இந்த ஆண்டு தேர்வு குறித்த சர்ச்சை, அமைப்பு ரீதியான இடைவெளிகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆண்டு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-Cum-Entrance Test (NEET)) குறித்த சர்ச்சை நீண்டகால அமைப்பு ரீதியான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency (NTA)) 1,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் சலுகை மதிப்பெண்களை (grace marks) ரத்து செய்து அவர்களுக்கு மீண்டும் தேர்வெழுதுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இந்த மாணவர்கள் ஆரம்பத்தில் தவறான வினாத்தாளைப் பெற்றனர். இதன் விளைவாக, அவர்கள் சரியானத் தாளினை பெறும்போது இழந்த நேரத்தை ஈடுசெய்ய கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த "தொழில்நுட்பக் கோளாறை" ஒப்புக்கொள்ள பல மனுக்களைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தேசியத் தேர்வு முகமை (NTA) அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. இதில், 4,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் ஆறு தேர்வு மையங்களில் மட்டுமே தவறு நடந்ததாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இருந்தபோதிலும், இத்தகைய பிழைகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியமானதாக இருக்கும். உயர்கல்விக்கான தேசிய அளவிலான தேர்வுகளை நிர்வகிப்பதற்கு 2017-ல் தேசியத் தேர்வு முகமை (NTA) நிறுவப்பட்டது. இது இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology (IIT)) கூட்டு நுழைவுத் தேர்வில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வை கையாண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்வின் நேர்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பல மாணவர்கள் சரியான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், இது குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இன்னும் சிலர் சற்று குறைவாக மதிப்பெண் பெற்றனர். கடந்த ஆண்டு இரண்டு அதிக மதிப்பெண் பெற்றவர்கள், 2022ல் ஒருவர், 2021ல் மூன்று பேர் ஆவார். இந்த எதிர்பாராத மாறுபட்ட எண்ணிக்கை நியாயமற்ற உரிமைகோரல்களுக்கு வழிவகுத்தன. தேசியத் தேர்வு முகமையின் (NTA) விளக்கங்கள் நம்பும்படியாக இல்லை. இந்த முகமையானது, ஆரம்பத்தில் "ஒப்பீட்டளவில் எளிதான தாளிற்கு" (relatively easy paper) அதிக மதிப்பெண்களை வழங்கியது. பின்னர், அதற்குப் பதிலாக சலுகை மதிப்பெண்கள் (grace marks) வழங்குவதாக மாறியது. இருப்பினும், இந்த நாளிதழின் அறிக்கையின்படி, அதிக மதிப்பெண் பெற்ற 67 பேரில் ஆறு பேர் மட்டுமே இந்த கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, 1,10,000 இடங்களுக்கும் குறைவான இடங்களுக்கு, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டனர். இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொழிலைத் தேடும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக இது கடுமையான போட்டிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, NEET இப்போது விண்ணப்பதாரர்களின் மருத்துவத் திறனை மதிப்பிடுவதைவிட அவர்களை நீக்குவதில் அதிகக் கவனம் செலுத்துகிறது. தேர்வு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. இதில், 0.25% போட்டியாளர்கள் மட்டுமே சிறந்த கல்லூரிகளில் சேருகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், கல்வியின் தன்மையை சீர்திருத்துவதற்கான விவாதங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்வியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய இதுபோன்ற முயற்சிகள் தேவை. உதாரணமாக, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கைக்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) சமீபத்திய ஏற்பாட்டை அரசாங்கம் பரிசீலிக்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்துவது மருத்துவக் கல்வி அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். எதிர்காலத்தில், அதிக வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை எளிதாக அணுகுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். இது தேர்வுமுறையில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.