ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான வழக்கு -மனுராஜ் ஷண்முகசுந்தரம்

 ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து கட்டங்களும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு கட்டங்களும் தேர்தல் ஆணையம் தேவைப்படும் போது, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும்?


தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation, One Election (ONOE)) குறித்த உயர்மட்டக் குழு (High-Level Committee (HLC)) தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவர்கள் தமது பரிந்துரைகளை தற்போதைய ஜனாதிபதியிடம் அளித்தனர். இந்த பரிந்துரைகளின் முக்கிய விளைவுகளை 2029 வரை காண முடியாது. எவ்வாறாயினும், இந்த முயற்சி பாரபட்சமான நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தின் செயல்முறை எவ்வாறு மாற முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும். மோடி தலைமையிலான பாஜக மீண்டும் 2024 தேர்தலில் வெற்றி பெற்றால், அது பலரின் ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation, One Election (ONOE))  யோசனைக்கு வலுவான ஆதரவாகவே பார்க்கப்படும்.


2029 ஆம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த  உயர்மட்டக் குழுவின் அறிக்கை முன்மொழிகிறது. இது அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களுக்கும் இரண்டு-படி (two-phased strategy) திட்டத்தை பரிந்துரைக்கிறது. மாநில ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பின் 83 (Articles 83) மற்றும் 172வது (Articles 172) பிரிவுகளை மாற்ற அறிக்கை பரிந்துரைக்கிறது. ஒரு மாநில சட்டமன்றம் தொங்கவிடப்பட்டால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்டால், அல்லது முன்கூட்டியே கலைக்கப்பட்டால், மீதமுள்ள பதவிக்காலத்திற்கு புதிய தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் இது முன்மொழிகிறது. அதாவது, தேர்தல்களுக்கு இடையில் அமைக்கப்படும் எந்த அரசாங்கமும் அடுத்த தேர்தல் தேதி வரை மட்டுமே செயல்படும். எவ்வாறாயினும், இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்பு சவால்களை எதிர்கொள்கிறது. தற்போதைய, அரசியலமைப்பு ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை வழங்குகிறது. இதை மாற்றினால் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படும்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை அமல்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசை வலியுறுத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கொள்கையை "எதிர்க்க வேண்டிய, ஆபத்தான எதேச்சதிகார சிந்தனை" (“dangerous, autocratic thought and it needs to be opposed”) என்று கூறினார். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் யோசனை இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக சட்டமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று அவர்கள் வாதிட்டனர்.


அனைத்து மட்டங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான யோசனை ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏனெனில் இது கூட்டாட்சி கொள்கையுடன்  முரண்படக்கூடும் (grain of federalism). இந்திய அரசியலமைப்பு மூன்று அடுக்கு அரசாங்க அமைப்பை உருவாக்குகிறது. இந்த அமைப்பு ஒன்றிய, மாநில மற்றும் பஞ்சாயத்து (local bodies) நிலைகளை உள்ளடக்கியது. அதிகமான மக்கள் பங்கேற்க அனுமதிப்பதன் மூலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திற்கும் வாக்காளர்கள் வெவ்வேறு கோரிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்பதை தேர்தல் தரவு காட்டுகிறது. அவர்கள் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளூர் தேர்தல்களை தனித்துவமான நிகழ்ச்சி நிரல்களுடன் அணுகுகிறார்கள். தேசிய சட்டத்திற்கு முக்கியமான பிரச்சினைகள் உள்ளூர் நகராட்சி நிறுவனங்களால் கையாளப்படும் பிரச்சினைகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை. உதாரணமாக, பொதுத் தேர்தல்களின் போது வெளியுறவுக் கொள்கை (foreign policy), வருமான வரி (income tax) மற்றும் தேசிய பாதுகாப்பு (national security) ஆகியவை முக்கிய தலைப்புகள். உள்ளாட்சித் தேர்தல்கள் தண்ணீர், சொத்து வரி (property tax) மற்றும் சாலைகளில் (roads) கவனம் செலுத்துகின்றன. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது ஒரு மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்கு (centralised approach) வழிவகுக்கும். இத்தகைய அணுகுமுறை உள்ளூர் பிரச்சினைகளைப் புறக்கணித்து, அடிமட்ட  ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்.


தேர்தல்களை மேற்பார்வையிடுவதும், அவை நியாயமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வதும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். இரண்டு ஆணையர்களின் ராஜினாமா மற்றும் மறுநியமனம் போன்ற சமீபத்திய நிகழ்வுகள், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. இந்த பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, ஒரே நேரத்தில் தேர்தலுக்கு தேர்தல் ஆணையத்தின் ஆதரவை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக, தேர்தல் ஆணையம் தனிப்பட்ட மாநிலத் தேர்தல்களுக்கு பல கட்டங்களாக தேவைப்பட்டால், ஒரே நேரத்தில் தேர்தல்களை நாடு முழுவதும் எவ்வாறு நிர்வகிக்க முடியும்? ஒரே நேரத்தில் தேர்தல்களை திறம்பட நடத்த பாதுகாப்புப் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தேவை போன்ற சவால்களை தேர்தல் ஆணையம் அல்லது உயர்மட்டக் குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


1973 ஆம் ஆண்டில் கேரள மாநிலத்திற்கு எதிரான கேசவானந்த பாரதி (Kesavananda Bharati vs State of Kerala (1973)) வழக்கில், சட்டமன்றத்தை விட அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு முக்கியமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி எதிர் ராஜ் நாராயண் (Indira Gandhi vs Raj Narain, (1975)) வழக்கில், நீதிபதி எச்.ஆர்.கன்னா (Justice HR Khanna) அவர்களின் தீர்ப்பில்  நீதிமன்றம் ஜனநாயகம் அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் என்று தீர்ப்ப்பு வழங்கினார். தேர்தல்கள் பாரபட்சமின்றி, சுதந்திரமாக, நியாயமாக நடத்தப்படுகிறதா என்ற பிரச்சினை முக்கியமானது. எனவே, தேர்தல்கள் சுதந்திரமானவை மற்றும் நியாயமானவையா என்பதை நீதிமன்றம் உன்னிப்பாக ஆராய வேண்டும். சண்டிகர் மேயர் தேர்தல் சம்பந்தப்பட்ட சமீபத்திய குல்தீப் குமார் vs UT சண்டிகர் மற்றும் ஓர்ஸ் (2024) வழக்கில் [(Kuldeep Kumar vs UT Chandigarh and Ors (2024)], உச்ச நீதிமன்றம் தனது நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அரசாங்கத்தின் நிர்வாக மற்றும் சட்டமன்றக் கிளைகளால் எடுக்கப்பட்ட அதிகப்படியான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் சரிசெய்வதும் நீதிமன்றங்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமை ஆகும்.


ஒரே நாடு, ஒரே தேர்தல்  (One Nation, One Election (ONOE)) குறித்த விவாதம் இந்தியாவில் செயல்திறன் (efficiency), அரசியலமைப்பு அதிகாரம் (constitutional supremacy) மற்றும் கூட்டாட்சி (federalism) ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை காட்டுகிறது. இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிந்தனைமிக்க விவாதம் தேவைப்படும். இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் பராமரிக்க வெவ்வேறு நலன்களை சமநிலைப்படுத்துவது முக்கியம். ஒரே நாடு, ஒரே தேர்தல்  (One Nation, One Election (ONOE)) பரிந்துரைகள் 2029 தேர்தல்களை இலக்காகக் கொண்டிருந்தாலும், இந்த விஷயத்தில் பொது வாக்கெடுப்பு மே 2024 இல் திட்டமிடப்பட்டுள்ளது.


கட்டுரையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், தேசிய ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றி வருகிறார். திலீபன் வழங்கிய உள்ளீடுகள் பி




Original article:

Share: