70,125 கோடி செலவில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) திட்டத்தின் புதிய கட்டடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மின்சார வாகனங்களை (கார்களைத் தவிர்த்து) அதிகரிப்பது, கிராமப்புற இணைப்பை மேம்படுத்துவது மற்றும் நீர்மின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பல நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 கோடி மூத்த குடிமக்களுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கான மொத்த செலவு ₹1.02 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
சுகாதார காப்பீட்டின் விரிவாக்கம்
சுகாதார பாதுகாப்பு விரிவாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்கையில், "ஒவ்வொரு இந்தியருக்கும் அணுகக்கூடிய, மலிவு மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் விரிவுபடுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கம் 6 கோடி குடிமக்களுக்கு கண்ணியம், கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்.
பிரதமரின் இ-டிரைவ் திட்டம் (PM e-DRIVE))
புதுமையான வாகன மேம்பாடு (Innovative Vehicle Enhancement (PM e-DRIVE)) என்ற புதிய திட்டத்திற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்தார். இந்த திட்டம் இந்தியாவில் கார்களை தவிர்த்து மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், ஹைப்ரிட் ஆம்புலன்ஸ்கள், டிரக்குகள் மற்றும் இ-பேருந்துகள் அடங்கும். இந்த திட்டம் 88,500 மின்னேற்றுத் தளங்கள் மற்றும் சோதனை மற்றும் தரப்படுத்தல் வசதிகளையும் ஆதரிக்கும்.
இந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இ-பற்றுச்சீட்டு (e-vouchers) அறிமுகப்படுத்துகிறது. இது மின்சார வாகனம் வாங்கும் நேரத்தில் இணையதளம் மூலம் உருவாக்கப்படும். வாங்குபவர்கள் குறுஞ்செய்தி வழியாக ஆதார் அங்கீகரிக்கப்பட்ட இ-பற்றுச்சீட்டினை (e-vouchers) பெறுவார்கள். அதில் கையொப்பமிட்டு ஊக்கத்தொகையைப் பெற அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அதிகாரி பிரதமரின் இ-டிரைவ் (PM E-DRIVE) இணைய தளத்தில் இ-பற்றுச்சீட்டில் கையொப்பமிட்டு பதிவேற்றுவார். இந்த கையொப்பமிடப்பட்ட இ-பற்றுச்சீட்டு ஊக்கத் தொகைகளுக்கான திருப்பிச் செலுத்துதலைக் கோருவதற்கு அவசியம்.
PM கிராம சதக் யோஜனா
70,125 கோடி ரூபாய் செலவில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) திட்டத்தின் புதிய கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் சாலை வசதி இல்லாத 25,000 குடியிருப்புகளை இணைக்கும் வகையில் 62,500 கி.மீ. சாலைகள் அமைக்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500 அல்லது அதற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட அனைத்து குடியிருப்புகளுக்கும் சாலை இணைப்பை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் 40 கோடி நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் மின்சாரம்
சாலைகள், பாலங்கள், பரிமாற்ற இணைப்புகள் (transmission lines), கயிற்றுவடப் பாதைகள் (ropeways), ரயில்வே அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட நீர்மின் உற்பத்திக்கான உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டம் ₹12,461 கோடி ரூபாய் செலவைக் கொண்டுள்ளது. நீரேற்று சேமிப்பு உட்பட அனைத்து நீர்மின் திட்டங்களுக்கும் பொருந்தும். இது 200 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டத்திற்கு ஒரு மெகாவாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு திட்டமான காலநிலை திட்டம் (‘Mission Mausam), இரண்டு ஆண்டுகளில் ₹2,000 கோடி செலவில், வானிலைக்கு தயாரான மற்றும் காலநிலை-திறன்மிகு பாரதத்தை (climate-smart Bharat) உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.