ஒரே நேரத்தில் தேர்தல், என்பது அரசியல்வாதிகள் எல்லா நேரத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை மற்றும் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்வதில் கவனம் செலுத்த முடியும்.
"நமது ஜனநாயகத்தின் உயிர்வாழ்வும் மற்றும் தேசத்தின் ஒற்றுமையும் மற்றும் ஒருமைப்பாடும் அரசியலமைப்பு சட்டத்தைப் போலவே, அரசியலமைப்பின் அறநெறியும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதில் இன்றியமையாததாக உள்ளது. தர்மம் அல்லது நீதி, பொது நபர்களின் இதயங்களில் வாழ்கிறது. அது அங்கிருந்து மறைந்து விட்டால், எந்த அரசியலமைப்பு, சட்டமும் அல்லது திருத்தமும் அதைப் பாதுகாக்க முடியாது.
மாதவராவ் ஜீவாஜி சிந்தியா VS யூனியன் ஆஃப் இந்தியா (Madhav Rao Jivaji Scindia vs Union of India) 1971 இல் நானி பல்கிவாலா
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தனது 18வது மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு நாடு முழுவதும் 96.88 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்தல்கள் நடக்க விருகின்றன. மார்ச் 14 அன்று, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான உயர்மட்டக் குழு, இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தங்கள் அறிக்கையை அளித்தது. ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது சட்டப்பூர்வமானதா, பயனுள்ளதா, அது எவ்வாறு செயல்படும் என்பதை ஆராய்வதற்காக இந்திய அரசால் இந்தக் குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்த இந்தக் குழு பரிந்துரைக்கிறது. ஒரு வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (elector photo identity cards (EPIC)) ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு 1952 முதல் 1967 வரை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டன. அரசியலமைப்பின் 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசாங்கங்கள் அடிக்கடி பதவி நீக்கம் செய்யப்பட்டதால், ஒத்திசைக்கப்பட்ட சுழற்சியில் (synchronized cycle) இடையூறு ஏற்படுத்தியதால் தேர்தல் நடைமுறை மாறியது. இது 1994 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் எஸ் ஆர் பொம்மை VS ஒன்றிய இந்தியா (S R Bommai vs Union of India) தீர்ப்பு 356 வது பிரிவை தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி, அதன் நிலைத்தன்மையையும் அரசியலமைப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து அதை ஊக்குவிக்கும் வரை தொடர்ந்தது. இருப்பினும், தேர்தல் சுழற்சியை மாற்றியமைக்க ஆளும் கட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் பல நன்மைகளை வழங்குகின்றன: நிர்வாக செலவுகளில் குறிப்பிடத்தக்க சேமிப்பு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட மனிதவளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல், பொது வாழ்க்கைக்கு குறைவான இடையூறு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறு இல்லாமல் நிர்வாகத்தில் கவனம் செலுத்துதல் ஆகியவை ஆகும். அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு பதிலாக ஆட்சி செய்வதில் கவனம் செலுத்துவார்கள். இதன் மூலம் அவர்களின் பொதுமக்கள் மீதான பொறுப்புணர்வை அதிகப்படுத்தும்.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு எதிரான ஒரு வாதம் என்னவென்றால், அது வாக்காளர்களுக்கு தேசிய மற்றும் உள்ளூர் நலன்களுக்கு இடையிலான வேறுபாட்டை குறைத்துவிடும் என்பதாகும். இருப்பினும், ஒடிசா மற்றும் டெல்லியில் சமீபத்திய தேர்தல்கள் வேறுவிதமாகக் காட்டுகின்றன. ஒடிசாவில் 2019 தேர்தலில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 147 இடங்களில் 112 இடங்களை வென்றது, அதாவது 44.7 சதவீத வாக்குகள். பாரதிய ஜனதா கட்சி (BJP) 32.4 சதவீத வாக்குகளுடன் 23 இடங்களைப் பெற்றது. ஒரே நேரத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பிஜு ஜனதா தளம் 42.8 சதவீத வாக்குகளுடன் 21 இடங்களில் 12 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 38.4 சதவீத வாக்குகளுடன் 8 இடங்களையும் வென்றது. இதேபோல், டெல்லியில், தேசிய தேர்தல் முடிந்து ஏழு முதல் எட்டு மாதங்களுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன, மக்கள் இரு நிலைகளிலும் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். உதாரணமாக, 2014 லோக்சபா தேர்தல் மற்றும் 2015 சட்டசபை தேர்தல்களில், வெவ்வேறு கட்சிகள் ஓட்டுகள் பெற்றன. 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2020 சட்டசபை தேர்தல் இரண்டும் முக்கியமானவை. நம்மைப் போன்ற பாரம்பரிய ஜனநாயகத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும், வாக்காளர்கள் வாக்களிக்கும்போது தேசிய மற்றும் உள்ளூர் நலன்களை கருத்தில் கொள்ளலாம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பஞ்சாயத்து, நகராட்சி போன்ற உள்ளாட்சி தேர்தலை நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களுடன் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படுவதால் இது நடைமுறையில் இருக்காது என்று நான் நம்புகிறேன். மேலும், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான உள்ளாட்சி அமைப்புகள் ஒரு சவாலாக இருக்கும். கூடுதலாக, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான பொறுப்பு மாநில தேர்தல் ஆணையர்களிடம் உள்ளது. அதேசமயம், இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கு பொறுப்பாகும்.
1967-க்குப் பிறகு தேர்தல் சுழற்சியில் (election cycle) ஏற்பட்ட இடையூறு முக்கியமாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பதவி நீக்கம் செய்ய மத்தியில் ஆளும் கட்சி அரசியலமைப்பு பிரிவு 356-யை அடிக்கடி பயன்படுத்தியது போன்ற ஜனநாயக விரோத நடைமுறைகளால் ஏற்பட்டது. அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த பிரச்சினையை தீர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ச்சியான பிரச்சாரத்திலிருந்து நீண்டகால ஆட்சிக்கு கவனத்தை மாற்றுவதற்காக ஒரே நேரத்தில் தேர்தல்களை மீண்டும் அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளது. நாட்டின் ஜனநாயக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான இந்த முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.
கட்டுரையாளர் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஆவார்