கல்வி நிறுவனங்களுக்குள் அதிநவீன ஆராய்ச்சி உடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜூலை 23, 2024 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (Anusandhan National Research Foundation (ANRF)) தொடங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியாவின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடித்தளத்தை அமைத்தது. இது ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் தொடங்க உள்ளது.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) சட்டம், 2023 இன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிக்கு நிதியளிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக உள்கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா மற்றும் இஸ்ரேலின் முன்மாதிரிகளைப் பின்பற்றி, இந்தியாவை மேம்பட்ட சமூகமாக மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முக்கிய குறிக்கோள், மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு இடைவெளியை நிவர்த்தி செய்வதாகும். அங்கு 95 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், ஆராய்ச்சி வசதிகள் பெரும்பாலும் இல்லை. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, நிதி வழங்கலை சீராக்கவும், அதிகாரத்துவ தடைகளைக் குறைக்கவும், தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 50,000 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு 4,000 கோடி ரூபாயை அளிக்கும். மீதமுள்ள நிதி தொழில்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருந்து பெறப்படுகிறது. இது அமெரிக்க மாதிரியைப் போன்றது.
அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (US National Science Foundation (NSF)) மாதிரியாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) கல்வி நிறுவனங்களில் அதிநவீன ஆராய்ச்சி சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், கல்வித்துறை மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) இந்தியாவில் இதேபோன்ற கட்டமைப்புகளை உருவாக்க முயல்கிறது.
இது கல்வி கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இருப்பதை உறுதி செய்கிறது மற்றும் வணிகமயமாக்க தயாராக உள்ள தொழில்நுட்பத்திலிருந்து தொழில்துறை பயனடைகிறது.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) தொடக்கம் இந்தியாவை அறிவுசார் பொருளாதாரமாக மாற்ற முற்படும் தேசிய கல்விக் கொள்கை ( National Education Policy (NEP)) 2020 இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இந்தியாவில் 1,168 பல்கலைக்கழகங்கள் மற்றும் 45,473 கல்லூரிகளில் 4.3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர்.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிதியுதவி குறைந்த நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு இடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்தல் மற்றும் தரமான ஆராய்ச்சி உள்கட்டமைப்புக்கான அணுகலை மேம்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
தற்போது, பாதுகாப்பு, விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் தனித்தனி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and development (R&D) ) திட்டங்களை செயல்படுத்துகின்றன.
இது திறமையின்மைக்கு வழிவகுக்கிறது. வளங்களை திறம்பட பயன்படுத்தவும், துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை சீரமைக்கவும் மற்றும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படும்.
அரசு சாரா நிதியை சார்ந்து இருப்பது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (ANRF) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். தொழில்துறை ஈடுபாடு ஆராய்ச்சி சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் நல்ல ஆராய்ச்சியை ஆதரிக்க முடியும். இந்த அணுகுமுறை பெரும்பாலும் புதுமைகளைத் தடுக்கும் நிதி தாமதங்கள் மற்றும் சிக்கலான ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) குறைந்த தொழில்நுட்ப தயார்நிலை நிலைகளை (Technology Readiness Levels (TRLs) ) ஆதரிப்பதில் கவனம் செலுத்தும். அங்கு கல்வி நிறுவனங்கள் குறைந்த மூலதன தேவைகள் மற்றும் அதிக தோல்வி விகிதங்களுடன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அதிக தொழில்நுட்ப தயார்நிலை ஆராய்ச்சி மற்றும் ஆழமான தொழில்நுட்ப தொடக்கங்களுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் குறித்த அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முயற்சிகளை பூர்த்தி செய்கிறது. இந்த முயற்சிகள் அடிப்படை தொழில்துறை சார்ந்த வளர்ச்சி வரை ஆராய்ச்சியின் முழு நிலையையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது ஒரு விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and development (R&D) ) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.
ஒட்டுமொத்தமாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) இந்தியாவின் ஆராய்ச்சி திறன்களுக்கு ஒரு பெரிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலமும், இந்தியாவின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) இந்தியாவை அறிவுசார் பொருளாதாரமாக நிலைநிறுத்துவதற்கும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் திறனைக் கொண்டுள்ளது.
அஜய் சௌத்ரி, கட்டுரையாளர், தலைவர், தேசிய குவாண்டம் மிஷன்.