இன்னும் ஒரு வாய்ப்பு

 இஸ்ரேல் போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்க வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்படுவதை  எதிர்கொள்ள வேண்டும்.


காஸாவுக்கான அதிபர் ஜோ பைடனின் மூன்றுகட்டப் போர் நிறுத்தத் திட்டம் திங்களன்று குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council (UNSC)) தீர்மானம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. இந்தத் தீர்மானத்தின் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஏற்கனவே ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா கூறுகிறது. இருப்பினும், ஹமாஸின் கடுமையான நிலைப்பாடு போர்நிறுத்தத்திற்கு முக்கியத் தடையாக உள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து காசா போர்நிறுத்தத்திற்கான இரண்டாவது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் (UNSC) அழைப்பு இதுவாகும். மார்ச் மாதம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அழைப்பு இஸ்ரேலால் புறக்கணிக்கப்பட்டது. இந்த முறை, வாஷிங்டன் இந்த முன்மொழிவின் பின்னணியில் உள்ள சக்தியாக உள்ளது. ஜோ பைடன் திட்டத்தின்படி, முதல் கட்டத்தில் ஆறு வார கால போர்நிறுத்தம் இருக்கும். இஸ்ரேலிய இராணுவம் மக்கள் அடர்த்தியான பகுதிகளில் இருந்து பின்வாங்கும், காசாவிற்குள் இன்னும் கூடுதலான உதவி டிரக்குகளை அனுமதிக்கும், மற்றும் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 33 பணயக்கைதிகளுக்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும். இரண்டாவது கட்டத்தில், ஹமாஸ் மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும், இஸ்ரேல் காசா பகுதியிலிருந்து வெளியேறும். மூன்றாவது கட்டம் சுற்றுப்புறத்தை புணரமைப்பதை உள்ளடக்கியது.


காசா மீதான இஸ்ரேலின் போரை ஜோ பைடன் நிர்வாகம் ஆதரிப்பதுடன், இந்த திட்டத்திற்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இரு தரப்பிலும் கடுமையான தடைகள் உள்ளன. இந்த முன்மொழிவுக்கு இஸ்ரேலின் ஆதரவு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் அதை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. கடந்த வாரம் எதிர்க்கட்சி அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ் ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து விலகியபோது பிரதமர் நெதன்யாகு அரசியல் ரீதியாக பலவீனமடைந்தார். இது நெதன்யாகுவை அவரது தீவிர வலதுசாரி கூட்டணி அரசுகளை அதிகம் சார்ந்திருக்க வைத்தது. ஆளும் கூட்டணியில் உள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகள், அவர் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக அச்சுறுத்தியுள்ளன. நெதன்யாகு தனது அரசியல் இருப்புக்கு மேலாக நாட்டின் நலன்களை வைக்கமுடியுமா என்பதுதான் கேள்வி. எகிப்துடனான காசாவின் ரஃபா எல்லையில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கோருகிறது. பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க முழு சுதந்திரம் மற்றும் இஸ்ரேலுடன் இறுதி உடன்பாட்டிற்கு சீனா, ரஷ்யா மற்றும் துருக்கியிடமிருந்து உத்தரவாதம் ஆகியவற்றையும் அவர்கள் கோருகின்றனர். இருதரப்பினரும் தங்கள் நிலைப்பாடுகளை கடுமையாக்குவதால், இந்தப் போர்நிறுத்தம் மழுப்பலாகவே உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து, குறைந்தது 37,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களை இஸ்ரேல் புறக்கணித்துள்ளது. அதே நேரத்தில் ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாட்டை அடைய சலுகைகளை வழங்குவதில் அதிக அக்கறை காட்டவில்லை. பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது. போர் முடிந்து இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் விரும்புகிறது. இந்த நோக்கங்களை அடைவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு காண்பதுதான் என்பதை அவர்கள் உணர வேண்டும். போரை நீடித்தது காசாவின் பெரும்பகுதியை அழித்து, இஸ்ரேலை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகார அரசாக மாற்றியுள்ளது.


Share: