இந்தியாவின் முதற்கட்ட தொழில்நுட்பக் குழு மாலத்தீவு சென்றடைந்தது -சுஹாசினி ஹைதர்

 நாட்டிற்கான மேம்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற விமானங்களை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்த குழு செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவதைக் குறிக்கிறது. 


மாலத்தீவில் விமானங்களை இயக்கி வந்த இராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் (Indian technical personnel) குழு மாலத்தீவில் தரையிறங்கியுள்ளதாக அரசு வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. தீவுக்கூட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களின் சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பாக நரேந்திர மோடி அரசாங்கத்திற்கும், மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு தலைமையிலான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதை இந்த வளர்ச்சி அறிவுறுத்துகிறது. இந்த விஷயம் ஆளுங்கட்சி தலைமையிலான "இந்தியாவை வெளியேற்றுவோம்" (India Out) பிரச்சாரத்தின் மையமாக மாறியது.


"கானில் (Gan) மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை இயக்குவதற்கான தொழில்நுட்ப பணியாளர்களின் ஆரம்பக் குழு மாலத்தீவுக்கு வந்துள்ளது. அவர்கள் இந்த தளத்தைக் கையாளும் தற்போதைய பணியாளர்களிடமிருந்து பொறுப்பேற்பார்கள். அதுதான் தற்போதைய நிலை" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார். இந்த நடவடிக்கை பற்றிய விசாரணைகள், ஆரம்பத்தில் மாலைதீவு அரசாங்கத்தால் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் மொத்தம் 88 இந்திய இராணுவ வீரர்களின் முதல் தொகுதியில் மாற்றப்படும் வீரர்களின் எண்ணிக்கையை ஜெய்ஸ்வால் குறிப்பிடவில்லை.


2018 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பல சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவத்தினரை அகற்றக் கோரியபோது, அவர்களின் விசாக்களை நீட்டிக்க மறுத்தது உட்பட, முன்னர் வீரர்களை திரும்பப் பெற மறுத்த இந்தியாவின் ஒரு பெரிய வீழ்ச்சியையும் இந்த உறுதிப்படுத்தல் குறிக்கிறது. அதிபர் இப்ராஹிம் சோலிஹ்யால் திரு. யாமீன் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பிரச்சினை தணிந்தது. ஆனால் 2023 நவம்பரில் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய இராணுவ வீரர்களை அகற்றுவதை  முன்னுரிமையாக்கினார் என்று திரு முய்ஸுவால் பிரச்சாரத் திட்டமாக புதுப்பிக்கப்பட்டது.


'காலக்கெடு'வுக்கு முன்னதாக


டிசம்பர் தொடக்கத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி முய்சுவை சந்தித்த பின்னர் மாலத்தீவு அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் மார்ச் 10  காலக்கெடுவை முன்னதாக முதல் தொகுதியில் மாற்றப்பட்டுள்ளதை குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதில், வீரர்களுக்கு பதிலாக சிவிலியன் தொழில்நுட்ப பணியாளர்களை (civilian technical personnel) நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக மாலத்தீவு அரசாங்கம் மீண்டும் கூறிய அதேவேளை, இந்தியாவானது இந்த விஷயத்தில் இறுக்கமாக மௌனம் சாதிக்கிறது. இங்கு, இரு தரப்பினரும்  செயல்படக்கூடிய மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வுகளை நாடுவதாக மட்டுமே அது கூறியது.


பிப்ரவரி 4 அன்று, திரு. முய்ஸு மாலத்தீவு மஜ்லிஸில் (பாராளுமன்றத்தில்) ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்து பலரை ஆச்சரியப்படுத்தினார்.


"மிக சமீபத்திய விவாதங்களின்படி, மூன்று விமான தளங்களில் ஒன்றில் உள்ள இராணுவ வீரர்கள் மார்ச் 10, 2024-க்கு முன்னர் திரும்ப அழைக்கப்படுவார்கள். மீதமுள்ள இரண்டு தளங்களில் உள்ள இராணுவ வீரர்களும் மே 10, 2024 க்குள் திரும்ப அழைக்கப்படுவார்கள்," என்று திரு முய்சு கூறினார். அதைத் தொடர்ந்து, வீரர்கள், திறமையான தொழில்நுட்ப நபர்களால் (competent technical personnel) மாற்றப்படுவார்கள் என்று அமைச்சகம் கூறியது. ஆனால் அவர்கள் சிவிலியன்களா அல்லது இராணுவமா   என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.


நிலைநிறுத்தப்பட்ட வீரர்களின் பிரச்சினையில் கருத்து வேறுபாடுகள் ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான பரிமாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில், மாலத்தீவுகள் மொரிஷியஸில் ஒரு முக்கியமான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க விரும்பவில்லை. கொழும்பு பாதுகாப்பு உரையாடல், மற்றும் பெர்த்தில் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் அதன் பிரதிநிதித்துவத்தை குறைத்தது. சர்ச்சைக்குரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் படி எடுக்கப்பட்டதாகத் தோன்றும் நிலையில், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் இராஜதந்திர ஒத்துழைப்பின் வேறு சில பகுதிகளில் முன்னேற்றத்தை மீட்டெடுப்பதாக சுட்டிக்காட்டின.

 

ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவை தங்கள் கடலோர காவல்படை சேவைகளுக்கு (coast guard services) இடையில் நடைபெற்ற "தோஸ்தி -16" (Dosti-16) என்று அழைக்கப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தரப்பு கடல்சார் பயிற்சிகளின் (trilateral maritime exercises) சமீபத்திய சுற்றை நிறைவு செய்தன. பங்களாதேஷ் ஒரு பார்வையாளராக பங்கேற்ற பயிற்சிகளின் தொடக்க விழாவில் பேசிய மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் முகமது கஸ்ஸான் மௌமூன், முய்ஸு அரசாங்கம் "மாலத்தீவு மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையில் நெருங்கிய உறவுகள், அமைதி மற்றும் நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் அதிக முன்னுரிமை அளிக்கிறது" என்று கூறினார்.




Original article:

Share: