தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பைப் பயன்படுத்துதல் -எலிசபெத் ஃபௌரே

 தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. இது கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்முயற்சிகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 12-ஆம் தேதி தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் தினமாக (South-South Cooperation (SSC)) கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வடக்கு-தெற்கு மாதிரியைத் தாண்டி, நாடுகளுக்கிடையேயான வளர்ச்சி கூட்டாண்மைக்கான புதிய கட்டமைப்பை முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை உருவாக்கியது. 


1955-ஆம் ஆண்டு பாண்டுங்கில் நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசிய மாநாட்டில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பு என்ற கருத்து தொடங்கியது. இந்த மாநாடு 1961-ல் அணிசேரா இயக்கத்தை (Non-Aligned Movement) உருவாக்க வழிவகுத்தது. இதன் விளைவாக 1964-ல் குழு 77 (G-77) உருவாக்கப்பட்டது. G-77 முக்கியமாக 1960-கள் மற்றும் 1970-களில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை ஊக்குவித்தது. 


காலநிலை மாற்றம், மோதல் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் தற்போதைய முக்கியத்துவத்தை இந்த கட்டுரை வலியுறுத்துகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் உணவு பாதுகாப்பின்மை காலங்களில். இது உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் தீர்வுகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உள்ளடக்கிய, சூழல் சார்ந்த, நிபந்தனையற்ற மற்றும் உள்நாட்டில் நிர்வகிக்கப்படும் அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறது.

 

உலக உணவுத் திட்டம் (United Nations World Food Programme (WFP)) தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) மூலம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதை இந்த அணுகுமுறை குறிக்கிறது. 


ஒரு கூட்டு வளர்ச்சி ஒப்பந்தம் 


கடந்த பத்தாண்டுகளில், உலக அளவில் தெற்கில் உள்ள நாடுகள், 2030 இலக்கை அடைய புதிய தளங்கள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து, உலகளாவிய ஆளுகை மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு (South-South Cooperation (SSC)) சர்வதேச ஒத்துழைப்பின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மறுவடிவமைக்க உதவுகிறது. 


இந்த அணுகுமுறை வளரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது, பகிரப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைய திறன்கள் மற்றும் வளங்களைப் பகிர்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. வளர்ந்த நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடனும் அவை கூட்டு சேர்ந்துள்ளன. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண  ஒத்துழைப்பின் செயல்பாடுகள்  உலக அளவில் வளர்ச்சிக்கான நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது. 


தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு வலுவானது. ஏனெனில் அது பரஸ்பர நன்மை, ஒவ்வொரு நாட்டின் தேசிய இறையாண்மைக்கு மரியாதை மற்றும் நிபந்தனையற்ற தன்மை ஆகியவற்றின் அடித்தளமாகும். இந்த அணுகுமுறை நாடுகள் அதிகாரம் பெற்றதாக உணரவும், அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கவும், ஒருவரிடமிருந்து ஒருவர் படம் கற்றுக்கொள்ளவும், வலுவான மற்றும் நிலையான சமூகங்களுக்கு வழிவகுக்கும்.

 

உலக உணவுத் திட்டம் (United Nations World Food Programme (WFP))  மற்றும் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)):


 2019 முதல், உலக உணவுத் திட்டம் பல நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் தெற்கு-தெற்கு அறக்கட்டளை நிதியும் இதில் அடங்கும். இந்தியா-ஐ.நா மேம்பாட்டு கூட்டாண்மை நிதி மற்றும் வறுமை மற்றும் பட்டினி ஒழிப்புக்கான இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா வறுமை மற்றும் பசி ஒழிப்பு (India, Brazil and South Africa Facility for Poverty and Hunger Alleviation (IBSA Fund)) ஆகியவை இதில் அடங்கும். உலக உணவுத் திட்டம் கீழ் நிர்வகிக்கப்படும் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு அறக்கட்டளை நிதி, மொத்தம் $9.75 மில்லியன் ஆகும்.

நாடுகளிடையே ஒத்துழைப்பில் ஆர்வம் அதிகரித்து வருவதால், WFP SSTC மூலம் அரசாங்கங்களுக்கு தனது ஆதரவை அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், 60 WFP வருடாந்திர நாடுகளின் 85 அறிக்கைகள் தெற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. இது 2021 மற்றும் 2022 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இது தேசிய திறன்களை வலுப்படுத்துவதில் SSTC-ன் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. 


  இந்த ஈடுபாடு வளரும் நாடுகள் அறிவு, அனுபவங்கள், திறன்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை நேரடியாக பரிமாறிக் கொள்வதை உள்ளடக்கியது. இந்த செயல்முறை பெரும்பாலும் ஒரு நன்கொடையாளர் அல்லது உலக உணவுத் திட்டம் போன்ற ஒரு அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.  இந்த முக்கோண ஒத்துழைப்பில் நிதி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி போன்ற பல்வேறு வகையான ஆதரவு அடங்கும். 


ஆதரவின் குறிப்பிட்ட பகுதிகள்: சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வலைகள், ஊட்டச்சத்து மற்றும் உணவு மேம்பாடு, சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களை சந்தைகளுடன் இணைத்தல், கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை நிர்வகித்தல், பேரிடர் அபாயக் குறைப்பு,காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப அவசரநிலைக்குத் தயாராகுதல் மற்றும் பதிலளிப்பது. இந்த முயற்சிகள் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் கள இருப்பைப் பயன்படுத்தி, உலக உணவுத் திட்டத்தின் மூலம் 70-க்கும் மேற்பட்ட தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புரவலன் அரசாங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முன்முயற்சிகள், உலகெங்கிலும் உள்ள 69 நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவியுள்ளன.

 



இந்தியாவின் தலைமைத்துவ பங்கு

 

தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பில் ((South-South and Triangular Cooperation (SSTC)) இந்தியா பல குறிப்பிடத்தக்க முயற்சிகளுடன் முன்னணியில் உள்ளது. பான்-ஆப்பிரிக்கா மின்னணு நெட்வொர்க் திட்டம் (Pan-African e-Network Project), இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா நிதியம் மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance (ISA)) ஆகியவை இதில் அடங்கும். 


இந்த முன்முயற்சிகள் தனது நிபுணத்துவம் மற்றும் வளங்களை மற்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன. அவை கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. 


இந்தியா 1947 முதல் தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பில் ஈடுபட்டு, சுமார் $107 பில்லியன் முதலீடு செய்கிறது. 


வலுவான கொள்கைகள், திட்டங்களுடன் உணவு மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு வலைகளில் ஒன்றாகும், இது ஒரு பில்லியன் மக்களை உள்ளடக்கியது மற்றும் உணவு வலுவூட்டலுக்கான தேசிய திட்டத்தையும் (national program for food fortification) கொண்டுள்ளது. 


இந்தியா பொது உணவு விநியோகத்திற்கான விநியோகச் சங்கிலியை மேம்படுத்தியுள்ளது மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வெற்றிகள் மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோக சங்கிலி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது.


2022-ஆம் ஆண்டில், உலக உணவுத் திட்டம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் உணவுப் பாதுகாப்பு குறித்த பரிமாற்றத்தை எளிதாக்கியது. இது நேபாள அதிகாரிகளுக்கு இந்தியாவின் உணவு உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி அறிய அனுமதித்தது. இதன் விளைவாக, நேபாளம் தனது உணவு முறைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மாதிரியாக உணவுக்கான உரிமைகள் (Nepal adopted India's Rights to Food (RtF)) Act) சட்டத்தை ஏற்றுக்கொண்டது. நேபாளத்தின்  உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது மற்றும் பெரும்பாலான மாகாண அரசாங்கங்கள் 2023-24 நிதியாண்டிற்கான தங்கள் திட்டங்களில் உணவு அமைப்புகள் நடவடிக்கைகளை சேர்க்க வழிவகுத்தது. 


தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பை (South-South and Triangular Cooperation (SSTC)) வலுப்படுத்த, பல அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்: 


 1. புதுமையான நிதி வழிமுறைகள் மற்றும் பல்வகைப்பட்ட நிதி ஆதாரங்கள். 


2. பங்கேற்கும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுதல்


3. சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் புதுமைகளைப் பகிர்தல். 


4. சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார அம்சங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்தல். 


உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் இப்போது உலகளாவிய நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது சர்வதேச ஒத்துழைப்பின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பு (South-South and Triangular Cooperation (SSTC)) மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். புதிய தளங்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்கு 2030 கொள்கை இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.


எலிசபெத் ஃபௌரே, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் (United Nations World Food Programme) பிரதிநிதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய இயக்குநர்.



Original article:

Share: