மிஷன் திவ்யாஸ்திரத்தின் (Mission Divyastra) வெற்றி: கோழிக்கோடு-தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களின் சாதனை பற்றி . . . -தி ஹிந்து குழுமம்

 கோழிக்கோடு-தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIT-C) 1991 ஆண்டு பிரிவில் மாணவி உஷா வர்மா, அக்னி-5 ஏவுகணையை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) குழுவில் ஒருவராக இருந்தார்.


மிஷன் திவ்யஸ்திரா (Mission Divyastra) அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையாகும். இந்த ஏவுகணை இந்தியாவில் உருவாக்கப்பட்டதுடன், இது பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு ஏவுகணை (Multiple Independently Targetable Reentry Vehicles (MIRVs)) என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. மிஷன் திவ்யஸ்திரா (Mission Divyastra) திட்டத்தின் சோதனையானது வெற்றி பெற்றது. இந்த வெற்றி கோழிக்கோடு-தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை (NIT-C) பெருமைப்படுத்தியுள்ளது. ஏனென்றால், அதன் முன்னாள் மாணவர்களில் ஒருவர், இந்த ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானி குழுவின் ஒருவராக இருந்தார்.


Dr.ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் (Dr. APJ Abdul Kalam Missile Complex) உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்தில் (Advanced Systems Laboratory (ASL)) இணை இயக்குநராக உஷா வர்மா பணியாற்றுகிறார். மேலும், அக்னி ஏவுகணைகளின் மேம்பட்ட பதிப்புகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 1991 ஆம் ஆண்டு காலிகட் பிராந்திய பொறியியல் கல்லூரியில் (பின்னர் NIT-C ஆக உயர்த்தப்பட்டது) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவின் முன்னாள் மாணவர் ஆவார்.


திருமதி.வர்மா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், இவர் வான் பாதுகாப்பு திட்டத்தில் (Air Defence Programme) பணியாற்றினார். இந்த திட்டத்தில், முதல் உள்நாட்டு கா-பேண்ட் ஆக்டிவ் ரேடார் ஏவுகணை (Ka-Band Active Radar Missile) தேடுதல்  குழுவை வழிநடத்தினார். இந்த தொழில்நுட்பம் நடுவானில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) இடைமறிக்க உதவும். இதன் மூலம், இவர் 2014 ஆம் ஆண்டில், அவர் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்திற்கு ((Advanced Systems Laboratory (ASL)) சென்றதன் அடிப்படையில், அவர் உத்தியின் அமைப்பு மின்னணு குழுவின் தொழில்நுட்ப இயக்குநரானார். அக்னி ஏவுகணை அமைப்புகளுக்குள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான முக்கிய பகுதிகளில் அவரது கவனம் இருந்தது. அக்னி ஏவுகணைகளின் புதிய பதிப்புகளில் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் அம்சங்களை (advanced avionics features) திருமதி வர்மா அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பதிப்புகளில் Agni Prime, அக்னி-V Mk II (Agni-V Mk II) மற்றும் திவ்யஸ்திரம் (Divyastra) ஆகியவை அடங்கும்.


திருமதி. வர்மா, வாய்ப்புகளுக்கான நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். REC தனக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை வழங்கியதற்கு அவர் அதிர்ஷ்டமாக உணர்கிறார். கூடுதலாக, சவாலான திட்டங்களில் பணியாற்றுவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கிய வாய்ப்பையும் பொறுப்பையும் அவர் பாராட்டுகிறார். தற்போது, திருமதி வர்மாவும் செயல்பாட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் (IEEE) உறுப்பினர் ஆவார். இது ஒரு தன்னார்வ அமைப்பு. அவரது ஆராய்ச்சி முக்கியமாக பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர் நாட்டிற்குள் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். மேலும், திருமதி வர்மா பணிபுரியும் திட்டங்கள் மிகவும் சிக்கலானவை என்று குறிப்பிட்டார். பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு ஏவுகணை (Multiple Independently Targetable Reentry Vehicles (MIRVs)) திறனை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று அவர் எடுத்துரைத்தார். இந்த சாதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்களின் கடின உழைப்பின் விளைவாகும்.




Original article:

Share: