வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு, மாநிலங்கள் ஒரு தகுதிவாய்ந்த அதிகாரத்தை நிறுவ வேண்டும். வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்தபடி அவர்கள் ஆய்வு அமைப்பையும் அமைக்க வேண்டும்.
கோவிட் காலத்தில் ஒரு மந்தநிலைக்குப் பிறகு, தனியார் பயிற்சி மையங்களில் இருந்து மாணவர்களின் தற்கொலை மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளன. ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வு (IIT Joint Entrance Exam), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (national Eligibility Cum Entrance Test (NEET)) மற்றும் யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்தி வருகிறார்கள். அங்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு. சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு குழுக்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த தொழில்துறைக்கான குறைந்தபட்ச தரநிலைகளை அமைக்க ஒன்றிய அரசு முயற்சித்துள்ளது, இது சரியான திசையில் ஒரு படியாகத் தெரிகிறது.
புதிய வழிகாட்டுதல்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட தனியார் பயிற்சி மையங்களை அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் பதிவு செய்வதன் மூலம் அவர்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்கவோ, தேவையான தகுதிகள் இல்லாமல் ஆசிரியர்களை நியமிக்கவோ முடியாது. அவர்கள் தங்கள் கட்டணங்கள் நியாயமானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கூடுதலாக, அவர்கள் ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 1 சதுர மீட்டர் இடத்தை வழங்க வேண்டும், கட்டிட பாதுகாப்பு தரங்களுக்கு இணங்க வேண்டும் மற்றும் வகுப்புகளை ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்திற்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும். இந்த தரநிலைகள் நியாயமானவை என்றாலும், மாநிலங்கள் அவற்றை அமல்படுத்துமா என்பது நிச்சயமற்றது. வழிகாட்டுதல்கள் பரிந்துரையின்படி மாநிலங்கள் ஒரு தகுதிவாய்ந்த அதிகார ஆய்வு அமைப்பை நிறுவ வேண்டும்.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் (IIT-JEE) அல்லது (NEET) போன்ற நுழைவுத் தேர்வுகள், (CBSE) மற்றும் (ICSE) பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படாத கருத்துகளில் வினாத்தாளை ஏன் தேர்வு செய்கின்றன என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும். இந்த முரண்பாடானது, வாரியத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்கள் கூட இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறாமல் போகலாம். தேசிய கல்விக் கொள்கை 2020, வாரியத் தேர்வு முறையைச் சீர்திருத்தவும், தனியார் பயிற்சியை நம்புவதைக் குறைக்கவும் பல பரிந்துரைகளை வழங்கியது. இந்த பரிந்துரைகள் நுழைவுத் தேர்வுகளுக்கும் பயன்படுத்தப்படலாம். தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்கள் பாடங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது, மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக கருத்தியல் புரிதலை மதிப்பிடும் கேள்விகளை உருவாக்குவது மற்றும் ஒற்றை உயர் அழுத்தத் தேர்வைக் காட்டிலும் குறிப்பிட்ட பாடங்களில் தேர்வுகளை நடத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
போட்டித் தேர்வுகளால் பதின்ம வயதினர் அனுபவிக்கும் மன அழுத்தத்தில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆர்வங்கள் அல்லது திறன்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறு வயதிலிருந்தே தீவிர படிப்பு திட்டங்களுக்குத் தள்ளுகிறார்கள். இது, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சிறிது ஓய்வு நேரத்துடன், பல வருடங்கள் கடினமாகப் படிக்கும்படி குழந்தையைத் தூண்டுகிறது. ஆண்டுதோறும் (JEE) மற்றும் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் 20 லட்சம் மாணவர்களில் 1% க்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெருகிறார்கள். அவர்களும் அரசு கல்லூரிகளில் இடங்களைப் பெறுவதைக் கருத்தில் கொண்டு பயிலுகிறார்கள். பெரும்பான்மையானவர்கள் தேர்ச்சி பெருவதில்லை. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) போன்ற துறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், பாரம்பரிய வேலைத் துறைகளுக்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகள் இருக்காது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். அதற்கு பதிலாக, இளம் இந்தியர்கள் நிதி தொழில்நுட்பம் (fintech), உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) மற்றும் நிதி சேவைகள் (financial services) போன்ற வளர்ந்து வரும் துறைகளை நோக்கி வழிநடத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக, அவர்கள் தங்கள் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் சொந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கல்விக்கு தயாரகவேண்டும்.