வங்கதேசம், மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் விஷயத்தில், இந்தியா ஏன் ஆச்சரியமடைந்தது? -விவேக் கட்ஜு

 இப்போது நடைமுறையில் உள்ள பெரிய பாதுகாப்பு கட்டமைப்புகள் இருந்தபோதிலும் இது நடந்தது. ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் (turf) காரணமா அல்லது தவறான தீர்ப்புகள் இருந்தனவா?


கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் மூன்று அண்டை நாடுகளில் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நலன்கள் கடுமையான பின்னடைவுகளை சந்தித்துள்ளன. ஆகஸ்ட் 5 அன்று, இந்தியாவின் வங்கதேச கொள்கையின் முக்கிய ஆதாரமான பிரதமர்  ஷேக் ஹசினா, பெரிய  வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் குறுகிய அறிவிப்பில் இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி வந்தார். நவம்பர் 17, 2023-ஆம் ஆண்டில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முகமது முய்சு மாலத்தீவின் அதிபராக பதவியேற்றார். இலங்கையில் இந்தியாவின் பங்கைக் குறைக்கவும், சீனாவின் இருப்பை அதிகரிக்கவும் அவர் உறுதி பூண்டுள்ளார். அவருக்கு முன் பதவியில் இருந்த இப்ராஹிம் சோலிஹ் இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். மேலும், ஆகஸ்ட் 15, 2021-ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்குப் பொறுப்பானவர்களின் தவறான முடிவுகளின் விளைவாக இந்த மோசமான பின்னடைவுகள் ஏற்பட்டதா அல்லது இந்த முக்கியமான பகுதிகளில் கொள்கை உருவாக்கும் கட்டமைப்புகளில் காரணங்கள் உள்ளனவா?


அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பிரச்சினைகளில் சுயபரிசோதனை செய்வது அவசியம். இதில் அளவுக்கு  அதிகமாக நாடு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. உண்மையில், வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிக்கு விளக்கமளிக்க ஆகஸ்ட் 6, அன்று ஒன்றிய அரசு  ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்கதேச விவகாரங்களில் அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இந்த அரசாங்க-எதிர்க்கட்சி உரையாடல் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் தொடர வேண்டும். மேலும், கொள்கை உருவாக்கும் கட்டமைப்புகளின் பரிசீலனைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 


 இறுதியில், அரசாங்கம், அதன் உயர்மட்ட தலைமையின் தீர்ப்பு மற்றும் இந்தியாவின் வெளிப்புற நலன்களைக் கையாளும் பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய தொழில்முறை ஆலோசனையை நம்பியிருக்க வேண்டும். அவர்கள் இணக்கமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் குறித்து மேற்கோள் காட்டப்பட்ட வழக்குகளில் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒரு சுருக்கமான பரிசீலனை பொருத்தமற்றதாக இருக்காது.


வெளியுறவு அமைச்சகம் (The Ministry of External Affairs (MEA)) நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது. இது இந்திய வெளியுறவு சேவையால் (Indian Foreign Service (IFS)) நிர்வகிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் வெளிநாட்டு நலன்களைக் கவனிப்பதாகும். அண்டை நாடுகளில், இந்தியாவின் தூதரகங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில்  கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் பதவி வகிக்கும் நாடுகளின் அரசியல் தலைவர்களின் சிந்தனைகள், விருப்பங்கள் மற்றும் நிர்பந்தங்கள் மட்டுமல்ல, நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளைக் கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் தலைமைக்கு உரிய ஆலோசனை வழங்க வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட நிர்வாகமும் இதே போன்ற திறன்களைக் கொண்டுள்ளது.


1968-ஆம் ஆண்டில், இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் நிலங்களை ஆராய்ந்து வெளிக்கொணர்வதற்கான திறன்களை வளர்ப்பதை உறுதி செய்யும் நோக்குடன் இந்தியா தனது வெளிநாட்டு புலனாய்வு சேவையை (intelligence service) உருவாக்கியது. இப்பிரிவு, அண்டை நாடுகளுடன் ஒரு நல்ல நட்புறவை கொள்ள உதவியது. வெளிநாட்டிற்கான தூதர்கள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு, வெளியுறவு அமைச்சகம், பிற சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் தேசிய நலனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கான முறைகளை கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் பொறுப்புகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெளிப்புற சேவைக்கான திட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.


2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரான புகழ்பெற்ற வெளிநாட்டு தூதரான பி.எஸ்.ராகவன், 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்தார். இந்தியா ஒரு அணு ஆயுத நாடாக மாறியதாலும், அதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில், இயற்கையாகவே, புதிய மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டியிருந்தது. இவை மாறிவரும் உலகளாவிய சக்தி சமன்பாடுகள், சைபர் மற்றும் விண்வெளித் துறைகளில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவந்தவை. அவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தின. கூடுதலாக,  சீனாவின் எழுச்சி மற்றும் இந்தியா மீதான அதன் தொடர்ச்சியான விரோதப் போக்கு ஆகியவற்றால் அண்டை நாடுகளின் கவலைகள் அதிகரித்துள்ளன.


புதிய கட்டமைப்புகளின் உருவாக்கம், 1999-ஆம் ஆண்டில் பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழு (National Security Council), ஒரு இராஜதந்திர கொள்கையை உருவாக்கியது. மிக முக்கியமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor (NSA)) பதவியை உருவாக்கியது. இந்த புதிய கட்டமைப்புகளுக்கு சேவை செய்வதற்காக ஒரு தேசிய பாதுகாப்பு ஆணைய செயலகம் (National Security Council Secretariat (NSCS)) நிறுவப்பட்டது.


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) பிரதமருக்கு வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி பிரச்சினைகள் (உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு தவிர) போன்ற காலகட்டத்தில் பிரமருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும்,  நெருக்கடி காலங்களின்போது ஒரு வெளிநாட்டு அரசை அணுகுவதற்கு  விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள வழி, தேசிய பாதுகாப்பு முகமை என்று ராகவன் குறிப்பிடுகிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA)-ன் முக்கியத்துவத்துடன், தேசிய பாதுகாப்பு ஆணைய செயலகம் (National Security Council Secretariat (NSCS)) குறிப்பிட்ட அளவில் வளர்ந்துள்ளது. 2018-ஆம் ஆண்டிற்க்குப் பிறகு, இது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளின் பல்வேறு பகுதிகளைக் கையாளும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) தரவரிசையில் நான்கு அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து, கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அந்தஸ்துள்ள அதிகாரி ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, தற்போது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு கூடுதலாக விரிவான பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணைய செயலகம் (National Security Council Secretariat (NSCS))  இன் இறுதி நோக்கம் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பதாகும். ஆனால், ராகவன் எழுதுவது போல், சில நேரங்களில் ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் (turf) எழுகின்றன.


ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்விகளைக் கருத்தில் கொள்வதில் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கை சரியாக இல்லை என்று ஒரு அறிகுறியைக் கொண்டிருந்தாலும், அதன் இறுதி மாற்றங்களை கண்டு இந்திய அரசு ஏன் ஆச்சரியப்பட வேண்டும் என்பதுதான். இந்திய நலன்களின் அமைப்பில், இப்போது பெரிய கட்டமைப்புகள் உள்ள போதிலும் இந்த ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. ஆக்கிரமிப்பு சிக்கல்கள் (turf) அவை எவ்வளவு உயரத்தை அடைகின்றன? அல்லது தவறான தீர்ப்புகள் தொடர்ச்சியாக இருந்தன, அப்படியானால், யாரால்?



Original article:

Share: