ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்பதை அரசாங்கம் உணர்ந்ததால் 'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' (‘National One Health Mission’) உருவாக்கப்பட்டது. இந்த அணுகுமுறை மிகப் பெரிய நோய் தாக்குதல்களில் இருந்து மீண்டு வர உதவும்.
COVID-19 போன்ற நோய் தொற்றின் போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிந்தது. நோய் தொற்றுகளின் போது பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகளும் தான். உதாரணமாக, கட்டி தோல் நோய் (lumpy skin disease) பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
அமைச்சரவையின் 'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' (‘National One Health Mission’) குறித்த சமீபத்திய முடிவு ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
ஜூலை 2022 இல், பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழு (Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council (PM-STIAC)) 'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' உருவாக்க ஒப்புதல் அளித்தது. அப்போதிருந்து, 13 அமைச்சகங்கள் மற்றும் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology (DBT)), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research (CSIR)), மருந்துகள் துறை மற்றும் ஆயுஷ், அல்லது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி, அத்துடன் சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, சுற்றுச்சூழலும், பாதுகாப்புத் துறையும் இணைந்து இந்த இயக்கத்தை வடிவமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கு இந்த விரிவான அணுகுமுறையை உருவாக்கினர். தொற்றுநோய்களுக்கு தயாராவதற்கும் அனைவரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வதற்கும் இது உலகின் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
ஒற்றை சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சகங்கள் ஒப்புக்கொண்டன. இந்த நிறுவனம் நாக்பூரில் உள்ளது. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் சுகாதார மேம்பட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 11, 2022 அன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஒரு பயணம்
'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' (‘National One Health Mission’) பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது:
1. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புக்கான உத்திகளை உருவாக்குதல்.
2. நோய் வெடிப்புகளுக்கு கூட்டாக பதிலளித்தல்.
3. ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.
4. தவறான தகவல் பரப்புவதை தடை செய்தல்.
வாய் நோய் அல்லது கட்டி தோல் நோய் விலங்குகளை பாதிக்கிறது. இந்த நோய்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கிறது. வன விலங்குகளும் நாய்க்கடி போன்ற நோய் தாக்குதலைகளை எதிர்கொள்வதால் அவற்றின் பாதுகாப்பை பாதிக்கிறது. இந்த நோய்களுக்கும், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது நிபா போன்ற தொற்றுநோய்களையும் எதிர்கொள்வதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை.
தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கு முழுமையாக தயாராக இருக்க, வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் புதிய நோய்களுக்கான சோதனைகள் போன்ற சிறந்த கருவிகளை உருவாக்க வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கும் உலகிற்கும் இந்த கருவிகள் தேவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மருந்துகள் துறை போன்ற துறைகள் இதற்கு உதவும்.
இதைச் செய்வதில் அரசுத் துறைகள், கல்வி மையங்கள் மற்றும் தனியார் துறைகள் முக்கியமானவை. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வெற்றிக்கு முக்கியமாகும். மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவது இந்த அணுகுமுறையை களத்தில் சிறப்பாக செயல்படுத்த உதவும். செயல்படுத்தலின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஒற்றை ஆரோக்கியம் என்பது ஒரு இலக்கை விட மேம்படுத்தப்பட்ட பயணம்.
ஆய்வகங்களின் கணினி கட்டமைப்பு
உயிரி பாதுகாப்பு நிலைகள் 3 (Biosafety level 3) மற்றும் உயிரி பாதுகாப்பு நிலை 4இல் (Biosafety level 4) இயங்கும் அதிக ஆபத்துள்ள நோய்க்கிருமி ஆய்வகங்களின் தேசிய கணினி கட்டமைப்பு இந்த திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. வெவ்வேறு துறைகளால் நிர்வகிக்கப்படும் இந்த ஆய்வகங்கள், மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் நோய் தாக்குதல்களில் இருந்து மீண்டு வர உதவுகின்றன. இந்த ஆய்வகங்களை ஒன்றிணைப்பதன் மூலம், செலவு மிகுந்த உள்கட்டமைப்பை மிகவும் திறமையாகப் பயன்படுத்தலாம் மற்றும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்தலாம். இது வெளவால்கள், பன்றிகள் மற்றும் மனிதர்களை உள்ளடக்கிய நிபா போன்ற நோய்களை சிறப்பாக சமாளிக்க உதவும்.
நோய்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ய இந்தியா தனது திறனை மேம்படுத்த வேண்டும். இந்த நோக்கத்திற்காக செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), இயந்திர கற்றல் (machine learning) மற்றும் நோய் மாதிரியைப் (disease modelling) பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தொற்றுநோயியல் திறன்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. COVID-19 இன் போது, கழிவுநீரைப் பயன்படுத்தி மரபணு கண்காணிப்பு (genomic surveillance) போன்ற முறைகள் பயனுள்ளதாக இருந்தன. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு நோய்களைக் கண்காணிக்க, விலங்குகள் கூடும் மற்ற இடங்களில் இப்போது பயன்படுத்த பட்டு வருகிறது.
‘ஒற்றை ஆரோக்கியம்’ - ஓர் உலகளாவிய கருப்பொருள்
‘ஒற்றை ஆரோக்கியம்' என்பது உலகளாவிய கருப்பொருளாக உள்ளது. ஜி -20 க்கு இந்தியா தலைமை தாங்கியபோது, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் உலகளவில் ‘ஒற்றை சுகாதாரம்' நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற சில பகுதிகளில் ஒத்துழைக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
"ஒற்றை சுகாதாரம்" என்பது நோய்களை மட்டுமல்ல, நுண்ணுயிர் எதிர்ப்பு, உணவு பாதுகாப்பு, தாவர நோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் எவ்வாறு அனைத்தையும் பாதிக்கிறது என்பது போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். "ஒற்றை சுகாதாரம்" (One Health’) போன்ற கருப்பொருள்களுக்கு, வெவ்வேறு குழுக்கள் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன் பொருள் அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு சாரா நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வணிகங்கள் மற்றும் குடிமக்கள். தெளிவான செயல்திட்டத்துடன் இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது, "ஒரு பூமி, ஒற்றை சுகாதாரம்" மற்றும் "அனைவருக்கும் சுகாதாரம்" (‘One Earth, One Health’ and ‘Health for All’) போன்ற இலக்குகளை எளிதில் அடைய உதவும்.
அஜய் குமார் சூட் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆவார்