பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு 16வது தவணைத் தொகை உட்பட மொத்தம் ரூ.3 லட்சம் கோடி தொகை நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
விவசாய குடும்பங்களுக்கு கூடுதல் வருமான ஆதரவின் அவசியத்தை நிவர்த்தி செய்வதற்கும், உற்பத்தி, போட்டித்தன்மை, பன்முகப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய மற்றும் நிலையான விவசாயத் துறையை வளர்ப்பதற்கும், இந்திய அரசாங்கம் பிப்ரவரி 2, 2019 அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியை (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-Kisan)) தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடிப் பலன் பரிமாற்ற (Direct Benefit Transfer (DBT)) திட்டங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியான விவசாய குடும்பங்கள் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6000 பெறுகிறார்கள். இந்தத் திட்டமானது நேரடிப் பலன் பரிமாற்றத்திற்கான (Direct Benefit Transfer (DBT)) நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது கூட்டுறவு கூட்டாட்சி முறையை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் தகுதியைப் பதிவு செய்வதற்கும், சரிபார்ப்பதற்கும் மாநிலங்கள் பொறுப்பு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்திய அரசாங்கம் இந்திய திட்டத்திற்கு 100 சதவீத நிதியுதவி வழங்குகிறது.
இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இடைவிடாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இது பல மைல்கற்களை எட்டியுள்ளது மற்றும் உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் தொலைநோக்கு அணுகுமுறை, பரந்த அளவு, மற்றும் தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக நிதி பரிமாற்றம் செய்தமை ஆகியவற்றால் இந்தப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. உத்தரபிரதேச விவசாயிகள் குறித்து சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute (IFPRI)) நடத்திய ஆய்வில், பெரும்பாலான விவசாயிகள் எந்த கசிவும் இல்லாமல் முழு பலன்களையும் பெற்றனர் என்பதைக் காட்டுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் பணப் பரிமாற்றங்களைப் பெற்ற விவசாயிகள் விவசாய உபகரணங்கள், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
நான்கு பயனாளிகளில் ஒருவர் பெண் விவசாயி என்பதால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் உள்ளடக்கம் தெளிவாகத் தெரிகிறது. கூடுதலாக, 85 சதவீதத்திற்கும் அதிகமான சிறு மற்றும் குறு விவசாயிகள் இத்திட்டத்தைப் பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தின் செயல்திறன், செயல்பாட்டுத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பில் தொடர்ந்து மேம்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் இடைத்தரகர் குறிக்கீடு இல்லாமல் சென்றடைவதை இது உறுதி செய்கிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) தளமானது, இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India), பொது நிதி மேலாண்மை அமைப்பு (Public Financial Management System), இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India) மற்றும் வருமான வரித்துறை (Income Tax Department) போன்ற முக்கிய நிறுவனங்களின் இணையதளங்களுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உடனடி சேவைகளை வழங்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பங்குதாரர்கள் PM-Kisan தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு, அவர்களின் விரல் நுனியில் தகவல் மற்றும் சேவைகளை வழங்க பல்வேறு தொழில்நுட்ப தலையீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளை மையமாகக் கொண்ட சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் இங்கே:
பயனாளிகள் தங்களின் தற்போதைய நிலையைச் சரிபார்க்க, பிரத்யேக இணையதள போர்டல் மற்றும் மொபைல் செயலிகள் உள்ளது. "உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்" (Know Your Status(KYS)) தொகுதி தனிநபர்கள் நில விதைப்புக்கான நிலை, வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC போன்ற அத்தியாவசிய விவரங்களை தகுந்த நேரத்தில் எளிதாகப் பார்க்க உதவுகிறது. நாடு முழுவதும் எளிமையான மின்னணு உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (eKYC) செயல்முறைகளுக்கு முக அங்கீகார அடிப்படையிலான e-KYC அம்சம் கொண்ட மொபைல் செயலி பயன்பாடு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் குறைகளை பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) தளத்தில் பதிவு செய்து, உடனடி தீர்வுக்காக 24x7 அழைப்பு வசதியைப் பயன்படுத்தலாம். இந்திய அரசு 'கிசான் இ-மித்ரா' (Kisan e-Mitra) என்ற குரல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு சாட்போட்டையும் (AI Chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இது விவசாயிகள் தங்கள் சொந்த மொழியைப் பயன்படுத்தி தகுந்தநேரத்தில் கேள்விகளை எழுப்பவும் தீர்க்கவும் அனுமதிக்கிறது. கிசான் இ-மித்ரா (Kisan-eMitra) தற்போது ஆங்கிலம், ஹிந்தி, ஒடியா, தமிழ், பங்களா, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய 10 மொழிகளில் அணுகப்படுகிறது.
4 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள், விவசாயிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் நேரடியாக திட்டம் தொடர்பான சேவைகளை (Common Service Centres) வழங்குவதற்காக நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. பிஎம்-கிசான் திட்டத்தில் இந்தியா அஞ்சல் கட்டண வங்கி (Post Payments Bank (IPPB)) சேர்ப்பதால், பயனாளிகளுக்கு ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கான செயல்முறையை நெறிப்படுத்தியுள்ளது. இது இப்போது எந்த தொந்தரவும் இல்லாமல் அவர்களின் வீட்டு வாசலில் திறக்க வசதியாக உள்ளது.
கிராம அளவில் விவசாயிகள் தொடர்பான கவலைகளை சமாளிக்க, நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் நோடல் அலுவலர்கள் (nodal officers) நியமிக்கப்பட்டுள்ளனர். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் (Viksit Bharat Sankalp Yatra) ஒரு பகுதியாக, தகுதியுடைய விவசாயிகளிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் முழுவதையும் அதிகரிக்க இந்திய அரசாங்கம் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது. பிரச்சாரம் முழுவதும், 6 லட்சம் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups' (PVTG)) விவசாயிகள் உட்பட 90 லட்சத்திற்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிசான் அழைப்பு மையம் (Kisan Call Centre) மற்றும் கள ஆய்வுகள் மூலம் விவசாயிகளிடமிருந்து வரும் கருத்துக்கள் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் மேலும் அவற்றை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.
பிப்ரவரி 28 அன்று, பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவின் யவத்மாலில் (Yavatmal) பிரதமர்-கிசான் திட்டத்தின் (PM-Kisan scheme) 16 வது தவணையை வெளியிட்டார். இந்த தவணையில், மொத்தம் ரூ.21,000 கோடி, 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. 16 வது தவணை உட்பட, இந்த திட்டம் 11 கோடிக்கும் மேற்பட்ட தகுதியான விவசாய குடும்பங்களுக்கு உதவியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.3 லட்சம் கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. கோவிட்-19 காலகட்டத்தில் மட்டும், நேரடி பணப் பலன்கள் மிகவும் தேவைப்பட்டபோது தகுதியான விவசாயிகளுக்கு ரூ.1.75 லட்சம் கோடி மாற்றப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்க்கையில் இந்தத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க தாக்கமும், தேவைப்படும் காலங்களில் முக்கியமான ஆதரவையும் வழங்குகிறது.
கட்டுரையாளர் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கூடுதல் செயலாளர்.