ஆசியாவிற்கான கிரேக்கத்தின் நுழைவாயில், ஐரோப்பாவிற்கான இந்தியாவின் நுழைவாயில் -அலெக்சிஸ் பாபஹெலாஸ்

 கிரேக்கம்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடு, இந்தியா ஒரு பழமையான மற்றும் பாரம்பரிய நட்பு நாடு மற்றும் எழுச்சி பெறும் சக்தி என்ற கருத்து ஏதென்ஸின் பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது.  


கிரேக்க பிரதம மந்திரி கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிப்ரவரி  21-22 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்தியா மற்றும் கிரேக்கம் இடையேயான இராஜதந்திர உறவை வலுப்படுத்துவதை இந்த பயணம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2023 இல் கிரேக்கத்துக்கு பயணம் செய்தபோது இதற்கான திட்டம் தொடங்கியது. அவரது வருகை கிரேக்கத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் வணிகத் தலைவர்களிடையே. இந்தியாவுடன் ராஜீய கூட்டணியை உருவாக்குவதற்கான திறனை அவர்கள் கண்டனர்.


இந்தப் பயணத்தின் முன், திரு.மிட்சோடாகிஸ் இருநாட்டு தரப்பு உறவுகளையும் பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதியை வெளிப்படுத்தினார். இந்தியாவிற்கு ஐரோப்பாவிற்கு கிரேக்கம் சிறந்த நுழைவாயில் என்றும், அதேபோன்று, இந்தியாவுடனான நெருக்கமான இராஜதந்திர உறவு கிரேக்கத்துக்கு ஆசியாவிற்கான சிறந்த நுழைவாயிலாக விளங்குகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏதென்ஸ் பயணம் இருதரப்பு உறவுகளில் வேகத்தை உருவாக்கியது என்று திரு.மிட்சோடாகிஸ் குறிப்பிட்டார். அவரது இந்திய பயணத்தின் மூலம் இந்த வேகம் மேலும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 


கிரேக்கம் இந்தியாவை ஒரு பழைய மற்றும் பாரம்பரிய நண்பனாக மட்டும் பார்க்காமல், வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில் வளர்ந்து வரும் பெரிய சக்தியாகவும் பார்க்கிறது. இந்த பயணத்தின் போது, திரு மிட்சோடாகிஸுடன் கிரேக்க வணிகத் தலைவர்களின் தூதுக்குழுவும் வரும். ஆசியாவின் நுழைவாயிலாக மட்டுமின்றி, தங்களது உலகளாவிய செயல்பாடுகளுக்கான உற்பத்தித் தளமாகவும் இந்தியாவின் திறனைப் பற்றி அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.


பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவம்


கிரேக்கம் மற்றும் இந்தியா ஆகியவை அவற்றின் புவியியல் இருப்பிடங்கள் காரணமாக உலகளாவிய அமைப்பில் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை, ஆனால் அவை அந்த பகுதிகளில் புவிசார் அரசியல் ஏற்ற இறக்கத்தையும் அனுபவிக்கின்றன. செங்கடலில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள், கிரேக்கம் அமைந்துள்ள கிழக்கு மத்தியதரைக் கடலின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழுமை ஆகியவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நல்வாழ்வைப் பெரிதும் சார்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.


இந்தியா மற்றும் கிரேக்கத்தில் உள்ள அரசியல் தலைமைகள், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான உறவை ஏற்படுத்துவதற்கான முக்கியமான இராஜதந்திர காரணங்கள் மற்றும் அவசரம் பற்றி முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் அறிந்துள்ளது.


பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பு


பல ஆண்டுகளாக, இராஜதந்திர, இராணுவ மற்றும் வணிக விஷயங்களில் இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மெதுவாக முன்னேறி வருகிறது. இந்திய கடற்படையும் விமானப்படையும் கிரேக்க ஆயுதப் படைகளுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன. இருநாட்டு தரப்பிலிருந்தும் வணிகங்கள் மீதான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. உதாரணமாக, ஒரு இந்திய கட்டுமான நிறுவனம் கிரேக்கத்தில் ஒரு விமான நிலையத்தை கட்ட கிரேக்க நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. மேலும், ஒரு முக்கிய இந்திய வணிக குடும்பம் கிரேக்க உணவு நிறுவனங்களில் அதிக முதலீடு செய்துள்ளது. மேலும், நடுத்தர அளவிலான இந்திய கப்பல் நிறுவனம் ஒன்று ஏதென்ஸில் ஒரு தரகு நிறுவனத்தை அமைத்துள்ளது. இது டிரான்ஸ்-அட்லாண்டிக் கப்பல் போக்குவரத்தில் ஒரு முக்கிய வீரராக இருக்கும் நோக்கில் உள்ளது. மேலும், உலகளவில் பரஸ்பர நிதி தயாரிப்புகளை (mutual fund products globally) விற்க ஒரு கிரேக்க சிஸ்டமிக் வங்கி (systemic bank in Greece) ஒரு பெரிய இந்திய நிதி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கிரேக்கத்தின் உயர்மட்ட நீண்டகால வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒருவரான இந்திய-கனடா பில்லியனர் பிரேம் வத்சா ஆவார். அவர் கிரேக்க முதலீடு செய்ய சிறந்த ஐரோப்பிய நாடு என்று நம்புகிறார் மற்றும் கிரேக்க-இந்திய வணிக ஒத்துழைப்பை தீவிரமாக ஊக்குவிக்கிறார். ஆனால் கேள்வி என்னவென்றால், இது போதுமா? 

 

கிரேக்கத்தில் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்காக மிட்ஸோடாகிஸ் அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துகையில், கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் தன்னை ஒரு நம்பகமான கூட்டாளியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கையில், இந்தியா-மத்திய, கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (India-Middle East-Europe Economic Corridor (IMEEC)) நிறுவுவதற்கான நிபந்தனை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழித்தடம், இந்தியா மற்றும் கிரேக்கம் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதை கிரேக்கம் வலுவாக ஆதரிக்கிறது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை (bilateral trade and investment agreement (BTIA)) விரைவுபடுத்த பணியாற்றி வருகிறது.


ஒரு வரலாற்றுப் பின்னணியில், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் பிப்ரவரி 1963 இல் பாலம் விமான நிலையத்தில் (Palam airport) கிரேக்க மன்னர் பால் மற்றும் ராணி பிரடெரிகா ஆகியோரை வரவேற்றனர்.


மேலும் இணைப்புகளுக்கான நோக்கம்


நமது பழங்கால தொடர்புகளைப் பாதுகாக்க, மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் கவனிக்காமல் விடக்கூடாது. கிரேக்கமும் இந்தியாவும் நவீனமயமாகும்போது தொடர்ந்து இணைந்திருக்க முயற்சி செய்வது மிகவும் முக்கியமானது. உறவை மேம்படுத்த, பல்கலைக்கழக மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சிகள், அதிக கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஊடகங்களில் அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இரு நாடுகளிலும் உள்ள சிந்தனைக் குழுக்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், கிரேக்கத்திக்கும் இந்தியாவுக்கும் இடையே பயண இணைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டவட்டமான தேவை உள்ளது. 


கிரேக்கம் மற்றும் இந்தியா அரசியல் தலைவர்கள் அடிக்கடி பரஸ்பரம் வருகை புரிவது, இரு நாடுகளின் உறவை விரைவாக முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் கொண்டுள்ள வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இப்போது, அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வணிகங்கள் இதைப் பின்பற்ற வேண்டும். 2024 இல், உலகமும் ஐரோப்பாவும் முக்கியமான சவால்களை எதிர்கொள்கின்றன, மேலும் இந்த ஆண்டு கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர கூட்டாண்மையின் வளர்ச்சியில் குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.




Original article:

Share: