உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (Election Commission of India (ECI)) மென்மயான போக்கை கடை பிடித்து வருகிறது. ஏனெனில், அரசியலமைப்பின் 324வது பிரிவில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தொகையை எவ்வாறு வரையறுக்கிறது என்பதை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். முரண்பாடுகளைக் களைவதற்கு தேர்தல் ஆணையம் அதன் விதிகளை வெளியிடவேண்டும்.
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (Voter Verified Paper Audit Trail (VVPAT)) இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இல்லை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் தரத்தை நிர்ணயித்துள்ளனர். சரியான புள்ளி விவர முறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சிப்போர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்களுடன் தணிக்கை செய்வதற்கான மாதிரி அளவுகள் பற்றிய விபரங்களை கேட்கிறார்கள். "25% மாதிரிகள்" மற்றும் "50% மாதிரிகள்" போன்ற அளவுகளைக் கேட்கிறார்கள். அதிக மாதிரிகள் சிறந்த பதில்களைக் கொண்டுவரும் என்று நினைக்கிறார்கள். சிலர் இப்போது அனைத்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகளை கைமுறையாக எண்ண வேண்டும் (manual count) என்று கேட்கிறார்கள்.
புள்ளிவிவர மாதிரியைப் (statistical sampling) பயன்படுத்துதல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) அடிப்படையிலான தணிக்கை என்பது தொழிற்சாலைகளில் உள்ள குறைபாடுகளை சரிபார்க்கும் பொருட்களைப் போன்றது. ஒரு மாதிரியில் ஒரு குறைந்த எண்ணிக்கையிலான குறைபாடுகளை கண்டால், முழுவதையும் ஏற்றுக்கொள்கிறோம். பல குறைபாடுகள் இருந்தால், அதை நிராகரிக்கிறோம்.
தேர்தல்களில், குறைபாடுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்றால், பிழைகள் அல்லது மோசடி காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர எண்ணிக்கை வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை பாதையின் எண்ணிக்கையுடன் பொருந்தாது என்று பொருள். தொழிற்சாலைகளைப் போல் இல்லாமல், எந்த குறைபாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்து இருந்தாலோ அல்லது சேதப்படுத்தப்பட்டு இருந்தாலோ, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரத்தில் இருந்து மின்னணு எண்ணிக்கைக்கும் கைமுறையாக வாக்காளர் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால் "குறைபாடுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்" பொருள். ஒரு சில குறைபாடுகள் சரியாக இருக்கும் தொழிற்சாலைகளைப் போலல்லாமல், தேர்தல்களில், குறைபாடுள்ள EVMகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியில் ஒரு EVM ஆனது VVPAT எண்ணிக்கையுடன் பொருந்தவில்லை என்றால், மாதிரி வந்த EVMகளின் முழு எண்ணிக்கையும் நிராகரிக்கப்பட வேண்டும். இங்கு "நிராகரிப்பு" என்றால் அந்த EVMகளின் எண்ணிக்கை ஏற்கப்படவில்லை என்று அர்த்தம். அதற்கு பதிலாக, அந்த குழுவில் உள்ள மற்ற அனைத்து EVM களுக்கும் VVPAT சீட்டுகளின் கைமுறையாக எண்ணப்பட (manual count) வேண்டும். இந்நிலையில், VVPAT எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டு அடிப்படையிலான தணிக்கை மூன்று முக்கிய படிநிலைகளை உள்ளடக்கியது:
(அ) முதலாவதாக, மாதிரி எடுப்பதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் 'மக்கள் தொகை' பற்றிய தெளிவான வரையறை தேவை. ஒரு நகரம், ஒரு மாவட்டம், ஒரு மாநிலம் அல்லது முழு நாடு போன்ற பல்வேறு பகுதிகளில் EVMகளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தப்படும் EVMகளின் எண்ணிக்கை (N) நாம் பரிசீலிக்கும் பகுதியின் அளவைப் பொறுத்து நிறைய மாறலாம்.
(ஆ) அடுத்து, புள்ளிவிவர ரீதியாக சரியான மற்றும் நிர்வகிக்கக்கூடிய மாதிரி அளவு (n) தீர்மானிக்கப்பட வேண்டும். ஒப்புகைச் சீட்டுகள் கையால் எண்ணப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
(இ) கடைசியாக, EVM எண்ணிக்கைக்கும் VVPAT எண்ணிக்கைக்கும் இடையில் பொருந்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை 'முடிவு விதி' (‘decision rule’) குறிப்பிடுகிறது. இந்த விதி 'n' EVMகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிக்கு பொருந்தும். பொருத்தமின்மை ஏற்பட்டால், அந்த 'மக்கள் தொகையில்' மீதமுள்ள அனைத்து (N-n) EVMகளுக்கான VVPAT சீட்டுகளை கையால் எண்ண வேண்டும்.
இருப்பினும், இந்திய தேர்தல் ஆணையம் அதன் மாதிரி அளவு எந்த 'மக்கள்தொகையைக்' குறிக்கிறது என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. அதன் மாதிரி அளவை எவ்வாறு தீர்மானித்தது என்பதையும் விளக்கவில்லை. EVM மற்றும் VVPATஎண்ணிக்கைகளுக்கு இடையே பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. இது அறிவிக்கப்பட்ட பொருத்தமின்மைகளையும் நிவர்த்தி செய்யவில்லை. இந்த முக்கியமான கருத்துக்களை தெளிவற்றதாகவோ அல்லது கவனிக்காமலோ விட்டுவிடுவது VVPAT அடிப்படையிலான தணிக்கை முறையை அடிப்படையில் குறைபாடுள்ளதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் ஆக்குகிறது.
தேர்தல் ஆணையத்தின் மாதிரி அளவு ஏன் தவறானது ?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் VVPAT அடிப்படையிலான தணிக்கையில் மாதிரி திட்டத்திற்கான அடிப்படையாக மிகை வடிவியல் விநியோக மாதிரி முறை (hypergeometric distribution model) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாதிரி சரியாக பொருந்துகிறது. தொடர்ந்து வரும் பகுப்பாய்வில், 1% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறைபாடுள்ளவை என்று கருதப்படுகிறது (P = 1%). வெவ்வேறு மக்கள்தொகை அளவுகளில் 99% நிகழ்தகவுடன் குறைந்தது ஒரு குறைபாடுள்ள EVMஐக் கண்டறிய தேவையான மாதிரி அளவுகள் கண்டறியப்படுகிறது. "ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்" என்ற தேர்தல் ஆணையத்தின் நிலையான மாதிரி அளவு பல்வேறு சூழ்நிலைகளில் குறைபாடுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தவறவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
மிகை வடிவியல் விநியோக மாதிரி (hypergeometric distribution model) பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் குறைபாடுகளின் சதவீதம் (P) பூஜ்ஜியத்திற்கு மிக அருகில் இருக்கும்போது இதற்கு மிகப்பெரிய மாதிரி அளவு தேவைப்படுகிறது. P அதிகரிக்கும் போது, தேவையான மாதிரி அளவு குறைகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மக்கள் தொகை அளவு (N) 100 ஆக இருக்கும்போது, தேவையான மாதிரி அளவு (n) 99 ஆகும். இதன் பொருள், மாதிரி அளவு கிட்டத்தட்ட முழு மக்கள்தொகையைப் போலவே பெரியது. N அதிகரிக்கிறது ஆனால் மெதுவான வேகத்தில். இறுதியில், (n) மக்கள்தொகை அளவு மேலும் அதிகரித்தாலும் அது மேலும் அதிகரிக்காத ஒரு புள்ளியை அடைகிறது. இந்த புள்ளி ஒரு ’பீடபூமியைத் தாக்குவது’ (hits a plateau) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 'மக்கள் தொகை' என்று நாம் கருதினால், தேவையான மாதிரி அளவுகள் (n) சிறிய மக்கள்தொகை அளவுகள் (N) காரணமாக மிகவும் பெரியவை. இது 'மக்கள்தொகை' என்பதை வரையறுக்கும் அத்தகைய தேர்வுகளை நிர்வாக ரீதியாக நடைமுறைக்கு ஒவ்வாததாக ஆக்குகிறது.
ஒரு மாநிலத்தில் அல்லது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 'மாதிரி' (population) என்று வரையறுப்பது ஒப்பீட்டளவில் சிறிய தேவையான மாதிரி அளவுகளை (n) விளைவிக்கிறது. ஏனெனில் மக்கள் தொகை அளவுகள் (N) மிகப் பெரியவை. இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர எண்ணிக்கைக்கும் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு இருந்தால், இவ்வளவு பெரிய மாதிரியின் மீதமுள்ள அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் (N-n) ஒப்புகைச் சீட்டுகளை கையால் எண்ணுவது ஒரு பெரிய பணியாகும். இந்தப் பணி இந்தியா முழுமைக்கும், சிறிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் நிர்வாக ரீதியாக சாத்தியமற்றதாகிவிடும்.
இந்திய தேர்தல் ஆணையம் இந்த முக்கியமான பிரச்சினையை கவனிக்கவில்லை. கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute (ISI)) இந்தியா முழுமைக்குமான 479 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி அளவை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. அதாவது ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது ஆகும். இந்த பரிந்துரை பெரிய மக்கள்தொகையில் உள்ள பொருத்தமின்மையைக் கையாள்வதில் உள்ள விரிவான பணிச்சுமை மற்றும் நிர்வாக சவால்களை நிவர்த்தி செய்யவில்லை.
அடுத்து என்ன?
பெரிய மாநிலங்களை 'பிராந்தியங்களாக' ஒழுங்கமைக்க மாதிரி அளவுகளில் 'பீடபூமி விளைவு' (‘plateau effect’) யோசனையைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பிராந்தியமும் சரியான எண்ணிக்கையிலான மாவட்டங்களால் உருவாக்கப்படும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் சுமார் 5,000 மாதிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும். "பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் EVMகள்" என்பது 'மாதிரி' என்று கருதப்படுகிறது. சராசரியாக, ஒரு மண்டலத்தில் சுமார் 20 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும். நமக்கு 438 மாதிரி அளவு தேவை. சராசரியாக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 22 EVMகளின் VVPAT சீட்டுகளை கையினால் எண்ண வேண்டும். உதாரணமாக, 150,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தை 30 பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் சுமார் 5,000 EVMகள் இருக்கும். குறைபாடுள்ள EVM கண்டறியப்பட்டால், VVPAT சீட்டுகளின் கைமுறை எண்ணிக்கை குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடக்கும். இந்த முறை புள்ளிவிவர ரீதியாக திடமானது மற்றும் நிர்வாக ரீதியாக நிர்வகிக்கக்கூடியது.
பல ஆண்டுகளாக, உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மெத்தனமாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவில் ( Article 324) கூறப்பட்டுள்ளபடி தேர்தல்கள் மீது தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரமாகும். எவ்வாறாயினும், VVPAT-அடிப்படையிலான EVMகளின் தணிக்கையை தேர்தல் ஆணையம் திறமையற்ற முறையில் கையாள்வதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது. இந்த பயனற்ற தன்மை VVPATஐ அறிமுகப்படுத்தியதன் நோக்கத்தை தோற்கடித்துவிடும். தணிக்கைக்கு மக்கள் தொகையை எவ்வாறு வரையறுக்கிறது, அதன் மாதிரி அளவை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இந்த வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே, VVPAT குறித்த உச்சநீதிமன்றத்தின் 2013 உத்தரவு அதன் நோக்கத்திலும் விரிவாகவும் முழுமையாக செயல்படுத்தப்படும்.
கட்டுரையாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் (Indian Maritime University) முன்னாள் துணைவேந்தரும் ஆவார்.