2047-ஆம் ஆண்டில் இந்தியா 'வளர்ந்த’ நாடாக நாம் செய்ய வேண்டியது என்ன? -சி.ரங்கராஜன், டி.கே.ஸ்ரீவத்சவா

     முதலீட்டு விகிதங்களை உயர்த்துவது, உற்பத்தி, சேவைகள் மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் வேலைவாய்ப்புக்கு உகந்தத் துறைகளை ஊக்குவிப்பது ஆகியவை முக்கியமாகும். இருப்பினும், வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது ஒரு சவாலாக உள்ளது.


உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமீபத்திய நிகழ்வுகளில், இந்தியாவின் வளர்ச்சிக்கான தெளிவான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். இதில், மக்களின் எதிர்பார்ப்புகள் தெளிவாக உள்ளன. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், வளர்ந்த நாடாக மாறுவது என்றால் என்ன? சர்வதேச நிதி நிறுவனங்கள் (International financial organisation) தற்போது $13,845 மற்றும் அதற்கு மேல் தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளை வளர்ந்த நாடுகளாக வகைப்படுத்துகின்றன. 2047-ம் ஆண்டில், இந்த வரம்பு அதிகமாக இருக்கும். தற்போது, சர்வதேச நாணய நிதியம் ஏப்ரல் 2024-ன்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,500 ஆக முன்னோக்கி நீண்ட பயணத்தைக் காட்டுகிறது. இதை அடைய நமக்கு சராசரியாக 6-7% வருடாந்திர உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவை. நாம் அதை செய்ய முடியுமா?


பொருளாதார வளர்ச்சி உத்தியின் சிக்கல்களை ஆராய்வதற்குமுன், ஒரு எளிய கணக்கீடாக 5-ன் அதிகரிப்பானது மூலதன வெளியீட்டு விகிதத்தை (incremental capital output ratio (ICOR)) வெளிப்படுத்துகிறது. இது, 7% வளர்ச்சி விகிதத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% உண்மையான மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (gross fixed capital formation (GFCF)) விகிதம் தேவைப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்போது 35 சதவீதத்தை நெருங்கிவிட்டோம். உண்மையான மொத்த நிலையான மூலதன உருவாக்க (GFCF) விகிதத்தில் சமீபத்திய அதிகரிப்பு அரசாங்க மூலதன செலவினங்களால், குறிப்பாக மத்திய அரசால் ஏற்படுகிறது. கொரோனா தொற்றுக்கு பிந்தைய மூன்று ஆண்டுகளில் 6.7%, 6.4% மற்றும் 5.9% வரை மத்திய அரசின் அதிக நிதிப் பற்றாக்குறை காரணமாக அரசாங்க முதலீட்டு செலவினங்களில் (government capex) இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-2 சதவீத புள்ளிகள் அளவில் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதை அடைய, தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.


அடுத்த இருபதாண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாற, உலகளாவிய முன்னேற்றங்களின் அடிப்படையில் தொழில்துறை கொள்கையை மறுவடிவமைப்பு செய்ய பொருளாதார ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல கிழக்காசிய நாடுகள் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கான உத்தியாக ஏற்றுக்கொண்டு விரைவான முன்னேற்றத்தை அடைந்தன. சீனாவும் அவ்வாறே செய்தது, உலக ஏற்றுமதியில் தனது பங்கை 1970-ல் 0.6% ஆக இருந்து 2022-ல் 11.9% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பங்கு 1970-ல் 0.6%ஆக இருந்து 2022-ல் 2.5%ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. தற்போது, உலகளாவிய வர்த்தகச் சூழல் (world trade environment) மாறியுள்ளது. இதன் அடிப்படையில், சிலநாடுகள் பாதுகாப்பு சார்ந்து நடைவடிக்கைகளை மாற்றியுள்ளன. பல்வேறு காரணங்களால், வளர்ந்த நாடுகளில் வளர்ச்சிக் குறையும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த பழைய உத்தி திறக்கப்படவில்லை. ஆனால், ஏற்றுமதி செயல்திறனுக்கான சோதனையாக முக்கியமானது. பொதுவாக, ஏற்றுமதி சேவைகள் செய்வதில் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளோம். மற்ற நாடுகள் நமது தயாரிப்புகளை வாங்குவது நமது பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவுவதால், நாம் அதை வணிகப் பொருட்களுடன் காட்ட வேண்டும்.


பொருளாதார உத்தி பல பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும்: ஏற்றுமதி, சேவைகள், உற்பத்தி மற்றும் விவசாயத்தில் கவனம் செலுத்த முன்வருகிறது. "சூரிய உதயம்" (sunrise) தொழில்களை அடையாளம் காண்பது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உணவுப் பதப்படுத்தும் தொழில் உழைப்பு மிகுந்தது, விவசாயத்தை ஆதரிக்கிறது மற்றும் ஏற்றுமதி தேவையைக் கொண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு முக்கியமானப் பிரச்சினையை எழுப்பியது. போரினால் ஏற்பட்ட விநியோக இடையூறுகள் காரணமாக, பலநாடுகள் "முக்கியமான இறக்குமதிகளுக்கு" (critical imports) தன்னிறைவு பற்றி சிந்திக்கத் தொடங்கின. இந்தியாவும் சிப்ஸ் தயாரிப்பது பற்றி யோசித்து வந்தது. ஆனால் "இறக்குமதிக்கான மாற்றீடு" (import substitution) அனைத்து நிகழ்வுகளிலும், நாம் செலவு பற்றி மறந்துவிடக் கூடாது. நமக்கு திறமையான இறக்குமதி மாற்றீடு தேவை. தற்சார்பு (Atma Nirbhar) திறமையற்ற இறக்குமதி மாற்றாக மாறக்கூடாது.


போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். தொழில்நுட்ப மாற்றங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு அலகு வேலைக்கும் (each unit of work) குறைவான வேலைகள் தேவைப்படுகின்றன. உற்பத்தியைப் பொறுத்து வேலைவாய்ப்பின் நெகிழ்ச்சி குறைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (machine learning) ஆகியவற்றின் எழுச்சி வேலை இழப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. நாம் இயந்திரத் தசைகளிலிருந்து - இயந்திர மனங்களுக்கு (mechanical muscles” to “mechanical minds) நகர்ந்துவிட்டோம். இது மனித உழைப்புக்கான தேவையைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. வேலையின்மையின் வளர்ச்சி ஒரு கவலையாக உள்ளது. ஆனால், வளர்ச்சி இல்லாமல் வேலை உருவாக்கமும் மோசமானது. புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கி திறன்களை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில், வேலைவாய்ப்புக்கான வளர்ச்சியை உறுதி செய்யும் துறைகளையும் மேம்படுத்த வேண்டும்.


நியாயம் பற்றிய கருத்துக்கள் இப்போது குறிப்பிடத்தக்கவை. வளர்ச்சியின் பலன்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வறுமை விகிதம் குறைந்து வருவதை சான்றுகள் காட்டுகின்றன. உலக வறுமைக் கடிகாரத்தின் படி (World Poverty Clock), இந்தியாவில் தீவிர வறுமை 2.15 டாலர் என வறுமைக் குறியீட்டின் அளவீடு  3%-க்கும் குறைவாக இப்போது 2%ஆக உள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்கான சமீபத்திய நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு (consumption expenditure survey), சமத்துவமின்மையை அளவிடும் ஜினி குணகம் (Gini coefficient) ஓரளவு குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. வறுமையை விரைவாகக் குறைப்பது வளரும் பொருளாதாரங்களில் முதல் அக்கறையாக இருக்க வேண்டும். மானிய விலையில் உணவு தானியங்கள் போன்ற சமூகப் பாதுகாப்பு வலைகள் முக்கியம். வளர்ச்சியும் சமத்துவமும் சமமாக மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சி இல்லாமல், சமத்துவம் என்பது ஒரு தொலைதூரக் கனவாக இருக்கும். எனவே, சமத்துவம் இல்லாமல், வளர்ச்சியைத் தக்கவைக்க முடியாது. சமத்துவம் என்பது சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  

  

ஜினி குணகம் (Gini Coefficient) : ஜினி குணகம் அல்லது ஜினி குறியீடு அல்லது ஜினி விகிதம் என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருவாய் சமனின்மையை அளக்க உதவும் ஒரு குறியீடு. மக்களுக்கிடையில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அளக்க இக்குறியீடே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டின் மதிப்பு சுழிக்கும் ஒன்றுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.


எனவே, சாராம்சத்தில், இந்தியாவின் வளர்ச்சிக்கான உத்தி பல பரிமாணங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். முதலீட்டுக்கான விகிதங்களை உயர்த்துவதன் மூலமும், உற்பத்தி, சேவைகள் மற்றும் ஏற்றுமதியை வலியுறுத்துவதன் மூலமும், புதியத் தொழில்நுட்பங்களை உள்வாங்குவதன் மூலமும், வேலைவாய்ப்புக்குகந்த துறைகளை ஊக்குவிப்பதன் மூலமும் வளர்ச்சியைத் தூண்ட முடியும். வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது கடினமான சவாலாக இருக்கும்.



Share: