பிப்ரவரி 2023-ல், ஒன்றிய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் உரையில் தூய தாவரத் திட்டம் (Clean Plant Programme) நாடு முழுவதும் பழ பயிர்களின் தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் தோட்டக்கலை பயிர்களின் மகசூல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட தூய தாவரத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தூய தாவரத் திட்டத்திற்காக வேளாண் அமைச்சகம் ரூ.1,765 கோடி நிதி கோரியுள்ளது. தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான மிஷன் (Mission for Integrated Development of Horticulture (MIDH)) வரவு-செலவுத் திட்டத்தில் பாதிப் பணம் கிடைக்கும். மற்ற பாதி ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank (ADB)) வளர்ச்சி நிதியில் இருந்து கடனாக இருக்கும்.
பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கும் வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் நுண்ணுயிரி இல்லாத (virus-free), உயர்தர நடவுப் பொருட்களைப் (தாவரப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் தாவரங்கள்) பெற விவசாயிகளுக்கு உதவுவதற்கு இந்தத்திட்டம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. அவை:
ஒன்பது தூய்மையான தாவர மையங்களை (Clean Plant Centers (CPCs)) உருவாக்குதல், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை வழங்குதல், நாற்றங்கால் தோட்டங்களுக்கு (nurseries) அனுப்பப்படும் தாய் செடிகளை உருவாக்குதல், வணிகப் பயன்பாட்டிற்காக உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து நடவுப் பொருட்களையும் தனிமைப்படுத்துவார்கள்.
உள்கட்டமைப்பு மேம்பாடு: தூய்மையான தாவர மையங்களில் தாய் செடிகள் நாற்றங்கால் தோட்டங்களில் வளர்க்கப்படும். வளர்க்கப்பட்ட செடிகள் பின்னர் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். நடவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் முழுமையான பொறுப்புணர்வையும் கண்டறியும் தன்மையையும் உறுதிசெய்ய ஒழுங்குமுறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையை உருவாக்குதல்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2013-14 முதல் 2023-24 வரை, தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு 24 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 28.63 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், உற்பத்தியும் அதிகரித்தது. மேலும், உற்பத்தி 277.4 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 352 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
புதிய பழங்களின் முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. 2023-24 நிதியாண்டில், இந்தியா $1.15 பில்லியன் மதிப்புள்ள புதிய பழங்களை ஏற்றுமதி செய்தது. அதே காலகட்டத்தில், இந்தியா $2.73 பில்லியன் மதிப்புள்ள பழங்களை இறக்குமதி செய்தது. நாட்டில் பழ நுகர்வு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு ஆப்பிள்கள், வெண்ணெய்ப் பழங்கள் மற்றும் புளுபெர்ரி போன்ற பழங்கள் அதிக தேவை உள்ளது.
தரவுகளின் படி, 2018-20-ஆண்டிற்கு இடையில், பழச் செடிகளின் நடவுப் பொருட்களின் இறக்குமதிக்கான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை (Export-Import (EXIM)) குழு 2018-ல் 21.44 லட்சம் ஆப்பிள் செடிகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. இது 2020-ல் 49.57 லட்சமாக அதிகரித்துள்ளது. 2020-ல் ஆலைகள் 26,500-ஆக அதிகரித்தது. அதேபோல், புளுபெர்ரி செடிகள் இறக்குமதிக்கான அனுமதி 2018-ல் 1.55 லட்சத்தில் இருந்து 2020-ல் 4.35-லட்சமாக அதிகரித்துள்ளது.
தற்போது, தாவரங்களை இறக்குமதி செய்வது மிகவும் சிக்கலானது, இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்கள் இரண்டு வருடங்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட வேண்டும். தூய்மையான தாவர மையங்கள் (Clean Plant Centers (CPCs)) தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஆறு மாதங்களாக குறைக்கும். இது இந்தியாவில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நோயற்ற மற்றும் உண்மையான நடவுப் பொருட்களை விவசாயிகள் பெற எளிதாக்கும்.
தூய தாவரத் திட்டம் (Clean Plant Programme) என்ற கருத்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள திட்டங்களைப் போன்றது.