உலகெங்கிலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் காலநிலை நெருக்கடியை அவசரநிலையாகப் பார்க்கிறார்கள். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியுடன், இலக்குகளை அடைய முடியும் என்று நம்ப வேண்டும். இந்தப் பணிக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் உள்ளன.
உலகம் வேகமாக வெப்பமடைகிறது. வரும் நாட்களில் இது மிக பெரிய சவாலானதாக இருக்கும். எவ்வாறு தடுப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் தி கார்டியனின் (the Guardian) சமீபத்திய ஆய்வில், பல முன்னணிக் காலநிலை விஞ்ஞானிகள், ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பை மீறி, உலகின் வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் குறைந்தது 2.5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று கணித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகளில் ஒரு சிலர் மட்டுமே வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தும் இலக்கை அடைய முடியும் என்று நினைக்கின்றனர்.
வெப்பநிலை சூடாகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு சேவை கடந்த ஜூன் முதல் ஒவ்வொரு மாதமும் முன்பை விட வெப்பமாக இருப்பதாக கூறுகிறது. வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் பல நோய்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இந்த பிரச்சினைகள் எதிர்காலத்தில் இன்னும் மோசமடையும், சமூக மோதல்களை ஏற்படுத்தும் மற்றும் பலரை இடம்பெயரக் கட்டாயப்படுத்தும். இதனால், ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். எதிர்காலம் இந்த நாடுகளுக்கு ஒரு அரை டிஸ்டோபியா (“semi-dystopian future”) போல இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகளாவிய தெற்கு என்று அழைக்கப்படும் உலகின் ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் ஏன் விரைவாகச் செயல்படவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த பிரச்சினை உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
எதிர்காலம் மிகவும் பயங்கரமானதாகத் தோன்றலாம், மக்கள் இதைப் புறக்கணிக்க விரும்புகிறார்கள் அல்லது எதுவும் செய்ய முடியாது என்று தோன்றுவதால் விட்டுவிடுகிறார்கள். விஞ்ஞானிகளிடம் இதைப்பற்றிக் கேட்டபோது அவர்கள் மோசமான நிலைமைக்குச் செல்லும் என்று எச்சரிக்கின்றனர். நிறைய நேரம் ஆய்வு செய்து பிரச்சனையை விஞ்ஞானிகள் விளக்கி இருக்கிறார்கள். ஆனால், அதை சரிசெய்வதற்கு யாரும் தயாராக இல்லை என்று கூறுகின்றனர். அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்காதபோது அவர்கள் நம்பிக்கையற்றவர்களாகவும் கோபமாகவும் உணர்கிறார்கள். மேலும், பெரிய நிறுவனங்கள் மாற்றங்கள் செய்வதை எதிர்க்கின்றன. தனிநபர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மட்டும் மாற்றினால் போதாது. ஒட்டுமொத்தமாக எப்படிச் செய்யப்படுகிறது என்பதில் பெரிய மாற்றங்கள் தேவை.
சில சமயங்களில் மக்கள் தாங்கள் ஆதரிப்பதாகக் கூறுவதும் உண்மையில் அவர்கள் வாக்களிப்பதும் ஒன்றல்ல. புவி வெப்பமடைதலைக் கையாள்வது அதன் விளைவுகளை பின்னர் கையாள்வதை விட மலிவானது. ஆனால். அதற்கு முன்கூட்டியே பணம் செலவாகும் மற்றும் பலன்கள் காட்டப்படுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இது தேர்தல்களுக்கு இடையிலான நேரத்தை விட நீண்ட காலம் ஆகும்.
மாற்றம் தேவை என்று மக்கள் கூறுவதற்கு அரசியல்வாதிகள் சிறப்பாக செயல்படாததேக் காரணம். சில வல்லுநர்கள் வாக்காளர்கள் விரும்புவதை அரசியல்வாதிகள் செய்யவில்லை என்று நினைக்கிறார்கள். மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், பருவநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் தலைவர்களை ஆதரிக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, இந்த ஆண்டு பல முக்கியமான தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இளைஞர்கள் காலநிலை நெருக்கடியைப் பற்றி அதிக அக்கறை காட்டுகிறார்கள் மற்றும் அதை நிவர்த்தி செய்ய தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற தயாராக உள்ளனர். விஷயங்கள் நம்பிக்கையற்றதாகத் தோன்றும்போது, ஹென்றி வைஸ்மேன் (Henri Waisman), 2005-க்குப் பிறகு எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும், சிறிய மாற்றங்கள் கூட மிகவும் முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ள உதவுகிறது என்று கூறுகிறார். காரணத்திற்காக போராடுவது இன்னும் மதிப்புக்குரியது.
காலநிலை மாற்றத்தின் பரந்த சவாலுக்கு எதிராக தனிப்பட்ட முயற்சிகள் சிறியதாகத் தோன்றலாம். ஆயினும்கூட, இந்த நடவடிக்கைகள் பொது விழிப்புணர்வை உருவாக்கவும், மாற்றம் அடையக்கூடியது என்ற நம்பிக்கையை உருவாக்கவும் உதவுகின்றன. இது முறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. காலநிலை மாற்றத்தில் முக்கியமான புள்ளிகள் இருப்பதைப் போலவே, சமூகத்திலும் முக்கியமான தருணங்கள் உள்ளன. சமூக முக்கிய புள்ளிகளை (social tipping points) முடிந்தவரை வேகமாக அடைய வேண்டும்.