சமூக ஊடக உள்ளடக்கங்களுக்கு தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.
இணைய முடக்கங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேச்சு சுதந்திரம் மீதான வரம்புகள் அதிகாரத்தில் இருப்பவர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்கள், மத்திய அரசுடன் இணைந்து விவசாயிகளின் போராட்டங்களை எவ்வாறு எதிர்கொண்டுள்ளன என்பதிலிருந்து இது தெளிவாகிறது. இந்த மாநில அரசுகள் சரியான காரணங்கள் இல்லாமல் இணையத்தை முடக்கியுள்ளன. எந்தவித உண்மையான ஆதாரமும் இன்றி சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து தெளிவற்ற காரனங்களை பயன்படுத்தியுள்ளனர். இது அனுராதா பாசின் vs இந்திய ஒன்றியம் (Anuradha Bhasin vs Union of India) என்ற நீதிமன்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானது.
மத்திய அரசு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது. போராட்டங்களை ஆதரிக்கும் கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் (X) (முன்னர் ட்விட்டர்) போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கணக்கு உரிமையாளர்களுக்கு ஏன் என்று விளக்காமல் அவர்கள் கணக்குகளை முடகினர். கடந்த காலத்தில், கோரிக்கைகள் அதன் விதிகளை மீறாவிட்டால் அல்லது விரிவான காரணங்கள் இல்லாவிட்டால் கணக்குகளைத் முடக்க நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த தடை உத்தரவுகளில் சிலவற்றை ஆட்சேபிக்க எக்ஸ் (X) தளம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 2020-21 ஆம் ஆண்டில் முந்தைய விவசாய போராட்டங்களின் போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஒரு நீதிபதி ஆரம்பத்தில் எக்ஸின் (X) சவாலை நிராகரித்தாலும், உயர் நீதிமன்றம் பின்னர் எக்ஸ் (X) நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன.
எலான் மஸ்க் பொறுப்பேற்றதிலிருந்து, எக்ஸ் (X) (முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) தளம் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்தியது. உள்ளடக்கம் அல்லது கணக்குகளைத் தடுக்க இந்திய அதிகாரிகள் எத்தனை முறை கேட்டனர் என்பதை இந்த அறிக்கைகள் காட்டின. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், கணக்குகளை முடக்குவதாகவும், அரசாங்கத்திற்க்கு ஆதரவாக செயல்பட்டதாக எக்ஸ் (X) ஒப்புக் கொண்டுள்ளது. இதன் பொருள் இந்த செயல்களால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு அவற்றை சவால் செய்ய வழி இல்லை. எலான் மஸ்க்கின் உரிமையின் கீழ், எக்ஸ் தளம் ஒரு காலத்தில் இருந்த சுதந்திரமான பேச்சுக்கான தளம் அல்ல. அது இனி அரசாங்கங்கள் பற்றிய விவாதங்கள் அல்லது விமர்சனங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதற்கு பதிலாக, அது அதன் உரிமையாளரின் நலன்களைப் பின்பற்றுகிறது.
உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு தெரிவிக்காமல் உள்ளடக்கத்தைத் தடுக்க அரசாங்கத்தின் அதிகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆதரிக்கிறது. இந்த முடிவுக்கு அரசு தனது செயல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உயர் நீதிமன்றத்தில் ’எக்ஸ்’ (X) மேல்முறையீடு செய்வது சமூக ஊடக நிறுவனங்களுக்கான விதிகளை தெளிவுபடுத்தும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த விதிகள், உள்ளடக்கம் தொடர்பான அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும்.
சுதந்திரமான, சிறந்த ஜனநாயக சமூகம் என்ற இந்தியாவின் நிலையை அதன் நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படவில்லை. சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படத் தேர்வு செய்ய இந்த நற்பெயர் ஒரு முக்கிய காரணமாகும். அதன் பெரிய நுகர்வோர் எண்ணிக்கையால் மட்டுமல்ல.