சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு (Samagra Shiksha Abhiyan program) ஒதுக்கப்பட்ட நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காததால், தமிழ்நாடு அரசிற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே மோதல் மீண்டும் தொடங்கிவிட்டது.
தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 குறித்து மத்திய ஒன்றிய, தமிழ்நாடு மீண்டும் அரசும் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இது குறித்து கடிதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.
ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் என்ன பிரச்சினை?
சமக்ர சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan program) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் (Samagra Shiksha Abhiyan program) கீழ் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்குகிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கான தனியார் பள்ளி சேர்க்கைக்கும் இது உதவுகிறது. 2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் முதல் தவணை ரூ .573 கோடி நிலுவையில் உள்ளது என்று ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். கூடுதலாக, முந்தைய ஆண்டை விட ₹249 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது. முந்தைய ஆண்டுக்கான நான்கு தவணைகளும் வெளியிடப்பட்டதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் என்ன இருக்கிறது?
தேசிய கல்வி தொடர்பாக தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையே கருத்து வேறுபாடுதான் முக்கியப் பிரச்சினை. தற்போதுள்ள பள்ளிகளை தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மாதிரிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் பள்ளிகளை மேம்படுத்தும் (Prime Minister's Schools for Rising India (PM-SHRI)) திட்டத்துடன் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியை ஒன்றிய அரசு இணைத்துள்ளது. பிரதமருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு பத்தியை நீக்கியது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து விதிகளையும் மாநிலங்கள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கோருகிறது.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துடன், தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், பிரதமரின் பள்ளிகளை மேம்படுத்தும் (Prime Minister's Schools for Rising India (PM-SHRI)) பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) தமிழ்நாடு அரசு ஏன் எதிர்க்கிறது?
முந்தைய அதிமுக அரசும், தற்போதைய தமிழகத்தின் திமுக அரசும் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன. மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. குறைந்தது இரண்டு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை. தமிழ்நாட்டில் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இரு மொழி முறையைப் பின்பற்றுகின்றன. இந்தி அல்லது சமஸ்கிருதத்தை சேர்ப்பதில் சிக்கல்கள் உள்ளது. புதிய கல்வி கொள்கையை அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு தனது இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும், தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை ஏற்கனவே தனது சொந்த முயற்சிகள் மூலம் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் (Samagra Shiksha Abhiyan program) நிதியை தேசிய கல்விக் கொள்கை இணக்கத்துடன் இணைப்பது கல்வியில் மாநிலத்தின் அரசியலமைப்பு சுயாட்சியை மீறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான தேசியக் கல்விக் கொள்கை கொள்கையில் சிக்கல்கள் குறித்து திமுக தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதால், கல்விக் கொள்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் மாநிலங்களுக்கு கருத்துகளை கேட்பது முக்கியம். கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே பகிரப்பட்ட பொதுப் பட்டியலில் என்று ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான ஆணையம் தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை வரைவு செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது.