவிப்புகளும் மூலதன செலவினங்களை வலியுறுத்துவதில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைத்து வருவதைக் குறிக்கின்றன.
நிதி ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவதைத் தவிர, நீண்டகால கொள்கை முயற்சிகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. ஒரு முக்கியமான உதாரணம், "சூரியோதயம்" (sunrise) துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதியின் குறிப்பிடத்தக்க உதாரணமாகும். தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு குறைந்த செலவில், நீண்ட கால நிதியுதவியை அணுக முடியும். ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களில் உலகளாவிய நட்பு நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளதால், இந்த முயற்சி புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், குறிப்பாக உடனடி நிதி வருவாய் (immediate financial returns) வெளிப்படையாக இல்லாத பகுதிகளில் தனியார் துறையின் முதலீட்டை ஊக்குவிக்கும்.
மேலும், 2070 க்குள் "நிகர பூஜ்ஜிய" (net-zero) பொருளாதாரத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக பல முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் கடல் காற்றாலை ஆற்றலுக்கான நிதியுதவியும் அடங்கும். இது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas(CNG)) மற்றும் குழாய் இயற்கை எரிவாயு (Piped Natural Gas(PNG)) உடன் உயிர்வாயுவை கலப்பதை கட்டாயமாக்குகிறது. வீடுகள் இலவச மின்சாரத்தை அணுக அனுமதிக்கும் கூரை சூரிய ஒளிமயமாக்கல் திட்டத்தின் அறிவிப்பு, இந்தியாவின் ஆற்றலின் சூரிய சக்தியின் விகிதத்தை அதிகரிப்பதில் அரசாங்கத்தின் தற்போதைய கவனத்துடன் ஒத்துப்போகிறது. இதன் விளைவாக, 2070 நிகர பூஜ்ஜிய இலக்கை (net-zero target) அடையும் நோக்கில் செயல்படுகிறது.
கட்டுரையாளர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஃபைனான்ஸ் அண்ட் பாலிசி