சலுகைகள் தரும் வசதி சிலருக்கு தங்கள் நாட்டில் அல்லது உலகில் நடப்பதோடு தங்களுக்கு தொடர்பில்லை என்று உணர வைக்கிறது.
2014 பொதுத் தேர்தலில், நான் வாக்களிக்க முடியாததால் மிகவும் ஏமாற்றமடைந்தேன். 2015ஆம் ஆண்டு தேர்தல் நடந்திருந்தால் என்னால் வாக்களிக்க முடிந்திருக்கும். வாக்களிக்க 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே, 2019-ல், முதல் முறையாக வாக்களிக்க நான் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விரும்பிய வேட்பாளருக்கு நான் வாக்களிக்க விரும்பவில்லை. வேட்பாளர்கள் குறித்தும், அவர்களின் கட்சியின் இலக்குகள் குறித்தும் தெரிந்துகொண்டு, அறிவின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய விரும்பினேன்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களுடன் நான் இப்போது பணியாற்றுகிறேன். அவர்கள் முன்பு போல் வாக்களிப்பதில் உற்சாகமாக இல்லை என்பதை நான் கவனிக்கிறேன். இந்தியத் தேர்தல் ஆணையத்தின்படி, 2024 தேசியத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற முதல் முறை வாக்காளர்களில் 38%, அதாவது 49 மில்லியனில் 18 மில்லியன் பேர் வாக்குப் பதிவு செய்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பீகாரில் 17% இளைஞர்கள் மட்டுமே வாக்குப் பதிவு செய்துள்ளனர், டெல்லியில் அது வெறும் 21% மட்டுமே. இந்த அமைப்பு நம்பிக்கையைத் தூண்டவில்லையா, இளைஞர்களுக்கு அதில் ஈடுபாடில்லையா, அல்லது வேறு ஏதாவது காரணமா?
இந்த ‘முறை’ என்னை கவலையடையச் செய்கிறது. ஏனெனில், இது பல இளைஞர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பெரும்பாலான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதை இது காட்டுகிறது. உயரடுக்கு நகர்ப்புற வட்டங்களில், சலுகை பெற்ற மக்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டிலும் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதிலிருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.
ஒரு ஆசிரியராக, மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆர்வம் இல்லாததை நான் கவனிக்கிறேன். காலக்கெடு, பாடநெறி சார்ந்த நடவடிக்கைகள், கல்விக்கான வகுப்புகள் மற்றும் கல்லூரிக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டிய அவசியம் ஆகியவற்றால் அவர்கள் அழுத்தத்தை உணர்கிறார்கள். வேலைச்சுமை மற்றும் தனக்காக ஆதாயம் பெற விரும்புவது காரணமாக தங்கள் பாதுகாப்பான வட்டத்தை தாண்டி, தங்களை விட பெரிய செயல்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகுகிறார்கள்.
தனிநபர்கள் மீது அதிக கவனம் செலுத்தி, சமூகங்கள் மீது போதுமான கவனம் செலுத்தாத இந்த மனநிலை ஜனநாயகத்திற்கு எதிரானது. "என் வாக்கு உண்மையில் முக்கியமா?" என்று கேள்வியெழுப்பப்படுவது, மக்கள் குறைவாக ஈடுபடுவதைக் காட்டுகிறது. குறிப்பாக தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்தும் போட்டி பணியிடங்களில், இந்த சிந்தனை ஆரம்பத்திலிருந்து ஒட்டிக்கொள்கிறது. முதலாளித்துவத்தின் கீழ் கடினமாக உழைக்கவும், எப்போதும் "உற்பத்தித்திறனுடன்" (productive) இருக்கவும் தொடர்ச்சியான உந்துதல் மக்களை அரசியலுக்கு நேரமில்லை எனும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. அவர்களை அக்கறையற்ற குடிமக்களாக மாற்றுகிறது.
பெரும்பாலான மக்களின் ஓய்வு நேரம் பொழுதுபோக்குச் சாதனங்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, அவற்றை குறிப்பாக சமூக ஊடகங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம். நமக்குத் துல்லியமான செய்திகளைத் தரும் கணக்குகளைப் பின்தொடர வேண்டும். தினசரி அன்றைய நிலையை அறிதல் மூலம் திரையை நகர்த்தும்போது செய்திகளை அணுகுவதை எளிதாக்குவதே குறிக்கோள். இது வெறும் ஆரம்பம் தான். என்ன நடக்கிறது என்று மக்களுக்குத் தெரியாவிட்டால் அல்லது சிக்கலைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அதைச் சரிசெய்ய உதவுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
நாட்டின் அரசியல் பிரச்சினைகள் பலருக்கும் தெரியும். தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், இதில் வெறுக்கத்தக்க பேச்சுகள் நிறைய உள்ளன. சிலர் எந்த நல்ல விருப்பங்களும் இல்லை என்று உணர்கிறார்கள். எனவே, அவர்கள் விஷயங்களை சரிசெய்ய முயற்சிப்பதை விட்டுவிடுகிறார்கள். விஷயங்கள் எவ்வளவு மோசமானவை என்பதைப் பார்ப்பது கடினம். அவற்றை மாற்றுவதில் சோர்வடையாமல் இருப்பது கடினம். இந்த உணர்வு மக்கள் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும். ஒரு பிரச்சினையைப் பற்றி மக்களுக்குத் தெரியாவிட்டால் அல்லது அதைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதைத் தீர்ப்பது கடினம். ஆனால் இந்த யோசனைக்கு இன்னும் நிறைய இருக்கிறது. அரசியலில் அக்கறை கொண்டவர்களும், இணையத்தில் அதைப் பற்றி பேசுபவர்களும்கூட வாக்களிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மக்கள் கல்விக்காகவோ அல்லது வேலைக்காகவோ நகரும் போது, தொகுதியில் மாற்றத்தை உறுதிசெய்யக்கூடிய நிர்வாகப் பணிகளை அவர்கள் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.
குறைந்த வாக்குப்பதிவு மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பிரித்தெடுப்பதில், நமது ஜனநாயகம் குடிமைக் கல்வியின் பற்றாக்குறை மற்றும் நகர்வுத் தாடையில் சிக்கியுள்ளது என்பது தெளிவாகிறது. இளம் வாக்காளர்களிடையே காணப்படும் அக்கறையின்மையை வடிவமைப்பதில் ஒவ்வொரு காரணியும் பங்கு வகிக்கிறது. நான் நம்பிக்கையுடன் இருக்க விரும்பும் அதே வேளையில், தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை செழுமைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஒரே நேரத்தில் கொண்டு வருவதில் பெரும் சவால்கள் இருப்பதையும் உணர்கிறேன்.
கட்டுரையாளர் டெல்லியைச் சேர்ந்த ஆசிரியர் ஆவார்.