“காலநிலை மாற்றமானது இமயமலை சுற்றுச்சூழலின் பலவீனத்தின் பெரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது” என்று சோனம் வாங்சுக் கூறுகிறார்.
ரமோன் மகசேசே விருது வென்ற சோனம் வாங்சுக் மார்ச் 6, 2024 அன்று லடாக்கின் லேவில் ஒரு பெரிய கூட்டத்தில் பேசினார். தனது 21 நாள் காலநிலை உண்ணாவிரதத்தை அறிவித்த அவர், லடாக் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் உரையாற்றினார்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே 11,500 அடி உயரத்தில் லடாக் அமைந்துள்ளது. இது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ள 97% பழங்குடியினரின் தாயகமாகும். வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு மற்றும் மாசுபாடு போன்ற காலநிலை மாற்ற தாக்கங்கள் உட்பட பல்வேறு சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது.
இமயமலைப் பகுதியில் சுமார் 15,000 பனிப்பாறைகள் உள்ளன, அவை மூன்றாம் துருவம் (Third Pole) என்று அழைக்கப்படுகின்றன. இந்த பனிப்பாறைகள் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற நதிகளுக்கு முக்கியமான நீராதாரமாக இருக்கின்றன. இருப்பினும், புவி வெப்பமடைதல் காரணமாக, இங்குள்ள பனிப்பாறைகள் உருகும் அபாயத்தில் உள்ளன. இது, மலைவாழ் மக்கள் மற்றும் சமவெளியில் வசிக்கும் மக்கள் என இருவரையும் பாதிக்கும்.
அதிகரித்த உள்கட்டமைப்பு
2008 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் (National Action Plan on Climate Change (NAPCC)) ஒரு பகுதியாக இந்த மையம் எட்டு இயக்கங்களைத் தொடங்கியது. அவற்றில் ஒன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Science and Technology) கீழ் வரும் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டம் (National Mission for Sustaining the Himalayan Ecosystem (NMSHE)). இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டத்தின் முக்கிய குறிக்கோள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (DST)) வலைத்தளத்தின்படி, இமயமலைப் பகுதி காலநிலை மாற்றத்தால் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை அறிவியல் பூர்வமாக அளவிடும் திறனை உருவாக்குவதும், இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் சூழ்நிலையை தவறாமல் சரிபார்ப்பதாகும்.
இமயமலைப் பகுதியைப் பாதுகாக்கும் பங்கை இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டம் (NMSHE) ஏன் மறந்துவிட்டது?
லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது. பாலங்கள் கட்டுதல், சாலைகளை அகலப்படுத்துதல், சுரங்கங்கள் அமைத்தல், ரயில்வே, பெரிய சூரிய சக்தி திட்டங்கள், ஆடம்பரமான விமான நிலையம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடங்கள் போன்ற பல பெரிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட்டன. சில திட்டங்கள் சோஜிலா சுரங்கப்பாதை (Zojila tunnel), 230 கிலோமீட்டர் நீளம் கொண்ட கார்கில்-ஜான்ஸ்கர் (Kargil-Zanskar) நெடுஞ்சாலை மற்றும் சாங்தாங்கில் 10 ஜிகாவாட் திறன் கொண்ட பெரிய சூரிய சக்தி திட்டம். மேலும், லடாக்கிற்கு முதலீடுகளை ஈர்க்க 2023 (Ladakh (UT) Industrial Land Allotment Policy of 2023) இல் ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது.
எல்லைப்புற சாலைகள் அமைப்பு (Border Roads Organisation (BRO)) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (National Highways & Infrastructure Development Corporation Ltd. (NHIDCL)) ஆகியவை இந்த திட்டங்களில் பலவற்றை வழிநடத்துகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) வடகிழக்கில், எல்லைகளுக்கு அருகில், ஜம்மு-காஷ்மீர், லடாக், உத்தரகண்ட் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில் சாலைகள் அமைப்பதை விரைவுபடுத்த விரும்புகிறது. இந்த இடங்கள் அனைத்தும் காலநிலை மாற்ற பேரழிவுகளால் ஆபத்தில் உள்ளன.
பேரழிவுகளைக் கண்ட ஒரு பிராந்தியம்
அரசின் திட்டங்களை விரைவாக அங்கீகரித்து செயல்படுத்தும் அரசாங்க அமைப்புகள், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட கடந்த கால பேரழிவுகளிலிருந்து கிடைத்த பாடங்களை ஏன் புறக்கணிக்கின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2010 முதல், இமயமலைப் பகுதி பல பேரழிவுகளை எதிர்கொண்டது, இதனால் உயிர் இழப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டில், மேல் இமயமலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு (cloudburst) கேதார்நாத்தில் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது, இதன் விளைவாக 6,000 பேர் இறந்தனர் மற்றும் பல குடியிருப்புகள் முற்றிலும் அழிந்தன. ஜனவரி 2023இல், ஜோஷிமத்தில் (Joshimath) உள்ள ஒரு மலைச்சரிவில் தண்ணீர் பெருகி, நகரத்தின் சில பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. நவம்பர் 2023 இல், சில்க்யாரா (Silkyara) சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர், இது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த இயற்க்க பேரழிவுகள் அனைத்தும் நடந்த உத்தரகாண்டில், 2000ஆம் ஆண்டு முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புவியியலாளர்கள் மற்றும் சூழலியலாளர்கள் போன்ற நிபுணர்களின் கடுமையான எச்சரிக்கையும் மீறி, இந்த திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு, இமயமலையில் உள்ள புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரிக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரா-பனிப்பாறை (para-glacial) மண்டலத்தில் நீர்மின் திட்டங்கள் கட்டுவதற்கு நிபுணர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பேரழிவுகள் நிகழும்போது, கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குடியிருக்கும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், இந்த திட்டங்களை அங்கீகரிக்கும் அரசாங்க அமைப்புகளும் அவற்றை செயல்படுத்தும் நிறுவனங்களும் பெரும்பாலும் இதுபோன்ற பேரழிவுகளின் விளைவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குறைவான விமர்சனம்
காலநிலை மாற்ற ஆர்வலர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து நிபுணர் குழுக்களை அமைத்திருந்தாலும், அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுவதால் விரக்தியடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் பெரிய திட்டங்களின் ஆபத்து மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற சரியான சோதனைகள் செய்யப்படுவதில்லை.
முன்னேற்றம் என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையையும் அதன் பல்லுயிர் பெருக்கத்தையும் நாம் சேதப்படுத்தக்கூடாது. இமயமலையையும் அதில் வசிப்பவர்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு.
வாங்சுக்கின் போராட்டம் லடாக்கிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்தின் எதிர்காலத்திற்குமானது.
ஜானகி முரளி பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்.