செயற்கை நுண்ணறிவு இயங்குதளங்கள் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளிலிருந்து வரும் தலைவர்களை வருத்தமடையச் செய்யும் பதில்களைச் செய்வதில் எச்சரிக்கையாக உள்ளன. ஒரு செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் எல்லாவற்றிலும் சிறப்பாக இருப்பது கடினம். எனவே, நிறுவனங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதிலும் ஆக்கப்பூர்வமாக இருப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஜெமினியிடம் (AI chatbot Gemini) பயனர்கள் கேட்கக்கூடிய தேர்தல் தொடர்பான கேள்விகளின் வகைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறியுள்ளது. இது "ஏராளமான எச்சரிக்கை" (an abundance of caution) மற்றும் உயர்தர தகவல்களை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை மேற்கோள் காட்டுகிறது. இந்த நடவடிக்கை அரசியல் தலைப்புகளைச் சுற்றியுள்ள உணர்திறன் மற்றும் சர்ச்சை அல்லது தவறான தகவல்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த தளத்தின் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது.
கூடுதலாக, ஓலாவின் பவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal from Ola) தலைமையிலான இந்திய செயற்கை நுண்ணறிவு புதியதாக உருவாக்கிய சாட்போட் Krutrim இல் காணப்பட்ட சுய தணிக்கை பற்றி பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்துறையில் ஒரு பரந்த போக்கைக் குறிக்கிறது. அங்கு தளங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் அல்லது அரசியல் பின்னடைவைத் தவிர்ப்பதற்காக பதில்களை முன்கூட்டியே வடிகட்டலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
இந்த நடவடிக்கைகள் செயற்கை நுண்ணறிவு தளங்களில் அரசியல் பேச்சு மட்டுப்படுத்தப்படலாம் என்பதைக் காட்டுகின்றன. குறிப்பாக, தீவிரமான காலங்களில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் மோதலைத் தவிர்க்க இந்த தளங்கள் முயற்சிப்பதால் சுய தணிக்கை பொதுவானதாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தளங்கள் அரசியல் பேச்சை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன?
செயற்கை நுண்ணறிவு தளங்கள் எச்சரிக்கையாக உள்ளன. தீவிரமான அரசியல் பிளவுகளின் வெவ்வேறு பக்கங்களில் உள்ள அரசியல் தலைவர்களை வருத்தமடையச் செய்யும் பதில்களை வழங்குவதைப் பற்றி கவலைப்படுகின்றன. சட்டவிரோதமாக இல்லாவிட்டாலும், அரசியல்வாதிகள் ஆட்சேபனைக்குரியதாகக் காணக்கூடிய பதில்களைத் தவிர்ப்பதன் மூலம் அரசியல் ரீதியாக சரியானதாக இருப்பதை நிறுவனங்கள் சமப்படுத்த முயற்சிக்கின்றன.
உதாரணமாக, கூகிளின், செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான ஜெமினி (AI chatbot Gemini), எச்சரிக்கையாக உள்ளது. இது போன்ற ஒரு தெளிவான பதிலை அளிக்கிறது. "இந்த கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில், யாருக்கு வாக்களிப்பது அல்லது எந்தக் கட்சி சிறந்தது போன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கூகுள் தேடல் (Google Search) மூலம் முயற்சிக்கவும்.
இதற்கு முன், ஓலா அல்காரிதம் சிறந்த தேர்வைப் (algorithmic filters) பயன்படுத்தியது. இந்த சிறந்த தேர்வானது, நரேந்திர மோடி, மற்றும் ராகுல் காந்தி போன்ற வார்த்தைகளைக் கொண்ட தேடல்களுக்கான முடிவுகளை Krutrim beta காட்டாது என்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டது.
ஜெமினியிடம் கேட்கப்பட்ட இதே போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, க்ருட்ரிம் கூறுகிறார்: தனக்கு குறைவான அறிவு இருப்பதாகவும், இன்னும் கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. பயனர்கள் மற்ற தலைப்புகளைப் பற்றியும் கேட்க ஊக்குவிக்கிறது.
ஒரு தொழில்நுட்ப வல்லுனரின் கருத்துப்படி, இது "நிரல் அளவில் தணிக்கை" (code-level censorship) ஆகும். சாத்தியமான பதில்களை அணுகுவதற்குப் பதிலாக நிலையான பதிலைத் தருவதன் மூலம் சில கேள்விகளைத் தவிர்க்க நிறுவனங்கள் தளங்களை நிரல் செய்துள்ளன.
"நிரல் அளவில் தணிக்கை" (code-level censorship) என்பது நிறுவனங்கள் குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளைக் கொண்ட சில கேள்விகளை சாத்தியமான பதில்களுக்கான தளத்தின் அடிப்படை மாதிரியை அணுகுவதைத் தடுக்க ஒரு குறியீட்டை எழுதுவது என்று ஒரு தொழில்நுட்ப நிபுணர் விளக்கினார். அதற்கு பதிலாக, அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்பதைக் குறிக்கும் முன்னமைக்கப்பட்ட பதிலை இயங்குதளம் வழங்குகிறது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் அதன் மாறுபட்ட பதில்களுக்காக சமீபத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டது.
அமெரிக்காவின் நிறுவன தந்தைகள் (founding fathers of the United States) அல்லது நாஜி காலத்து ஜெர்மன் வீரர்கள் (Nazi-era German soldiers) போன்ற கருப்பு-வெள்ளை நிற வரலாற்று நபர்களின் படங்கள் நிறத்தில் காட்டியதால் இந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் போதுமான அளவு வேறுபட்டதாக இல்லை என்ற விமர்சனத்தை தங்கள் அமைப்பு ஈடுசெய்ய முயன்றதாக விளக்கினர். மற்ற உலகத் தலைவர்களுடன் ஒப்பிடும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி இந்த செயலியானது வெவ்வேறு பதில்களை அளிப்பதாகத் தோன்றியதால், இந்தியாவில் சர்ச்சை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜெமினி ஏன் இதுபோன்ற பதில்களைத் தருகிறது. கூகிள் பொறுப்பேற்க வேண்டுமா என்பது குறித்து அந்த நிறுவனத்திற்கு வெளிப்ப்டையான காரணத்தை தெரிவிக்குமாறு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்ப பரிசீலித்தது. இருப்பினும், இந்தியாவின் Krutrim போன்ற பிற செயற்கை நுண்ணறிவு இயங்குதளங்களுடனான இதேபோன்ற சிக்கல்கள், தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதை விட தங்கள் அமைப்புகளைச் செம்மைப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த அரசாங்கத்தை வழிநடத்தியது.
அதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (IT Ministry) இடைத்தரகர்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டது, இந்தியாவில் "சோதிக்கப்படாத" (untested) அல்லது "நம்பமுடியாத" (unreliable) செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை பயன்படுத்துவதற்கு அரசாங்க அனுமதி பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. குறிப்பாக, தேர்தல் ஜனநாயகத்தின் சூழலை கருத்தில் கொண்டு இதை மேலும் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த ஆலோசனை புத்தொழில் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உட்பட பங்குதாரர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. அவர்கள், அதை ஒழுங்குமுறை வரம்பு மீறலாக உணர்ந்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சகம், இந்த ஆலோசனையானது பெரிய தளங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தொடக்க நிறுவனங்களுக்கு அல்ல என்று தெளிவுபடுத்தியது. ஆயினும்கூட, ஆலோசனையின் சட்ட அடிப்படை மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு வரிசைப்படுத்தலில் அதன் தாக்கங்கள் குறித்து கேள்விகள் உள்ளன.
அரசியல் பேச்சு மீதான தணிக்கை செயற்கை நுண்ணறிவு தளங்களில் 'இயல்பானதாக' இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?
சிறந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எதிர்காலத்தில் சரியான பதில்களை வழங்குவதை விட படைப்பாற்றலில் அதிக கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறார்கள். மேம்பட்ட மாதிரிகளின் வளர்ச்சியுடன் இந்த மாற்றம் நிகழலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுக்கான (Generative AI) இயங்குதளங்கள் ஆக்கப்பூர்வமானவை. அவை உங்களுக்கு குறியீட்டை எழுத, மருந்துகளைக் கண்டறிய, இசையை உருவாக்க அல்லது பாடல் வரிகளை எழுத உதவும்." ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் மூத்த நிர்வாகி, அவை துல்லியமான செய்திகளைக் கண்டறியும் இடங்கள் அல்ல என்று கூறினார். நிறுவனம் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவில் (Generative AI) வணிக நலன்களைக் கொண்டிருப்பதால் பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நீங்கள் வெவ்வேறு பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு இயங்குதளங்களை உருவாக்கலாம். ஒன்று, கணினி குறியீடுகளுக்கு மற்றொன்று, மற்ற பணிகளுக்கு. ஆனால், இந்த தளங்கள் அவற்றின் குறிப்பிட்ட பணியைத் தவிர வேறு எதிலும் சிறப்பாக இருக்காது. எல்லாவற்றிலும் சிறந்த ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் இல்லை. அரசியலில் மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பதால் செய்திகள் குறிப்பிட்ட விஷயங்களை கடினமாக்குகின்றன. எனவே, அனைவரையும் மகிழ்விப்பது சாத்தியமில்லை. அரசியல் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதே எளிய தீர்வு என்று நிர்வாகி கூறினார்