அடுத்த பொறுப்பேற்கவுள்ள புதிய அரசு, விவசாயத்தில் உற்பத்தியை அதிகரித்தல், சில்லறை விற்பனையை விரிவுபடுத்துதல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு உதவுதல் என விவசாயத்திற்கு மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும்.
வெளியில் சூடாக இருந்தாலும், தேர்தல் பிரச்சாரம் இப்போது மிகவும் அனலாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தில் நீடிக்கும் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றனர். இது சுவாரஸ்யமானது, ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் ஏற்கனவே தனது மூன்றாவது பதவிக்காலத்திற்கு தயாராகி வருகிறது. முதல் 100 நாட்களில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை திட்டமிடுமாறு அவர்கள் வெவ்வேறு அமைச்சகங்களைக் கேட்டுள்ளனர். இந்தக் கட்டமைப்பானது விக்சித் பாரத்@2047ன் (Viksit Bharat@2047) தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போக வேண்டும்.
விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு சில யோசனைகள் பெறப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) ஏற்பாடு செய்திருந்த நான்கு நாள் மன்றத்தில் நிபுணர்ககளுடன் ஆலோசனன செய்யப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தியது.
முதலில், உணவு முறைகளை மாற்றுவது பற்றி சிந்திப்போம். விவசாயம் குறைந்த வளங்களைக் கொண்டு அதிக உணவு, நார்ச்சத்து மற்றும் உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.6 பில்லியனை எட்டக்கூடும். எனவே, உணவளிக்க அதிகமான மக்கள் இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும் போது, மக்கள் சிறந்த உணவை விரும்புவார்கள். நிலம், நீர், உழைப்பு, உரங்களை நாம் இன்னும் திறம்பட பயன்படுத்த வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், உற்பத்தித்திறனை அதிகரிக்க விவசாய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, புவி வெப்பமடைதலால் (global warming) ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் உற்பத்தி முறையை அச்சுறுத்திகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. கடந்த ஆண்டு எல் நினோ (EL-NINO) விளைவு காரணமாக, விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (gross domestic product (G.D.P)) வளர்ச்சி 2022-23 இல் 4.7% ஆக இருந்து 2023-24 இல் 0.7% ஆக குறைந்தது (இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி). இந்த நிலைமை ஏற்றுமதி தடை, வர்த்தகர்கள் மீது பங்கு வரம்புகளை விதித்தல் மற்றும் உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்க பங்குகளை அவற்றின் செலவுகளுக்கு குறைவாக விற்பது போன்ற விரைவான எதிர்வினைகளைத் தூண்டுகிறது. காலநிலை-நெகிழ்திறன் (climate-resilient) கொண்ட விவசாயத்தில் முதலீடு செய்வதே உண்மையான தீர்வு. வெப்பம் மற்றும் வெள்ளத்தை எதிர்க்கும் விதைகளில் அதிக முதலீடு செய்தல் மற்றும் நீர் நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பயிர்களைப் பெறுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு முழக்கமாக மட்டுமல்லாமல், ஒரு நடைமுறை இலக்காகவும் இருக்க வேண்டும். சொட்டு நீர், தெளிப்பான்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி போன்ற தொழில் நுட்பங்களை பெரிய அளவில் செயல்படுத்துவது துல்லிய வேளாண்மைக்கு இன்றியமையாததாகும்.
இந்தியாவின் நன்னீரில் கிட்டத்தட்ட 78 சதவீதம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நாம் தண்ணீரை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். பெங்களூரின் தண்ணீர் பிரச்சினை என்ன வரப்போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.
2047 ஆண்டு, இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நகரங்களில் வசிப்பார்கள். இது இப்போது சுமார் 36 சதவீதமாக உள்ளது. சிறந்த வேலைகளுக்காக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் செல்வது இயற்கையானது, அதை புறக்கணிக்க முடியாது. இதன் பொருள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு உணவை கொண்டு செல்ல வேண்டும். இதற்கு நாம் உணவை எவ்வாறு நகர்த்துகிறோம், சேமிக்கிறோம், பதப்படுத்துகிறோம் மற்றும் விற்கிறோம் போன்ற செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் தேவை. தனியார் நிறுவனங்கள் அதிக அதிக செய்ய வேண்டும். இதைச் செய்ய 2047 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ஏற்ற புதிய சட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். நமது பல சட்டங்கள் 1947 இலிருந்து வந்தவை மற்றும் திறமையான உணவுச் சங்கிலிகளை ஆதரிக்க புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அறுவடைக்குப் பிறகு அதிக உணவு வீணாவதை நாம் காணலாம்.
நான்காவதாக, உணவு அமைப்புகள் மாற்றத்தில், விதை நிறுவனங்கள் முதல் பண்ணை உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் வரை பதப்படுத்துபவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வரை அனைவரும் பெரிதாகி வருகின்றனர். ஆனால், விவசாயமே மேலும் மேலும் சிறிய பண்ணைகளுடன் சிறியதாகி வருகிறது. பிரச்சனை என்னவென்றால், இந்த சிறிய பண்ணைகளை ஒன்றிணைப்பது, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ( Farmer Producer Organisations (FPOs)) அல்லது அமுல் செய்ததைப் போன்ற கூட்டுறவுகளைப் பயன்படுத்தி, அவை பதப்படுத்துபவர்கள், பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு போதுமானதாக மாறும். இந்த புதிய அமைப்பு முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்குவதற்கு முக்கியமானது.
ஐந்தாவதாக, அடிப்படை உணவு மட்டுமல்ல, மக்களுக்கு போதுமான சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பல இளம் குழந்தைகள் ஊட்டச் சத்தின்மையால் (malnutrition) பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 35 சதவிகிதத்தினர் வளர்ச்சி குன்றியுள்ளனர். இது Bharat@2047 எங்கள் எதிர்கால பணியாளர்களை பாதிக்கும். இதைச் சமாளிக்க, நாம் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும், பெண்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். நமது பிரதான உணவுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பதும் முக்கியம். அரிசி மற்றும் கோதுமைக்கு அரசாங்கம் துத்தநாகத்தைச் சேர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளால் பாதுகாப்பாக கருதப்படும் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ சேர்ப்பதையும் பரிசீலிக்க வேண்டும். பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கூட தங்க அரிசியை சோதனை செய்ய அனுமதிக்கின்றன. பல ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரிசி ஒரு முதன்மை உணவு என்பதால், அதை ஊட்டச்சத்துக்களுடன் பலப்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும்.
ஆறாவதாக, அரசாங்கத்தால் எல்லாவற்றையும் தனியாக செய்ய முடியாது. பொது-தனியார் கூட்டாண்மை (Public-private partnerships) முக்கியமானது. தனியார் துறையினர் சிறந்த மதிப்புச் சங்கிலிகளை உருவாக்கி, பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய மற்றும் அதிக ஊட்டச்சத்துள்ள விதைகளை உருவாக்க முடியும். அரசு நல்ல கொள்கைகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு PLI போன்ற திட்டங்களை அரசாங்கம் உருவாக்கினால், உணவு முறைகளை ஏன் மேம்படுத்த முடியாது?
கடைசியாக, விஷயங்களை மேம்படுத்த விவசாயிகளுக்கு அதிக பணம் தேவை. இதைச் செய்ய, உரம், உணவு போன்ற விஷயங்களுக்கு மானியம் வழங்கும் முறையை மாற்ற வேண்டும். விலைவாசியை குறைப்பதற்கு பதிலாக நேரடியாக மக்களுக்கு பணத்தை வழங்கினால், மானியங்களுக்காக செலவிடும் 4 ஆயிரம் கோடி ரூபாயில் 25 முதல் 30 சதவிகிதம் வரை சேமிக்கலாம். இந்த சேமிக்கப்பட்ட பணம் உணவு முறைகளை மேம்படுத்தவும், அவற்றை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவும்.
அடுத்த அரசால் இதை செய்ய முடியுமா? காலம் தான் பதில் சொல்லும்…