பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான ஆதரவுத் திட்டத்தின் தோல்வி - வித்யா ரெட்டி, சன்னுதி சுரேஷ்

 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 6-ன் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவிற்கான திட்டத்தில் பல இடைவெளிகள் உள்ளன.


நவம்பர் 30, 2023 அன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women and Child Development) ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. இது “பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டம், 2012-இன் பிரிவு 4 & 6-ன் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவிற்கான திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது "ஒரே கூரையின் கீழ்" (“under one roof”) ஆதரவை வழங்குகிறது. நீண்ட கால மறுவாழ்வுக்காக அவசர மற்றும் அவசரமற்ற சேவைகளுக்கு உடனடி அணுகலை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் பெயரில் எந்த நோக்கத்தையும் தெளிவாக விளக்கவில்லை. இதற்கான காரணங்கள் அமைச்சகத்திற்கு மட்டுமே தெரியும்.


மேற்பார்வைகள் மற்றும் முரண்பாடுகள்


ஆரம்பத்தில், இந்தத் திட்டம் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற கர்ப்பிணிப் பெண்களுக்காக மட்டுமே இருந்தது. இப்போது, POCSO சட்டத்தில்  குறிப்பிடப்பட்ட பிரிவுகளின்கீழ் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் சேர்ப்பதற்காக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் சில சிக்கல்கள் நீடிக்கிறது. ஒரு சில மாற்றங்களைத் தவிர, புதிய உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படவில்லை. தேவையான பல மாற்றங்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

 

தவறான சொற்கள், தற்செயலாக அல்லது வேண்டுமென்றே இருந்தாலும், இரண்டு வழிகளில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முதலாவதாக, போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 6-ன் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பாலினத்தவராகவும் இருக்கலாம். இரண்டாவதாக, இந்த திட்டம் 18 வயதிற்குட்பட்ட  பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் பாதுகாப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகமானது. இந்தச் சிறுமிகளில் பலர் 13-18 வயதுக்குட்பட்டவர்கள் என்ற உண்மையை மறைப்பதாகத் தெரிகிறது. "இந்த சந்தர்ப்பங்கள் பலவற்றில், பெண்கள் கர்ப்பமடைகிறார்கள்" என்று கூறுகிறது.


இளமைப் பருவ பாலுறவு (adolescent sexuality) என்பது மனித வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். இங்கு இளம் பருவத்தினர் பாலியல் உணர்வுகளை எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். இளைஞர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (sexual and reproductive health (SRH)) தகவல் மற்றும் சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் எதிர்வினையாற்றுவதைக் (reactive) காட்டிலும் செயலாற்ற (proactive) வேண்டும். சமூகவியல், மருத்துவம் மற்றும் நீதித்துறை தரவுகளால் சுட்டிக்காட்டப்பட்டபடி சட்டம் பயனுள்ளதாக இல்லை. பாலியல் வன்முறை மற்றும் சுரண்டல் காரணமாக கர்ப்பம் தரிக்கும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் அமைப்பதற்கும் அரசாங்கம் தனது முயற்சிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கம் SRH தகவலை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பாலியல் வன்முறை எதிராகக் கல்வி  வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.


இத்திட்டம் "ஒவ்வொரு பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குழந்தைக்கும்" சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது இரண்டு வகைகளை தெளிவாக வரையறுக்கிறது. முதல் பிரிவில் விருப்பம் அல்லது இயல்புநிலை மூலம் கர்ப்பத்தைத் தொடர்பவர்கள் அடங்கும். இரண்டாவது பிரிவில், அவர்களின் கர்ப்பம் மற்றும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படாதவர்கள் கர்ப்பத்தை மருத்துவ முடிவிற்கு உட்படுத்த (medical termination of pregnancy (MTP)) புகாரளிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர் MTP-யை தேர்வு செய்தாலோ அல்லது கருச்சிதைவு ஏற்பட்டாலோ, பலன்கள் தொடர்ந்து வழங்கப்படுமா என்பது குறித்து இந்தத் திட்டம் குறிப்பிடவில்லை


உதாரணமாக, வழக்கு அறிவிக்கப்பட்டு கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு ஒரு பெண்ணுக்கு 18 வயதாகலாம். அவரது தனிப்பட்ட சூழ்நிலைகள் காலப்போக்கில் மாறக்கூடும். 23 வயதில் நிலைமை மாறினால், வாத்சல்யா திட்ட  (Mission Vatsalya) பலன்களைப் பெறலாம். இந்தத் திட்டம் குழந்தை வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப பாதுகாப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் தற்போதுள்ள சட்டங்கள், விதிகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் பல வெளிப்படையான மேற்பார்வைகள் மற்றும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.


எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தையின் மருத்துவ பரிசோதனையைக் கையாளும் POSCO சட்டம், 2012-இன் பிரிவு-27, பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை நிறுவன அல்லது நிறுவனம் சாராத பராமரிப்பில் வைப்பதை தீர்மானிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருந்தாலும், 12 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையின் பாலியல் வன்கொடுமை மருத்துவ பரிசோதனைக்கும் குழந்தைகள் நலக் குழு  (Child Welfare Committee (CWC)) ஒப்புதல் அளிக்க முடியும் என்று இந்தத் திட்டம் தவறாகக் குறிக்கிறது.


மருத்துவக் கருக்கலைப்பு (Medical Termination of Pregnancy (MTP)) ஏற்பட்டால், மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அரசு வசதியிலோ அல்லது பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரிடமோ மருத்துவக் கருக்கலைப்பு சோதனைக்கு  உத்தரவிட வேண்டும் என்று திட்டம் கூறுகிறது. இந்த நிபந்தனை தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்துகிறது. இது தேவையற்றது மற்றும் MTP சட்டத்துடன் இணைந்து செயல் படவில்லை.  கூடுதலாக, MTP பற்றிய 21 பக்க குறிப்பு ஆவணத்தில் தோராயமாக சேர்க்கப்பட்ட இரண்டு வாக்கியங்களாகக் குறைக்கப்பட்டது. கர்ப்பத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அதைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதற்கான விருப்பங்கள் பற்றி விவாதங்கள் ஆரம்பத்தில் உரையாற்றப்பட வேண்டும்.


விதிகளுக்கு முரணானது


POCSO சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட, தானாகவே பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளாக (Children in Need of Care and Protection (CNCP)) தகுதி பெற மாட்டார்கள். அவர்களின் குடும்பம் அல்லது பாதுகாவலர் தேவையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கினால், அவர்களை CNCP என முத்திரை குத்தாமல் அவர்களுக்கு நன்மைகள் வழங்கப்படலாம். இருப்பினும், திட்டத்தின் படி, அனைத்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களும் பலன்களைப் பெற CNCP-ஆகக் கருதப்பட வேண்டும். இது POCSO விதிகளின் விதி 4(4) மற்றும் சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், சிறார் சட்டம் 2015 (Juvenile Justice,2015) பிரிவு 2(14) ஆகியவற்றுக்கு முரணானது. இது குழந்தைகள் நலக் குழு (CWC) மற்றும் இந்தச் சட்டங்களின் கீழ் மற்ற அனைத்து உதவியாளர் நடைமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.


"திட்டத்தின் செயல்முறை ஓட்டத்தில்" (“Process Flow of the Scheme”) பட்டியலிடப்பட்டுள்ளபடி, நிறுவனப் பராமரிப்பில் உள்ள பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், நிறுவனம் சாராத பராமரிப்பில் உள்ளவர்களுக்கும், அதாவது தங்கள் குடும்பத்துடன் வாழ விரும்பும் சிறுமிகளுக்கும் பொருந்துமா என்பதை இந்தத் திட்டம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


ஒரு இளம் தாய் தனது குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தால், "பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை புதிதாகப் பிறந்த குழந்தை நியமிக்கப்பட்ட SAA-ல் வைக்கப்படலாம். அதன் பிறகு, சிறார் சட்டத்தின் 35-வது பிரிவின்படி சரணடைதல் செயல்முறை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படும். " இது  ஒன்றிய  தத்தெடுப்பு வள ஆணையத்தால் (Central Adoption Resource Authority (CARA))  மேற்பார்வையிடப்பட்ட தத்தெடுப்பு விதிமுறைகளுக்கு முரணானது. இது ஒரு தாய் தனது குழந்தையை ஒப்படைக்க வயது வரம்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் திட்டம் இப்போது குழந்தையை தேவையற்ற நீண்டகால நிறுவனமயமாக்கலுக்குத் தள்ளுகிறது.


பணவியல் தாக்கங்கள்


அரசுக் கருவூலத் திட்டத்தின் தாக்கம்


குழந்தை திருமணங்கள் மற்றும் பதின்பருவ கர்ப்பங்களில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் காரணமாக அரசுக் கருவூலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். போக்சோ சட்டம், 2012-ன் கீழ் புதிய அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு குழந்தைக்கும் நிதி உதவி கிடைக்கும். 18 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண் ஆரம்ப கட்டணமாக ₹6,000 மற்றும் மாதந்தோறும் ₹4,000 பெறுவார். இந்த ஆதரவு அவருக்கு 21 வயதாகும் வரை தொடரும், 23 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.


போக்சோ சட்டம், 2012-ன் விதி, பிரசவம் அல்லது கர்ப்பம் தொடர்பான மருத்துவமனை வருகைகளின் போது சுகாதார அதிகாரிகளால் புகாரளிக்கப்பட்ட வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக, சுகாதாரம் மற்றும் காவல்துறை தரவுகளின் முழுமையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இந்த பகுப்பாய்வு திட்டமிடல், வரவு செலவுத் திட்டம் மற்றும் திட்டத்திற்கான வழங்குதல் ஆகியவற்றிற்கு உதவும்.


தகவலறியும் உரிமை தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிதிசார் தாக்கங்கள்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூறப்பட்ட  பதிலில், 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் வரை 18 வயதுக்குட்பட்ட 1,448 சிறுமிகள் தென் மாவட்டங்களில் கர்ப்பம் அடைந்துள்ளார். பிரசவத்தின்போது இந்த இளம் தாய்மார்களின் சராசரி வயது 16 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். வாத்சல்யா திட்டம்  23-வயது வரை ஆதரவை வழங்குகிறது. ஒவ்வொரு தாய்க்கும் மொத்த நிதி ஒதுக்கீடு:


- ஆரம்ப கட்டணம்: ₹6,000


- 84 மாதங்களுக்கான மாதாந்திர கட்டணம் (7 ஆண்டுகள்): ₹4,000 x 84 = ₹3,36,000


- ஒவ்வொரு தாய்க்கும் மொத்தம்: ₹6,000 + ₹3,36,000 = ₹3,42,000


1,448 பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு, மொத்த செலவு ₹3,42,000 x 1,448 = ₹49,52,16,000 ஆகும்.


குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தற்போதைய திட்டத்தை சரிசெய்ய வேண்டும். இந்தத் திட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் ஒரு ஹாட்ச்பாட்ச் (hotchpotch) ஆகும். தற்போதுள்ள பல்வேறு சட்டங்கள், விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும். இவை ஒன்றையொன்று ஒருங்கிணைக்கும். திட்டத்தின் பல அம்சங்களை தரவு உறுதிப்படுத்த முடியும். இது அதை ஆதரிக்க உறுதியான ஆதாரங்களை வழங்கும்.


வித்யா ரெட்டி மற்றும் சன்னுதி சுரேஷ் சென்னையைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான துளிர் – குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மையத்தில் பணிபுரிகின்றனர்.




Original article:

Share: