இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்டத்திற்கு முன்னதாக, வாக்குச் சாவடிகள் எவ்வாறு செயல்படுகின்றன? திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது? என்பதற்கான தீர்வறிக்கை இங்கே.
வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic voting machines (EVM)) வழங்கப்பட்டுள்ளன. நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத்தில் ஜூன் 1-ம் தேதி பஞ்சாப் வாக்குப்பதிவுக்கு முன்னர், இந்த ஊழியர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இரவில் தங்குவார்கள். பஞ்சாபில் மொத்தம் 25,451 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வாக்குச்சாவடி நிலை அதிகாரி (booth-level officer (BLO)) பொறுப்பில் உள்ளது.
வாக்குச் சாவடிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
கடைசி நிமிட பணியாளர் நியமனம்
1,100 வாக்குகளுக்கு மேல் பதிவாகாத ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) உட்பட 4 முதல் 6 ஊழியர்கள் உள்ளனர். ஒரு வாக்குச்சாவடியில் ஒரே கட்டிடத்தில் பல வாக்குச்சாவடிகள் இருக்கலாம்.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (booth-level officer (BLO)) சில வாரங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். ஆனால், மீதமுள்ள ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தாமதமாக ஒரு சீரற்றமயமாக்கல் நுட்பத்தின் (randomisation technique) மூலம் தங்கள் கடமைக்கு நியமிக்கப்பட்டனர். மாலை நேரத்தில் வாக்குப்பதிவுக்கு முன்பு, வாக்குச்சாவடியில் கட்சியின் உறுப்பினர்கள் ஒரு பகுதியாக யார் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம் என்று ஃபசில்காவின் முஹர் ஜாம்ஷர் கிராமத்தில் உள்ள தேர்தல் அதிகாரி கௌரவ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இந்த சிறிய எல்லையோரக் கிராமத்தில் 618 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குச்சாவடியில் கட்சி அமைப்பு
ஒரு நிலையான வாக்குச்சாவடியில் கட்சியின் சார்பாக 4 பேர் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு வாக்குச்சாவடியை அடைந்து இரவைக் கழிக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) இரண்டையும் பாதுகாப்புப் படையினர் பாதுகாக்கின்றனர். பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பணியாளர்களுக்கு படுக்கைவசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு, கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டிலோ அல்லது அருகிலோ தூங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பெண்களும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று அதிகாலை 5 மணிக்கு தங்கள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் (BLO) பங்கு
வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) வாக்காளர் சீட்டுகளை விநியோகிக்கின்றனர். வாக்குச்சாவடியில் கட்சி உறுப்பினர்களுக்குத் தங்குமிடம், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது. BLOக்கள் வாக்குச் சாவடியில் வரிசை பற்றிய தகவலை வாக்குச் சாவடி நிர்வாக அமைப்பில் (PAMS) வழங்க வேண்டும் - இது வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியில் கூட்டத்தை சரிபார்த்து அதற்கேற்ப வர வாய்ப்பளிக்கிறது. அவர்கள் வாக்குச்சாவடி ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து ஒருமணிநேர அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு (District Election Officer (DEO)) வாக்குப்பதிவு சதவீதத்தை வழங்குகிறார்கள்.
பொதுவாக, பஞ்சாபின் வாக்குச்சாவடிகளில் பள்ளி வளாகத்திற்குள் உணவானது பள்ளியின் மதிய உணவு ஊழியர்களால் சமைக்கப்படும். பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 20-25 நபர்கள் உள்ளனர். அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நாளன்று
வாக்குப்பதிவு நாளன்று அதிகாலை 5 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரியாக செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்க மாதிரி வாக்குப்பதிவு (mock polls) நடத்தப்படுகிறது. வழக்கமாக, மாதிரி வாக்குப்பதிவில் (mock polling) ஒவ்வொரு வேட்பாளருக்கும் 5 வாக்குகள் பதிவாகி முடிவுகள் சரிபார்க்கப்படும். "மாதிரி வாக்கெடுப்புகளை நடத்தி முடிவுகளை சரிபார்க்க சுமார் 20-30 நிமிடங்கள் ஆகும். அதன்பிறகு, இயந்திரங்கள் மீட்டமைக்கப்படுகின்றன. காலை 6.30 மணிக்குள் வாக்காளர்களுக்காக வாக்குச் சாவடி தயாராக இருக்க வேண்டும்" என்று அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் உள்ள கோனேவால் கிராமத்தின் வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) குர்தீப் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் நியமிக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்படுகின்றன. ஒரு தேர்தலை நடத்துவது சிக்கலானது என்றாலும், எல்லாம் சீராக நடப்பதை உறுதிசெய்ய வாக்குப்பதிவு ஊழியர்கள் பல ஒத்திகைகளுக்கு உட்படுகிறார்கள்.