இந்தியாவை புதிய தொழில்முனையும் (start-up) நாடாக உருவாக்குதல் -சிந்தன் வைஷ்ணவ், ஷஷாங்க் ஷா

 தொழில்முனைவோர் முயற்சிகளைத் தொடங்க அதிகமான மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது பொருளாதாரத்திற்கு பெரிய லாபத்தை வழங்கும். 


கடந்த 10 ஆண்டுகளில், மூன்று குறிப்பிடத்தக்க நிகழ்வுகளால் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. முதலாவதாக, ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (Unified Payments Interface (UPI)) முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு டிஜிட்டல் கட்டண அணுகலை மேம்படுத்தியது. இரண்டாவதாக, தொலைத்தொடர்பு புரட்சி பலருக்கு மலிவான தரவை கிடைக்கச் செய்தது. மூன்றாவதாக, தொற்றுநோய் மின் வணிகம் (e-commerce) மற்றும் ஸ்டார்ட்அப் (start-up) நிறுவனங்களின் எண்ணிக்கையை   உயர்த்தியது. இந்த வளர்ச்சியை தக்கவைக்க, இந்தியாவுக்கு நீண்டகாலத் திட்டம் தேவை.  இதன் மூலம் முக்கிய துணை அமைப்புகளை ஒருங்கிணைப்பது சாத்தியமாகும். 


உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு "பிரகாசமான புள்ளியாக" (bright spot) பன்னாட்டு நிறுவனங்கள் பார்க்கின்றன. 2024-ஆம் ஆண்டில், இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.9 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 1 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்ட 60 ஆண்டுகள் ஆனது. ஏழு ஆண்டுகளில் இரண்டாவது டிரில்லியன் எட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது 2019-ஆம் ஆண்டில் அடையப்பட்டது. 2022-ஆம் ஆண்டில், இந்தியா இங்கிலாந்தைவிட  ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. 


இந்தியா இப்போது மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் (start-up) தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது வேறு எந்த நாட்டையும்விட தினமும் அதிகமான நிறுவனங்களை தொடங்குகிறது.  


கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒரு நிறுவனத்தை சேர்க்கப்படுவதைக் கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology (ITs)) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (Indian Institutes of Management (IIMs)) போன்ற உயர்மட்ட உயர் கல்வி நிறுவனங்கள் (higher education institutions (HEIs)) ஆதரவளிக்கின்றன. 


மூலதன செலவினங்களில் அரசாங்கத்தின் கவனம், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகரித்த இணைய அணுகலுடன் இணைந்து, தொடக்க வளர்ச்சியை ஆதரித்துள்ளது. இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான இணைய பயனர்களும், 120 கோடி செல்போன் பயனர்களும் உள்ளனர். 

ஒவ்வொரு புதிய டிஜிட்டல் பயனரும் விவசாயம், மின்-கற்றல் மற்றும் நிதி சேர்க்கை ஆகியவற்றில் புதிய தீர்வுகளுக்கான திறனை வழங்குகிறார்கள். 


இந்த விரிவாக்கம் தொடக்கங்களுக்கான வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவுகளை கணிசமாகக் குறைக்கிறது. இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் (Viksit Bharat) என்ற இலக்கை அடையவும், இந்தியா இந்த வளர்ச்சியை உருவாக்க வேண்டும். 


2023-ஆம் ஆண்டில், இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியது. இந்த நிலை 2070-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உயர்கல்வி முறையை பாதிக்கிறது. தற்போது, 1,168 பல்கலைக்கழகங்கள் மற்றும் 45,473 கல்லூரிகளில் 4.3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி பட்டதாரிகள் பணியில் சேர்கின்றனர். 


இந்த எண்ணிக்கை 2035-ஆம் ஆண்டில் 1.75 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டில் 2.4 கோடியாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி இந்த அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகலாம். செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence (AI)) இயந்திர கற்றல் (Machine Learning), ரோபாட்டிக்ஸ் (Robotics) மற்றும் மெகாட்ரானிக்ஸ் (Mechatronics) போன்ற தொழில் 5.0 தொழில்நுட்பங்களுடன், வழக்கமான வேலைவாய்ப்பு குறையக்கூடும். இது மிகவும் திறமையான ஊழியர்களுக்கான தேவையை அதிகரிக்கும். 


புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்முனைவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். 2017-ஆம் ஆண்டு முதல், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT))  மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் 15.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.


 2023-ஆம் ஆண்டில், இந்த ஸ்டார்ட்அப்கள் 3.9 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கின. இது முந்தைய ஆண்டை விட 46.6% அதிகரிப்பு மற்றும் ஐந்து ஆண்டுகளில் 217.3% அதிகரிப்பு. அமெரிக்காவில், ஸ்டார்ட்அப்கள் 2022-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 37 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 2024-ஆம் ஆண்டின்  இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) அறிக்கையின்படி, ஸ்டார்ட்அப்கள் மற்றும் அவற்றின் கார்ப்பரேட் கூட்டாளர்கள் 2023-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்திற்கு $140 பில்லியன் பங்களித்தனர். 


இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4%. ஒப்பிடுகையில்,  இங்கிலாந்தின் ஸ்டார்ட்அப்கள் £196 பில்லியன் அல்லது உள்நாட்டு உற்பத்தியில் 8.6% பங்களித்தன. இந்தியா வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க  அளவில் உள்ளன. 


 உயர்கல்விக்குப் பிறகு தொழில்முனைவைத் தொடரும் மாணவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தொடக்க பொருளாதாரங்களுக்கு ஒரு முக்கிய வெற்றிக் காரணியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டில் உலகளாவிய கணக்கெடுப்பில், 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 58% மாணவர்கள் வணிகங்களை நடத்துகின்றனர். அமெரிக்காவில், 16% மாணவர்கள் வணிக நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தில், 5% மற்றும் சீனாவில் 4% மாணவர்கள் வணிக நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். 


தற்போது, ஐஐடி பம்பாய் (IIT Bombay) போன்ற சிறந்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளில் 2%க்கும் குறைவானவர்கள் தொழில்முனைவோரைத் தேர்வு செய்கிறார்கள். 5% இந்திய மாணவர்கள் தொழில்முனைவோர் பட்டம் பெற்றால், இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் புதிய தொழில்முனைவோர் உருவாக முடியும். இதனால் சுமார் 50,000 ஸ்டார்ட்அப்கள் உருவாகும்.  


ஒவ்வொரு ஆண்டும் 5.5 லட்சம் நேரடி வேலைகள் மற்றும் 55 லட்சம் மறைமுக மற்றும் கிக் (Gig) வேலைகளை உருவாக்கும்.  இது ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கில் 1% சேர்க்கும்.  இது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து டாடா அளவிலான நிறுவனங்களின் வேலை உருவாக்கத்துடன் ஒப்பிடத்தக்கது. விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய கல்வி, தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் திறனை இது எடுத்துக்காட்டுகிறது. 


இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் வெற்றி அளவீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது, அவர்கள் முக்கியமாக மாணவர்களை அதிக ஊதியம் பெறும் வேலைகளில் வைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். 3E மாதிரியை 3E (Education, Entrepreneurship & Employment)(கல்வி, தொழில்முனைவு & வேலைவாய்ப்பு)  ஆதரிக்க, உயர் கல்வி நிறுவனங்கள் (Higher Education institution (HEI)) மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான முயற்சிகளை உருவாக்குவதையும் அளவிட வேண்டும். இதை அடைவதற்கு ஆராய்ச்சி யோசனைகளை வளர்ப்பதற்கும், வழிகாட்டுவதற்கும், நிதியளிப்பதற்கும் வலுவான கல்வி-தொழில்துறை இணைப்புகள் தேவை. 


அமெரிக்காவில், கல்வி தொழில்நுட்ப பரிமாற்றம் தொழில்துறை உற்பத்தியில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக பங்களித்தது மற்றும் 20 ஆண்டுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியது. அமெரிக்கா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% (ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ((Research & Development (R&D))  முதலீடு செய்கிறது. அதே நேரத்தில் இந்தியா 0.7% மட்டுமே முதலீடு செய்கிறது.  இதில் 10% மட்டுமே உயர் கல்வி நிறுவனங்களில் (Higher Education institution (HEI)) உள்ளது. 


முன்னணி பொருளாதார நாடுகளுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால், உயர்கல்வியை மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக பார்க்க வேண்டும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் முறையான அணுகுமுறை மூலம் தொழில்முனைவோருடன் உயர் கல்வியை ஒருங்கிணைப்பது, மற்றும் கல்வி-தொழில்துறை இடைமுகங்களை வலுப்படுத்துவது ஆகியவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 


காலத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி, தொழில்முனைவோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு நேர்கோட்டு வளர்ச்சி அணுகுமுறையிலிருந்து ஒரு ஒருங்கிணைந்த மாதிரியை நோக்கி இந்தியா செல்ல வேண்டும். 


வைஷ்ணவ் அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநர், ஷா நிதி ஆயோக்கின் மூத்த நிபுணர்; ஆஷிஷ் பாண்டே , ரோஹித் குப்தா ஏஐஎம்மில் திட்டத் தலைவராகவும் உள்ளனர்.



Original article:

Share: