பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிரான பின்னடைவு இப்போது நீதிமன்றங்கள் மற்றும் பணியிடங்களில்கூட பரவலாக உள்ளது. கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது.
அரசியல், சட்ட மற்றும் சமூக ஒழுங்கு, பாலியல் வன்முறையின் உச்சக்கட்ட எல்லையை சகித்துக்கொள்வது, நமது அரசியலில் பாலியல் தண்டனையின்மையின் அளவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.
ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது, அதிர்ச்சி, கோபம் மற்றும் துக்கத்தின் வெளிப்பாடுகளுக்கு வழிவகுத்தது. இது மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் நீதி கோரி சக்திவாய்ந்த போராட்டங்களுக்கு வழிவகுத்தது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) பாலின நீதியின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் தண்டனைச் சட்டத் தொகுப்புகள் பெருந்திரளான பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைத்தது. இருப்பினும், உத்தரகண்ட், பீகார் அல்லது மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. மறு எண்ணிடுதல் தடுப்பு கலாச்சாரத்தை உருவாக்காது. மரண தண்டனையும் இல்லை.
பெண்ணிய பரிந்துரைகளை நிராகரித்த பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாலியல் வன்புணர்வு சட்டத்தில் மரண தண்டனையை அறிமுகப்படுத்தியது. இது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் சுயாட்சியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாலியல் ஒழுங்குமுறையை விரிவுபடுத்தியது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மணிப்பூரில் வெகுஜன அளவிலான மற்றும் அமைப்பு ரீதியான பாலியல் வன்முறைகளின் போது வரைவு செய்யப்பட்டது. டெல்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அமைக்கப்பட்ட வர்மா குழு (Verma Committee), பாலியல் வன்முறையைத் தடுக்கும் கடமையை மாநிலங்கள் புறக்கணிக்கும் போது, வழக்குத் தொடருமாறு பரிந்துரைத்தது. பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பெண்கள் குழுக்களின் முக்கியமான பரிந்துரைகளை பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பலமுறை புறக்கணித்தது.
விஷாகா தீர்ப்பிற்கு மாறாக, பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான பெண்களின் முயற்சிகள், பெரும்பாலும் துன்புறுத்தலைத் தடுக்கவோ அல்லது நிவர்த்தி செய்யவோ விருப்பமில்லாத முதலாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிரான பின்னடைவு இப்போது நீதிமன்றங்கள் மற்றும் பணியிடங்களில்கூட பரவலாக உள்ளது. கருத்து வேறுபாடும் விமர்சனமும் மௌனமாக்கப்பட்டாலோ, தண்டிக்கப் பட்டாலோ அல்லது குற்றமாக்கப்பட்டாலோ பாலியல் துன்புறுத்தல் குற்றங்களில் மாற்றம் சாத்தியமற்றது. ஆணாதிக்க மற்றும் சாதி அடிப்படையிலான உத்தரவை சட்டம் எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதைக் காட்டும் ஹத்ராஸ் வழக்கில், எதிர்ப்புகள் குற்றமாக்கப்பட்டன.
பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை நிவர்த்தி செய்த பெண்கள் குழுக்களின் நிதியுதவி பெருமளவில் மறுக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியது.
நிதிக்குறைப்பு என்பது நிறுவன கையகப்படுத்துதலுடன் கைகோர்த்துச் செல்கிறது, இதில் சேர்க்கை, பணியமர்த்தல், பணிமூப்பு, மற்றும் உள்ளடக்கிய ஆளுகை ஆகியவற்றில் கொள்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அவை உறவுமுறை மற்றும் தன்னிச்சையான முடிவுகளுக்கு ஆதரவாக உள்ளன. நிறுவனங்கள் தண்டனையின்றி செயல்படும்போது, அது பெண்களுக்கு குறிப்பாக ஆபத்தானதாக மாறும்.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் தடயவியல் துறைக்கு அரசு அதிக நிதியுதவி அளிக்கிறது. ஆனால், தடயவியல் ஆய்வுக்கு அவர்களின் உடமைகளை எடுத்துச் செல்லும்போது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், சானிட்டரி நாப்கின்கள் அல்லது செருப்புகள் போன்ற அடிப்படைப் பொருட்களை வழங்குவதில்லை. இவற்றை வழங்குவது வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
நிதி தொழில்நுட்பத்தில் அரசு அதிக முதலீடு செய்துள்ளது. நிர்பயா நிதியை பொது இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ பயன்படுத்தியது. பெண்களுக்கு எந்தவொரு தரவு பாதுகாப்பும் இல்லாமல் சி.சி.டி.வி அல்லது பயோமெட்ரிக்ஸை நிறுவுவது, பாதுகாப்பு தணிக்கை இல்லாமல் ஆன்லைன் நீதிமன்றங்களை (அல்லது நேரடி ஸ்ட்ரீமிங்) வடிவமைப்பது அல்லது பாதுகாப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் தடுப்புக்கு பதிலாக, பாதிப்புகள் மற்றும் தீங்குகளை உருவாக்கும் அதிகாரத்தின் தடயவியல் நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கும் வீடுகள், பாதுகாப்பான வீடுகளை உருவாக்க அல்லது உயிர் பிழைத்தவர்களுக்கு நிதி உதவி வழங்க அரசிடம் நிதி இல்லை. இழப்பீடு முறை மிகவும் பலவீனமாக உள்ளது. அது பாதிக்கப்பட்ட நபரின் தீங்குக்கான உரிமையாக பார்க்கக் கூடாது. மாறாக பெண்கள் பணம் பெறுவதற்காக பொய் சொல்கிறார்கள் என்று அடிக்கடி வாதிடப்படுகிறது.
கொல்கத்தாவில் பாலியல் வன்முறை மற்றும் கொலைக்குப் பிறகு, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாலின பாதுகாப்பு விதிமுறைகளை நிறுவுவதற்கு மருத்துவர்களின் தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் உருவாக்கியது. எவ்வாறாயினும், பாதுகாப்பை உறுதி செய்வதில் நிதிப் பற்றாக்குறை மற்றும் தண்டனையின்மை போன்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். பாலியல் மற்றும் பாலின பாதுகாப்பின்மை நிலைமைகள் ஒன்றாக வேலை செய்யும் "தண்டனை விதிக்கப்படாத நிறுவனங்களால்" உருவாக்கப்படுகின்றன.
பாதுகாப்பு பிரச்சனைகளை உள்ளடக்கும் வகையில் கொடுமைச் சட்டம் (tort law) உருவாக்க முடியுமா? பெண்களுக்கு பாதுகாப்பை வழங்க நிறுவனங்கள் தவறும் போது ஏன் அரசியலமைப்பு வன்கொடுமை சட்டம் பயன்படுத்தப்படவில்லை? பணியிடங்கள், வேலை, ஓய்வு அல்லது அடிப்படைத் தேவைகளுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்கவில்லை என்றால் பணியிடங்கள் பொறுப்பா? பணியிடத்தில் பாலியல்வன்முறை மற்றும் கொலைக்கு வன்கொடுமைச் சட்டம் கொண்டு வருவதில், தடுக்கும் மாற்றுமுறை கட்டமைக்கப்படுமா?
பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களின் உரிமைகள் பற்றிய அரசியலமைப்பு கோட்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. தண்டனையின்மையை நீக்கும் போதுதான் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். வழக்கமான வெறுப்பு பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் முஸ்லிம் பெண்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் பாதுகாப்பாக உணர நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் பெண்கள் தங்கள் மனதிலும், உடலிலும், நடத்தையிலும் தங்கள் நிலையயை உண்மையாகப் புரிந்துகொள்வதற்கும் உணருவதற்கும் நீதிபதிகளுக்கு கடினமான மற்றும் தீவிரமான போராட்டங்களை அடிக்கடி செய்ய வேண்டியிருக்கிறது.
ஆவணங்கள், பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும்பாலும் மாநில மற்றும் அரசு சாரா நபர்களால் கசிந்துள்ளன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களின் வீடியோக்கள் அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படுகின்றன. சில நேரங்களில், இந்த வீடியோக்கள் மக்களிடையே சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன அல்லது குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களை அம்பலப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் பெண்களின் மதிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
பிரேதப் பரிசோதனை அறிக்கையானது விந்தணுவின் அளவு போன்ற விவரங்களைப் பற்றிய பொது விவாதங்களைத் தூண்டும் போது, அது தடயவியல் முறைகள் பற்றிய உண்மையான விவாதம் இல்லாமல், அது ஆபாசத்தின் ஒரு வடிவமாக மாறுகிறது. ஆண் ஆதிக்கம் செலுத்தும் அரசின் செல்வாக்கு டிஜிட்டல் நெட்வொர்க்குகள் மூலம் பரவலாகப் பரவி, கருத்தியல் மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து செல்கிறது.
சட்டத்தை அதன் சூழலில் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மைச் சட்டங்கள், மாநிலங்கள் மற்றும் சமூகங்கள் போன்றவற்றின் மூலம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றங்கள் தங்கள் சொந்த முயற்சியில் (suo moto) செயல்படும்போது, பாலியல் வன்முறை குறித்த பெண்ணிய முன்னோக்குகள் பெரும்பாலும் கருதப்படுவதில்லை. நீதிமன்றங்கள் சில சமயங்களில் பாலியல் வன்முறையை "பாலியல் வக்கிரம்" என்று குறிப்பிடுகின்றன அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை "விலங்கு போன்ற" சொற்களால் விவரிக்கின்றன. இது கற்பழிப்பு எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும் மற்றும் விவாதிக்கப்பட வேண்டும் என்ற பெண்ணியக் கருத்துக்களைப் புறக்கணிக்கிறது.
பெண்ணிய வழக்கறிஞர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், ஆணாதிக்க மற்றும் முக்கிய சட்ட மொழிகள் இன்னும் பாலியல் வன்முறை பற்றிய விவாதத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது ஒரு சிக்கலான யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது: பாலியல் வன்முறை என்பது பெரும்பான்மை சமூக, அரசியல் மற்றும் சட்ட அமைப்புகளை பராமரிக்க பயன்படுத்தப்படும் ஆணாதிக்க வன்முறையின் ஒரு கருவியாகவே உள்ளது.
பிரதிக்ஷா பாக்ஸி, பேராசிரியர், நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.