உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு செல்கிறது. கூடுதலாக, புதிய காரணிகள் பணவீக்கத்தை அதிகரிக்க செய்கிறது.
மார்ச் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (retail inflation ) 4.85% ஆகக் குறைந்துள்ளது. இது ஐந்து மாதங்களில் முதல் முறையாக 5% க்கும் கீழே குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் 5.1% இலிருந்து இது சிறிய குறைவு என்றாலும், மே 2023 க்குப் பிறகு இது மெதுவான விலை உயர்வு ஆகும். 2023-24 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சராசரி பணவீக்கம் 5% ஆக இருந்தது, ரிசர்வ் வங்கியின் கணிப்புகளுடன் பொருதுகிறது. ரிசர்வ் வங்கி கணித்தபடி, கடந்த ஆண்டு முழுவதும், நுகர்வோர் விலைகள் சராசரியாக 5.4% அதிகரித்தது. எரிசக்தி மற்றும் உணவு விலைகளைத் தவிர்த்த முக்கிய பணவீக்கம், தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு 4% க்கும் குறைவாக இருந்தது. இந்தியாவில் எரிபொருள் பணவீக்கம் (fuel inflation) மார்ச் மாதத்தில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு -2.7% ஐ எட்டியுள்ளதாக குவாண்ட்இகோ ஆராய்ச்சி (QuantEco Research) கண்டறிந்துள்ளது. தொடர்ந்து ஏழு மாதமாக எரிபொருள் விலைவீழ்ச்சி அடைந்து வருவதை காட்டுகிறது. அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹2 குறைக்கப்பட்டது மற்றும் சிலிண்டர் விலையும் ₹100 குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்புகள் தேர்தலுக்கு முன் செய்யப்பட்டவை என்பதால், அவற்றின் முழு பலனும் இந்த மாதம் தெரியும். இந்த நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. உணவுப் பொருட்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளது. மேலும், கிராமப்புற நுகர்வோருக்கு ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பலவீனமான பருவமழையின் காரணமாக இந்த மாற்றங்கள் நடந்து வருகிறது.
விலைவாசி எப்படி உயர்கிறது என்பதை அளவிடும் பணவீக்கம் (Inflation) அதிகமாக உள்ளது. நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (Consumer Food Price Index (CPI)) 2023-24 ஆம் ஆண்டில் சராசரியாக 8% ஆக இருந்ததாகவும், ஜனவரி முதல் மார்ச் வரை 8.5% ஆக உயர்ந்ததாகவும் காட்டுகிறது. அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் சில பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது. ஜூலை முதல் நல்ல பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கை உதவக்கூடும். ஆனால், வெப்ப அலைகள் அழுகக்கூடிய பொருட்களை அச்சுறுத்துகின்றன. மேலும், சில முக்கியமான பொருட்கள் தொடர்ந்து பணவீக்கத்தை சந்தித்து வருகின்றன: காய்கறிகள் ஐந்து மாதங்களாக, பத்து மாதங்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் 22 மாதங்களுக்கு மசாலா வகைகள் என சில பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஏழு மாதங்களாக வீழ்ச்சியடைந்த பின்னர் மார்ச் மாதத்தில் தானியங்களின் விலை உயர்ந்தது. முட்டை, இறைச்சி, மீன் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பணவீக்கம் 4.5% ஆக குறையும் என்று கணித்துள்ளது. ஆனால் முதல் காலாண்டில் இது 4.9% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. 4% இலக்கை அடைவது 54 மாதங்களாக சவாலாக உள்ளது. மார்ச் மாதத்தில், நகர்ப்புற பணவீக்கம் கிட்டத்தட்ட 4.14% இலக்கை எட்டியது. ஆனால் கிராமப்புறங்களில் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 5.34% இல் இருந்து 5.45% ஆக உயர்ந்தது. விலை உயர்வு நுகர்வோருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கச்சா எண்ணெய் விலை எண்ணெய் விலை இந்த மாதம் பேரலுக்கு $90 உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிச்சயமற்ற வட்டி விகித மாற்றங்கள் மற்றும் அதிகரித்த கப்பல் செலவுகள் ஆகியவை எதிர்காலத்தில் பணவீக்கத்தை மேலும் மோசமாக்கும்.