ஐக்கியநாடுகள் பொதுச் சபையில் (U.N. General Assembly) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், 143 நாடுகள் ஆதரவாகவும், 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. மேலும், இதில் 25 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானம் பாலஸ்தீனர்களை முழு உறுப்பினர்களாக ஆக்கவில்லை. ஆனால், அவர்கள் உறுப்பினர்கள் ஆவதற்கான தகுதியுடையவர்கள் என்று கூறுகிறது.
மே 10 அன்று, ஐக்கியநாடுகளின் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்தது. ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் முழு உறுப்பினர் ஆவதை இந்தத் தீர்மானம் ஆதரிக்கிறது. ஆனால், ஐக்கியநாடு பாதுகாப்பு கவுன்சில் இந்தத் தீர்மானத்தை சாதகமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கியநாடு பொதுச் சபையானது காலையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. அரபுக்குழு சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் இந்த தீர்மானத்தை முன்வைத்தது. மே மாதம், இந்தியா தீர்மானத்தை ஆதரித்தது. அதற்கு ஆதரவாக 143 வாக்குகள் கிடைத்தன. இதில், ஒன்பது நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன. மேலும் 25 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடு பொதுச்சபை அரங்கில் வாக்களித்ததைத் தொடர்ந்து கரவொலி எழுந்தது. மே 10, 2024 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் போது, ஐக்கியநாடுகள் சபைக்கான பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்கு முன்பு பிரதிநிதிகளுடன் பேசினார். பாலஸ்தீனம் ஐ.நா.வின் முழு உறுப்பினர் ஆவதற்கான தகுதியை அங்கீகரிக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானத்தின் நோக்கம்.
ஐ.நா சாசனத்தின் 4-வது பிரிவின்படி, பாலஸ்தீனம் ஐக்கிய நாடு உறுப்பினர் உரிமைக்கு தயாராக உள்ளது என்று தீர்மானம் குறிப்பிட்டிருந்தது. இதை, ஐக்கியநாடு பாதுகாப்பு கவுன்சில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து பாலஸ்தீனத்தை உறுப்பினராக அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
1974ஆம் ஆண்டில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை (Palestinian Liberation Organisation (PLO)) பாலஸ்தீன மக்களின் ஒரே சரியான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா ஆனது. பின்னர், 1988-ன், தொடக்கத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் இருந்தது. பின்னர், 1996-ல், இந்தியாவானது பாலஸ்தீன ஆணையத்திற்காக காசாவில் தனது பிரதிநிதி அலுவலகத்தை (Representative Office) நிறுவியது. இந்த அலுவலகம் 2003-ல் ரமல்லாவுக்கு மாற்றப்பட்டது.
உரிமைகளும் சலுகைகளும்
2024 செப்டம்பரில், ஐக்கிய நாடு பொதுச் சபையின் 79-வது அமர்வு தொடங்கி, பாலஸ்தீனத்திற்கு அதிக உரிமைகள் இருக்கும் என்று தீர்மானத்தின் இணைப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உரிமைகளாவன:
1. அகர வரிசைப்படி உறுப்பு நாடுகளிடையே அமரக்கூடிய உரிமையும் இதில் அடங்கும்.
2. ஒரு முக்கிய குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட ஒரு குழுவின் சார்பாக அறிக்கைகளை வெளியிடுவதற்கான உரிமை.
3. பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள், ஐக்கியநாடு பொதுச் சபையின் முழுமையான மற்றும் பிரதான குழுக்களில் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
4. ஐக்கியநாடு பொதுச் சபையால் ஏற்பாடு செய்யப்படும் ஐ.நா மாநாடுகள் மற்றும் பிற சர்வதேசக் கூட்டங்களில் முழுமையாக பங்கேற்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு.
பாலஸ்தீனம், ஒரு பார்வையாளர் நாடு என்ற முறையில், ஐக்கியநாடு பொதுச் சபையில் வாக்களிக்கவோ அல்லது ஐக்கியநாடு உறுப்புகளுக்கு தனது வேட்புமனுவை முன்வைக்கவோ உரிமை இல்லை.