இந்தோ-பசிபிக் பாதுகாப்புக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஏன் முக்கியமானவை? -அருண் பிரகாஷ்

 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் 836 தீவுகளில் 31 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இது "கார்கில் பகுதியில்" நடந்ததைப் போன்ற ஒரு இரகசியமான ஆக்கிரமிப்புக்கான சாத்தியத்திற்கு இடமளிக்கிறது.


1857 சுதந்திரப் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒரு சிறைச்சாலை அமைத்தனர். அங்கு பல இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தனர். கலபானி என்று அழைக்கப்படும் இந்த தீவுகள் பல ஆண்டுகளாக புதுதில்லி அரசாங்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டன.


1962 ஆம் ஆண்டில், இந்திய கடற்படை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சீன நீர்மூழ்கிக் கப்பல் காணப்படுவதைப் பற்றி கவலைகளை எழுப்பியது. அப்போதுதான் அரசாங்கம் 150 மாலுமிகளை 450 மைல் கடலில் பரவியிருந்த 836 தீவுகளைப் பாதுகாக்க ஒரு "கடற்படையை" உருவாக்க அனுப்பியது.


இந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு, இந்த தீவுகளின் பாதுகாப்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதாக சமீபத்திய அறிக்கைகள் நல்ல செய்தியாகும். கடந்த காலத்தில், இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுகள் மீதான கட்டுப்பாட்டை இந்தியா கிட்டத்தட்ட இழந்தது.


இந்திய தேசிய இராணுவத்தால்  விடுவிக்கப்பட்டது


பிப்ரவரி 1942இல், சிங்கப்பூர் தோல்வியடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவை ஆக்கிரமிக்கத் திட்டமிட அந்தமான் தீவுகளைக் கைப்பற்றியது. 1943 ஆம் ஆண்டின் இறுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போர்ட் பிளேருக்கு விஜயம் செய்து, இந்திய தேசிய இராணுவத்தின்  கொடியை ஏற்றியதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை விடுவித்தார். ஆனால் 1945இல் ஜப்பான் சரணடைந்த பிறகு, பிரிட்டிஷ் தீவுகளை மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. சுதந்திரத்திற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் தீவுகளின் இராஜதந்திர இருப்பிடம் காரணமாக அவற்றை வைத்திருக்க பரிந்துரைத்தனர். இருப்பினும், பிரிவினை திட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் கிளெமென்ட் அட்லி அவற்றை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்தார்.


செப்டம்பர் 1965 இல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது, ஜனாதிபதி அயூப் கான் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் அஸ்கர் கானை இந்தோனேசியாவுக்கு அனுப்பினார். பாகிஸ்தானை சகோதர நட்பு நாடாகக் கருதும் இந்தோனேசியாவிடம் ஆதரவைப் பெறச் சென்றார். அஸ்கர் கான் தனது நினைவுக் குறிப்புகளில், இந்தோனேசிய கடற்படைத் தலைவர் அட்மிரல் மார்டாடினாட்டா அந்தமான் தீவுகளைக் கைப்பற்ற பரிந்துரைத்தபோது தான் ஆச்சரியப்பட்டதை நினைவு கூர்ந்தார். அட்மிரல் தீவுகள் சுமத்ராவின் விரிவாக்கம் என்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் அமைந்துள்ளன என்றும் வாதிட்டார். அவர்களைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உள்ள உரிமை குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்தோனேசியர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்குள் இந்திய-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது.


கார்கில் போருக்குப் பின்


1976 ஆம் ஆண்டில், அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்படை காரிஸன் கூடுதல் இராணுவத் துருப்புக்களுடன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவை தனது கோட்டையாக மாறியது. பின்னர், கார்கில் போருக்குப் பிறகு, 2001 இல், இந்தியா தனது முதல் கூட்டு செயல்பாட்டுக் கட்டளையை அந்தமான் நிக்கோபார் படைப்பிரிவு (Andaman Nicobar Command (ANC)) என்று போர்ட் பிளேரில் உருவாக்கியது. இந்த படைப்பிரிவில், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் படைகளை ஒரு தலைவரின் கீழ் ஒருங்கிணைத்தது ஒரு பெரிய முன்னேற்றம். 23 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்தமான் நிக்கோபார் படைப்பிரிவு (ANC) பெரும் வெற்றியைப் பெற்றது. பல்வேறு இராணுவப் பிரிவுகளில் குழுப்பணி இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது. 


அந்தமான் நிக்கோபார் தீவுகள் தனித்துவமான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவை வடக்கில் மியான்மர், தெற்கில் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் இந்திரா முனையிலிருந்து 90 மைல் தொலைவிலும் கிழக்கில் தாய்லாந்தின் கடற்கரைக்கு 270 மைல் தொலைவிலும் உள்ளன. ஆனால் போர்ட் பிளேர் சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் சுமார் 850 மைல்கள் வெகு தொலைவில் உள்ளது. தீவுகள் சிறியவை ஆனால் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் 300,000 சதுர கி.மீ. 836 தீவுகளில் 31 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். கார்கிலில் உள்ளதைப் போல அண்டை நாடுகள் அவற்றை ரகசியமாக ஆக்கிரமிக்க இடமளிக்கிறது.


ஒரு பாதுகாப்பு கட்டளை


மற்ற நாடுகள் அல்லது குழுக்களைப் போன்று தேவையற்ற பார்வையாளர்களைத் தடுக்க, அந்தமான் மற்றும் நிக்கோபார் படைப்பிரிவு (Andaman Nicobar Command (ANC)) அதைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். ரேடார்கள், விமானங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் ஆளில்லா வாகனங்கள் போன்ற பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி கண்கானிக்க வேண்டும். வலுவான ஆயுதங்கள் மற்றும் நிலம் அல்லது வான்வழியாக செல்லக்கூடிய துரிதமாக பதிலளிக்கும் குழுக்களையும் கொண்டிருக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட இந்த கடல் வழியாக சீன கடற்படை அடிக்கடி பயணம் செய்கிறது. எனவே, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து சண்டையிட இந்திய கடற்படை தயாராக இருக்க வேண்டும்.


செங்கடலில் ஹூதிகள் கப்பல்களைத் தாக்கியது போல, ஒரு குறிப்பிட்ட பாதையில் கப்பல்கள் செல்ல முடியாதபோது, அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது மற்றும் நிறைய பணம் செலவாகும். முக்கிய கடல் வழிகளை திறந்து வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. அத்தகைய ஒரு பாதை மலாக்கா ஜலசந்தி ஆகும், அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கப்பல்கள் கடந்து செல்கின்றன. மலாக்கா ஜலசந்தி அருகே உள்ள தனது நிலையை இந்தியா பயன்படுத்தி அங்குள்ள போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம். சீனாவின் தலைவர்கள் இது எதிர்காலத்தில் தங்களுக்கு எப்படி ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று கூட பேசினார்கள்.


தீவுகளின் தொடர்பு மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அவை பரபரப்பான கடல் பாதையில் அமர்ந்துள்ளன. தென் சீனக் கடலில் இருந்து மலாக்கா ஜலசந்தி வழியாக அந்தமான் கடலுக்கு செல்லும் போக்குவரத்தை கண்காணிக்க அவை இந்தியாவுக்கு உதவுகின்றன. இந்தோ-பசிபிக் பகுதியில் வர்த்தகம் மற்றும் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு இந்த பாதை மிகவும் முக்கியமானது.


பாதுகாப்பு உள்கட்டமைப்பில் அறிவிக்கப்பட்ட மேம்பாடுகள் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நாம் நம்புவோம். இந்த திட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகளை பாதுகாப்பை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா தனது அதிகாரத்தைக் காட்ட வேண்டும் அல்லது மற்ற கடல்சார் அண்டை நாடுகளுடன் நட்பு கொள்ள வேண்டும். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவுக்கு அண்டை நாடுகளின் உதவி தேவை என்பதை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். போர்ட் பிளேயர் கடற்படைகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான மையமாக மாறக்கூடும். பேரழிவு நிவாரணம், மருத்துவ உதவி, கடற்கொள்ளை மற்றும் கடத்தலை எதிர்த்துப் போராடுவது மற்றும் காணாமல்போன விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடுவது போன்ற விஷயங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ முடியும்.


கட்டுரையாளர் ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி.




Origiinal article:

Share: