தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் பொருளாதார வாக்குறுதிகளின் மத்தியில் அரசியல் கட்சிகள் கவனிப்பு பொருளாதாரத்தை (care economy) எவ்வாறு கையாளுகின்றன என்பதை தி இந்து ஆராய்ந்துள்ளது.
ஏப்ரல் 25-ஆம் தேதி அமராவதி பேரணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வீட்டில் பெண்கள் சமைப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற ஊதியமில்லாத வேலைகளைப் பற்றி பேசினார். அவர் பெண்கள் இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள் என்று பாராட்டினார்
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகளைச் செய்வதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். பெண்கள் அடிப்படையில் இரண்டு வேலைகள் செய்வதாக ‘டைம் யூஸ் கணக்கெடுப்பு 2019’ தெரிவிக்கிறது. பெண்கள் வீட்டிற்கு வெளியே சுமார் எட்டு மணி நேரம் கூலி வேலை செய்கிறார்கள். பின்னர், மற்றொரு எட்டு மணிநேரம் சமையல் மற்றும் வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் வீட்டில் செய்யும் வேலைக்கு போதுமான அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. மேலும், அரசாங்கங்கள் பெண்களுக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதில்லை.
முக்கியமாக பெண்களால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பொருளாதாரம், குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற ஊதியம் மற்றும் ஊதியம் இல்லாத வேலைகளை உள்ளடக்கியது. இந்தப் பணியானது தொழிலாளர்களை நிலை நிறுத்துவதற்கும், நலனை ஆதரிப்பதற்கும் முக்கியமானது, மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (GDP)) 7.5% பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் பராமரிப்புப் பொருளாதாரம் அளிக்கிறது. இருப்பினும், இது பெண்களுக்கு ஒரு 'நேரப் பற்றாக்குறையை' (‘time poverty’) உருவாக்குகிறது. முறையான நிதியுதவி அளிக்கப்பட்டால், பத்தாண்டுகளின் இறுதிக்குள் பராமரிப்புப் பொருளாதாரத் துறை 11 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். இவற்றில் 70% பெண்களுக்கு வாய்ப்பளிக்கலாம். இருப்பினும், இந்தியாவில் GDP-யில் 1%-க்கும் குறைவாகவே பராமரிப்புப் பொருளாதாரத்திக்காக (care economy) செலவழிக்கப்படுகிறது. இது பராமரிப்பை குறைத்து மதிப்பிட்டு குறைந்த ஊதியம் பெறுவதற்கு வழிவகுக்குகிறது.
இந்தியாவில், பராமரிப்புப் பொருளாதாரத் தொழிலாளர்களின் தெளிவான பட்டியல் இல்லை. இந்தக் குழுவில் வீட்டு பராமரிப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ASHAக்கள், வீட்டுப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
அவை அனைத்தும் அனைத்து வயது, திறன்கள் மற்றும் சுகாதார நிலைமைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய பங்களிக்கின்றன. பராமரிப்புப் பொருளாதாரம் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் அது எவ்வாறு கவனிக்கப்படுகிறது என்பதையும் பார்க்க தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட பொருளாதார வாக்குறுதிகளை தி இந்து ஆய்வு செய்து வருகிறது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. ஏழைக் குடும்பங்களில் உள்ள மூத்த பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் ₹1 லட்சம் வழங்க இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சி லக்பதி திதி என்ற திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் மாதந்தோறும் ₹1,000, அ.தி.மு.க., பெண்களுக்கு மாதந்தோறும் ₹3,000 வழங்க இருப்பதாக உறுதியளித்திருக்கின்றனர். அவர்கள் பராமரிப்பாளர்களைப் பற்றி பேசவில்லை. ஆனால், அவர்கள் பெண்களுக்கு உதவக்கூடிய எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற பணத்தையும் சலுகைகளையும் வழங்குகிறார்கள்.
அரசியல் கட்சிகள் பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றன. பாஜக இலவச ரேஷன் மற்றும் மின்சாரம் என்ற வாக்குறுதிகளை வழங்குகிறது. சுத்தமான தண்ணீரை உறுதி செய்யவும், பருப்பு வகைகள் மற்றும் சமையலை பொது விநியோக அமைப்பில் (Public Distribution System (PDS)) சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று திமுக பரிந்துரைக்கிறது. அதே நேரத்தில் CPI(M) PDS-ஐ உலகளாவியதாக மாற்ற விரும்புகிறது.
சுகாதார வாக்குறுதிகள் பெண்கள் அல்லது பராமரிப்பாளர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. ஏழைகளுக்கு ₹2.5 மில்லியன் வரை பணமில்லா காப்பீடு வழங்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அனைவருக்கும் இலவச மருத்துவம் (universal healthcare) என்று சிபிஐ(எம்) உறுதியளிக்கிறது. இலவச சுகாதார சேவைகளை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பெரிதாக்க 2019-ஆம் ஆண்டு உறுதிமொழியை விரிவுபடுத்த இருப்பதாக பாஜக கூறுகிறது. பெண்களின் புற்றுநோய்களைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் பாஜக கவனம் செலுத்துகிறது.
பராமரிப்புப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஒரு வழியாக தங்கள் குடும்பத்தை வீட்டில் கவனித்துக்கொள்பவர்களுக்கு பணம் கொடுப்பதைக் கருத்தில் கொள்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் வீட்டு வேலை செய்பவர்களுக்கு பணம் வழங்க பரிந்துரைத்தன. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இல்லத்தரசிகள் தங்கள் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க உதவும் வகையில் கோவா அரசு கடந்த ஆண்டு க்ரிஹா ஆதார் திட்டத்தைத் (Griha Aadhar scheme) தொடங்கியது.
அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHAs)), அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மதிய உணவு சமையல்காரர்கள் போன்ற முன்னணி சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த காங்கிரஸின் நியாய் பத்ரா (Nyay Patra) திட்டமிட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தி 14 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். இருப்பினும், பராமரிப்புப் பணியாளர்களின் முக்கியக் கோரிக்கையான நிரந்தர, ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக மாற்றவேண்டும் என்று கோரிக்கைக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை.
இந்தியாவில் நான்கு முதல் 50 கோடி வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் குறைவான ஊதியம், அதிக வேலை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். வீட்டுப் பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை வழங்குதல் மற்றும் பெண்களுக்கு கழிவறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட விதிகளை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. வீட்டுப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்ற திமுக திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையின் ஒரு பகுதியாக உள்ளனர். மேலும், பல்வேறு கட்சிகள் அவர்களுக்காக வெவ்வேறு திட்டங்களை வைத்துள்ளனர். சிபிஐ(எம்) மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு நலன்கள் உட்பட உலகளாவிய சமூக பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிக் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த காங்கிரஸ் உறுதியளிக்கிறது.
கொள்கை ஆராய்ச்சி மையம் (Centre for Policy Research (CPR)) இந்தியாவில் பாலினம் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் அறிஞர் தன்யா ரானா, "தன்னார்வ" பராமரிப்பு பணியாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்று நினைக்கிறார்.
முறையான அமைப்புகளில், சமூக சேவையாளர்கள், பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள், மருத்துவர்கள், தொழில்சார் சிகிச்சையாளர்கள் மற்றும் உடற்பயிற்சி மருத்துவர்கள் போன்ற பராமரிப்பாளர்கள் மக்களை கவனித்துக் கொள்கிறார்கள். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தண்டிக்க காங்கிரஸ் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கான நிதியுதவியை அதிகரிப்பது, தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான சலுகைகளை அதிகரிக்கவும், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பள்ளிகள் 75% பதவிகளை நிரப்புவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேம்பாடு பற்றி
பராமரிப்புப் பணிக்காக அதிகமான நபர்களுக்கு பயிற்சியளிப்பது இந்தியாவில் பராமரிப்பாளர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவும். இது உலகளவில் பராமரிப்புப் பணியாளர்களுக்கான சிறந்த இடமாக இந்தியாவை மாற்றும். பெண்கள் தலைமையிலான சுயஉதவிக் குழுக்களுக்கு ₹10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என திமுக உறுதியளித்துள்ளது. இதேபோல், பெண்கள் சுய உதவிக்குழுக்கள் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு சேவைத் துறையில் நுழைய பாஜக விரும்புகிறது.
சுய உதவிக் குழுக்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் கடன் தொகையை அதிகரிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜக அரசால் மூடப்பட்ட பாரதிய மகிளா வங்கியை மீண்டும் அனைத்து மகளிர் வாரியத்துடன் இணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு உத்தரவாதங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2025 முதல் அரசு வேலைகளில் பாதியை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 2026 எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதாக பாஜக உறுதியளிக்கிறது. தி.மு.க., சி.பி.எம்., மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற உறுதிமொழி எடுத்துள்ளன.
கட்டண பராமரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
உலகளாவிய குழந்தைப் பராமரிப்பு, போக்குவரத்து அணுகல் மற்றும் பாதுகாப்பு, மேலும் நெகிழ்வான வேலை மற்றும் விடுப்புக் கொள்கைகள் போன்றவை பராமரிப்பாளர்களுக்கு வேலை கிடைக்க உதவுவதாக திருமதி ராணா கூறுகிறார். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் தடைகளுக்குத் தீர்வாக தங்கும் விடுதிகள் மற்றும் காப்பகங்களை அவர் குறிப்பிடுகிறார்.
பெண்கள் அதிகமாக வேலை செய்ய உதவும் வகையில், வேலை மையங்களுக்கு அருகில் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் கட்டப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை இரட்டிப்பாக்க காங்கிரஸ் விரும்புகிறது மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சாவித்ரிபாய் புலே விடுதி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளிக்கிறது. தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு விடுமுறை வழங்கும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளது. காங்கிரஸ், மறுபுறம் நியாயமான மற்றும் சம ஊதியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறது. வேலைக்கான பாதுகாப்பான இடங்களை உருவாக்குதல், நியாயமான மற்றும் சமமான ஊதியம் போன்ற நடவடிக்கைகள், பாதுகாப்பான வேலை இடங்கள், குழந்தை பராமரிப்பு சேவைகள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பது; மற்றும் மகப்பேறு சலுகைகளை நீட்டித்தல்.
பிஜேபியின் நாரி சக்தி (Nari Shakti) நிகழ்ச்சிநிரல், அதிக பெண்கள் பணியிடத்தில் சேர உதவும் வழிகளைப் பற்றி பேசவில்லை. பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரத்தை வழங்குவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2022-ல் பேசினார். அஷ்வினி தேஷ்பாண்டே (Ashwini Deshpande) மற்றும் நைலா கபீர் (Naila Kabeer’s) ஆகியோரின் ஆய்வுகள், பெண்கள் தங்கள் வீட்டுப் பொறுப்புகளுக்கு ஏற்ற வேலைகளை விரும்புகிறார்கள் என்று கண்டறிந்தனர்.
அரசியல் கட்சிகள் நலவாரியங்கள், இலவசப் பொருள்கள் போன்ற வாக்குறுதிகளை அளித்து பெண்களின் வாக்குகளைப் பெற முயற்சிகின்றனர். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், பெண்கள் சுமக்க வேண்டிய பராமரிப்புப் பொறுப்புகளைப் பற்றி அவர்கள் போதுமான அளவு பேசவில்லை. மகப்பேறு நலன்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு போன்ற விஷயங்களைப் பற்றி சில குறிப்புகள் இருந்தாலும், பெற்றோர்கள் இருவரும் பராமரிப்புக் கடமைகளைப் பகிர்ந்து கொள்வதை எளிதாக்குவதில் போதுமான கவனம் இல்லை. முக்கிய பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான வீட்டு வேலைகளை பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சமூகம் இன்னும் எதிர்பார்க்கிறது. இது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது என்று டாக்டர் தேஷ்பாண்டே மற்றும் டாக்டர் கபீர் ஆகியோர் குறிப்பிட்டனர்.
அரசியல் கட்சிகள் குறிப்பாக நெகிழ்வான பணிக் கொள்கைகள், மகப்பேறு மற்றும் மகப்பேறு விடுப்பு அல்லது பெண் பராமரிப்பாளர்களின் முறையான அங்கீகாரம் பற்றி பேசவில்லை. "பெண்கள்" (“women”) மற்றும் "நாரி சக்தி" (“Nari Shakti”) என்ற சொற்கள் பொதுவானவை. இந்தச் சேவைகளால் எந்தப் பெண்கள் பயனடைவார்கள் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறது. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் நிவாரணச் சட்டம் 2013 (Prevention, Prohibition and Redressal Act, 2013) மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 (Protection of Women from Domestic Violence Act, 2005) ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்தச் சட்டங்கள் அமைப்புசாரா துறை அல்லது தற்காலிக வேலைகளை (gig economy) செய்பவர்களை உள்ளடக்காது. ஏனென்றால், சட்டங்களில் "பணியாளர்கள்", "பணியிடங்கள்" மற்றும் "முதலாளிகள்" போன்ற கடுமையான வரையறைகள் உள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) ஆய்வுபடி, இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் குறைந்தது 81.8% பேர் முறைசாரா துறையில் (informal sector) உள்ளனர்.
சில வரம்புகள் நுட்பமானவை மற்றும் மறைக்கப்பட்டவை. பராமரிப்பை அரசியலில் ஒருங்கிணைக்கும்போது, எதிர்க்கும் சக்திகள் உள்ளன. திருமதி.ரானாவின் கூற்றுப்படி, தண்ணீர் அல்லது எரிபொருள் திட்டங்கள், பணப் பரிமாற்றம் அல்லது ஆணாதிக்க சூழலில் வீட்டு வேலைகளைச் சார்ந்து ஊதியம் வழங்குவது போன்ற கொள்கைகள் வீட்டு வேலை என்பது ஒரு பெண்ணின் வேலை என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. மறுபுறம், ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளுக்கு ஈடுசெய்வது, பெண்களுக்கு பொருளாதார ஆதரவை அளிக்கிறது.
பராமரிப்பு மற்றும் மகப்பேறு சலுகைகளுக்கான வழிகள் பெண்களுக்கான இழப்பீடாகக் காணப்படுகின்றன. இருப்பினும், தற்போதைய அரசியல் மற்றும் சட்டப் பார்வைகள் பராமரிப்பை எளிதாக்கவோ அல்லது அதிக பலனளிப்பதாகவோ இல்லை. பெண்களுக்கு போதுமான அங்கீகாரம் அல்லது உரிமைகள் கிடைக்கவில்லை. மேலும், பொறுப்புகள் மற்றும் வேலைகளை பிரிப்பது நியாயமானதல்ல என்று 2022ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றில் சாதா ஸ்ரீதர் (Chadha Sridhar) குறிப்பிட்டார்.
பெண் பராமரிப்பாளர்களுக்கான சிறந்த கொள்கை எப்படி இருக்கும்? 2024 பெண் பராமரிப்பாளர்களுக்கான ஒரு சிறந்த கொள்கையானது ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்: விடுப்பு விருப்பங்களை வழங்குதல், பராமரிப்பு சேவைகளுக்கு நிதி உதவி வழங்குதல், பகல்நேர பராமரிப்பு மையங்கள் போன்ற பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல், பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல். ஐக்கிய நாடுகள் சபையானது (united nations organization (UNO)) ஊதியம் பெறாத பராமரிப்புப் பணியை அங்கீகரிக்கவும், குறைக்கவும் மற்றும் மறுபகிர்வு செய்யவும் ஒரு கட்டமைப்பை பரிந்துரைக்கிறது. அதே நேரத்தில் பராமரிப்புப் பணியாளர்களை மதிப்பிட்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அரசியல் வாக்குறுதிகள் தற்போதைய காலத்துடன் ஒத்துப்போவதை உறுதிசெய்ய, பெண்கள் தங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பது பற்றிய வழக்கமான புள்ளிவிவரங்களை வெளியிடவும், அவர்களின் கவனிப்புப் பணியை எப்படி அளவிடுகிறோம் என்பதை மேம்படுத்தவும் பரிந்துரைக்கிறார். இது பராமரிப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் மற்றும் பாரம்பரிய பாலின பாத்திரங்களை சவால் செய்யும் சிறந்த கொள்கைகளுக்கு வழிவகுக்கும் என்று திருமதி. ராணா கூறுகிறார்.
இந்தக் கொள்கைகள் சமூகத்தில் மற்றவர்களை யார் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய பாரம்பரிய கருத்துக்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று தான்யா ராணா (Tanya Rana) தனது கவலைகளை வெளிப்படுத்தினர்.